Biblia Todo Logo
Bìoball air-loidhne

- Sanasan -




யோவானு 21:15 - Moundadan Chetty

15 ஆக்க திந்து களிவதாப்பங்ங ஏசு சீமோன்பேதுறினகூடெ, “யோனாவின மங்ஙனாயிப்பா சீமோனே ஈக்கள எல்லாரினகாட்டிலும் நீ நன்ன கூடுதலு சினேகிசுதுட்டோ?” ஹளி கேட்டாங்; அவங், “ஹூம் எஜமானனே! நா நின்னமேலெ சினேக பீத்துஹடதெ ஹளி நினங்ங கொத்துட்டல்லோ!” ஹளி ஹளிதாங்; ஏசு அவனகூடெ, “நன்ன ஆடுமக்கள ஹாற இப்பாக்கள ஒயித்தாயி நோடிக!” ஹளி ஹளிதாங்.

Faic an caibideil Dèan lethbhreac




யோவானு 21:15
49 Iomraidhean Croise  

நன்னகாட்டிலி அப்பனோ, அவ்வெதோ கூடுதலு சினேகிசாவாங் நனங்ஙபேக்காயி ஜீவுசாவனாப்புது ஹளி ஹளத்தெ யோக்கிதெ உள்ளாவனல்ல; அதே ஹாற தன்ன மகளோ, மங்ஙனோ நன்னகாட்டிலி கூடுதலு சினேகிசாக்களும் நனங்ஙபேக்காயி ஜீவுசாக்க ஹளி ஹளத்தெ யோக்கிதெ உள்ளாக்களல்ல.


ஏசு அவனகூடெ, “யோனாவின மங்ஙனாயிப்பா சீமோனு, நீ பாக்கியசாலியாப்புது; ஈ காரெ நினங்ங மனுஷம்மாரு ஹளிதந்துது அல்ல; சொர்க்காளெ இப்பா நன்ன அப்பனாப்புது இதன நினங்ங ஹளிதந்துது.


ஈ பாவப்பட்டாக்களாளெ ஒப்புறினும் நிசார ஹளி பிஜாருசுவாடா; ஈக்காககுள்ளா தூதம்மாரு சொர்க்காளெ நன்ன அப்பனப்படெ ஏகோத்தும் இத்தீரெ ஹளி நா நிங்களகூடெ ஹளுதாப்புது.


அம்மங்ங பேதுரு ஏசினகூடெ, “எல்லாரும் நின்ன புட்டு ஓடிஹோதங்ஙும், நா நின்ன புட்டு ஹோகெய்ங்” ஹளி ஹளிதாங்.


அம்மங்ங பேதுரு, “நா நின்னகூடெ தென்னெ சாயிவத்தெ வேண்டிபந்நங்ஙும் பேக்காதில்லெ, நின்ன கொத்தில்லெ ஹளி ஒரிக்கிலும் ஹளெங்” ஹளி ஹளிதாங்; அம்மங்ங மற்றுள்ளா சிஷ்யம்மாரு எல்லாரும் அந்த்தெ தென்னெ ஹளிரு.


அம்மங்ங பேதுரு ஏசினகூடெ, “எல்லாரும் ஓடிஹோதங்ஙும், நா நின்ன புட்டு ஓடிஹோகெய்ங்” ஹளி ஹளிதாங்.


சிண்ட ஆடுகூட்டத ஹாற இப்பாக்களே! நிங்க அஞ்சுவாட. ஏனாக ஹளிங்ங சொர்க்காளெ இப்பா நிங்கள அப்பனாயிப்பா தெய்வ நிங்கள சினேகிசுதுகொண்டு, தன்ன ராஜெத நிங்காக தக்கு.


எந்நங்ங, நீ நம்பிக்கெயாளெ தளராதெ இருக்கு ஹளிட்டு, நா நினங்ங பேக்காயி தெய்வதகூடெ பிரார்த்தனெ கீதிங்; நீ மனசுதிரிஞ்ஞு பந்துகளிஞட்டு நன்ன நம்பா மற்றுள்ளாக்க எல்லாரினும் தைரெபடுசு ஹளி ஹளிதாங்.


எந்தட்டு அவங், சீமோனின ஏசினப்படெ கூட்டிண்டுஹோதாங். ஏசு அவன நோடிட்டு, “நீ யோனாவின மங்ங சீமோனல்லோ? எந்நங்ங இனி நின்ன கேபா ஹளி ஊளுதாயிக்கு” ஹளி ஹளிதாங். கேபா ஹளிங்ங பாறெக்கல்லு ஹளி அர்த்த.


அம்மங்ங பேதுரு ஏசினகூடெ, “எஜமானனே! ஏனகொண்டு நா ஈக நின்னகூடெ பொப்பத்தெ பற்றாத்துது? நினங்ங பேக்காயி நா நன்ன ஜீவகூடி தப்பிங்” ஹளி ஹளிதாங்.


ஏனாக ஹளிங்ங, நா நன்ன அப்பனப்படெந்த பந்நாவனாப்புது ஹளி நிங்க நம்புதுகொண்டும், நன்னமேலெ சினேக பீத்திப்புதுகொண்டும், நன்ன அப்பனாயிப்பா தெய்வும் நிங்கள சினேகிசீனெ.


ஏசு ஆக்களகூடெ, “கத்தலுகளிப்பத்தெ பரிவா!” ஹளி ஹளிதாங். இது நங்கள எஜமானனாப்புது ஹளி ஆக்க மனசிலுமாடித்துதுகொண்டு சிஷ்யம்மாராளெ ஒப்புரும் ஏசினகூடெ “நீ ஏற?” ஹளி கேட்டுபில்லெ.


அம்மங்ங, ஏசு கூடுதலாயிற்றெ சினேகிசா சிஷ்யங், “அல்லி நிந்திப்புது நங்கள எஜமானு தென்னெயாப்புது” ஹளி ஹளிதாங். அது கேளதாப்பங்ங சீமோன்பேதுரு, களிச்சு பீத்தித்தா துணி எத்தி அரேக கெட்டிட்டு கடலாளெ சாடிதாங்.


ஏசு ஆக்களகூடெ, “தெய்வ நிங்கள அப்பனாயித்தங்ங, நன்னமேலெ நிங்காக சினேக உட்டாக்கு; நா தெய்வதப்படெந்த ஆப்புது பந்துது; அதும் நன்ன சொந்த இஷ்டப்பிரகார பந்துதல்ல, தெய்வ நன்ன ஹளாய்ச்சட்டு பந்துதாப்புது.


அதுகொண்டு தெய்வ தன்ன சொந்த சோரெயாளெ நேடிதா தன்ன சபெத மேசத்தெ, மேல்நோட்டக்காறாயிற்றெ பரிசுத்த ஆல்ப்மாவு நிங்கள நிருத்திப்புது கொண்டு நிங்களும் ஜாகர்தெயாயிற்றெ இத்தணிவா; தன்ன ஆடின ஹாற இப்பா ஜனாதும் ஜாகர்தெயாயிற்றெ நோடியணிவா.


நா ஹோயிகளிவங்ங, துருபதேச கீவா செல ஆள்க்காரு நிங்கள எடேக ஹுக்கி சபெத நாசமாடுரு; ஆக்க, ஆடுகூட்டத கெதருசா செந்நாயெத ஹாற உள்ளா துஷ்டம்மாராப்புது.


தெய்வதமேலெ நிங்காக நம்பிக்கெ உள்ளா ஹாற மற்றுள்ளாக்காக கூடுதலு நம்பிக்கெ உட்டாகஆயிக்கு; அதுகொண்டு ஆக்க கீவா காரெத பீத்து, ஆக்கள குற்றக்காரு ஹளி தீர்ப்பு ஹளுவாட.


அதுமாத்தற அல்ல, ஏசின நம்பி ஜீவுசா ஜீவிதாளெ ஒறப்புள்ளாக்களாயிப்பா நங்க, நங்காக மாத்தற திருப்தியாயிற்றெ நெடியாதெ, ஒறப்பில்லாத்தாக்கள கொறவின பொருத்து நெடீக்கு.


மனசொறப்பில்லாத்த அவங், தெற்று கீவத்தெ நீனே காரண ஆப்புதாப்புது; நீ அந்த்தெ கீவுதுகொண்டு, கிறிஸ்து அவங்ஙபேக்கயி சத்துதன பல அவங்ங கிட்டாதெ மாடுதாப்புது ஹளிட்டுள்ளுது நீ அருதாக.


கிறிஸ்து ஏசினகூடெ ஜீவுசாக்க, சுன்னத்து கீவுதோ, கீயாதிப்புதோ அதொந்தும் அல்ல பிரதான; கிறிஸ்து ஏசின நம்புதுகொண்டு மற்றுள்ளாக்களகூடெ நங்க காட்டா சினேக தென்னெயாப்புது பிரதானப்பட்டுது.


அதுகொண்டு இஞ்ஞி நிங்க பிவற இல்லாத்த சிப்பி மக்கள ஹாற இப்பத்தெ பாடில்லெ; எத்தாக காற்றடிச்சாதெயோ அத்தாக சாயிவா மரத ஹாற, நிங்க தெய்வகாரெயாளெயும், லோகக் காரெயாளெயும் நெடது, அத்தாகும் இத்தாகும், இல்லாதெ ஆப்பத்தெபாடில்லெ; அந்த்தெ இத்தங்ங, நங்கள ஏமாத்தி பட்டெதெரிசாக்கள தந்தறதாளெ ஹோயி குடுங்ஙத்தெ ஆக்கு.


நங்கள எஜமானாயிப்பா ஏசுக்கிறிஸ்தினமேலெ மாறாத்த சினேக பீத்திப்பா நிங்க எல்லாரிகும் தெய்வ கருணெ காட்டட்டெ; ஆமென்.


நித்தியமாயிற்றுள்ளா ஒடம்படி சோரெகொண்டு, ஆடுகூட்டத ஹாற இப்பா நங்கள மேசாவனும், நங்கள எஜமானுமாயிப்பா ஏசின, சத்தாக்கள எடநடுவிந்த ஜீவோடெ ஏள்சிது சமாதான தப்பா தெய்வமாப்புது.


தெய்வாக மறெவாயிற்றெ உள்ளுது ஒந்தும் இல்லெ; தெய்வத கண்ணிக எல்லதும் காணக்கெ; அதுகொண்டு நங்க ஜீவிதாளெ கீவா எல்லா காரேகும் தெய்வதகூடெ கணக்கு ஹளுக்கு.


இதுவரெ நிங்க தெய்வத கண்டுபில்லெ, எந்நங்ஙும் தெய்வத சினேகிசீரெ; தெய்வத காணாதெ இத்தட்டும் தன்னமேலெ நம்பிக்கெ பீத்து, தெய்வத பெகுமானிசி, அளவில்லாத்த சந்தோஷ உள்ளாக்களாயி இத்தீரெ.


சிப்பி மைத்தி ஹாலுகுடிப்பத்தெ கொதிப்பா ஹாற, ஹொசா ஜீவிதாக அத்தியாவிசெமாயிற்றுள்ளா ஹாலின ஹாற இப்பா வஜனத கேளத்தெ ஆசெ உள்ளாக்களாயி இரிவா.


பண்டு, நிங்க பட்டெ தெற்றிதா ஆடுகூட்டத ஹாற ஜீவிசிண்டித்துரு; எந்நங்ங இந்து, நிங்கள ஹொசா ஜீவிதாக பேக்காத்து ஒக்க தந்து, ஒயித்தாயி நெடத்தா மேசாவனப்படெ திரிச்சுபந்துரு.


தெய்வ, முந்தெ நங்களமேலெ சினேக பீத்திப்புது கொண்டாப்புது நங்களும் தம்மெலெ தம்மெலெ சினேக காட்டி ஜீவுசுது.


ஏசு தென்னெயாப்புது சாவினாளெ குடுங்ஙாதெ நன்ன காப்பத்துள்ளா கிறிஸ்து ஹளி நம்பி ஜீவுசா எல்லாரும் தெய்வத மக்களாப்புது; ஆக்க தெய்வதமேலெ சினேக பீத்திப்பா ஹேதினாளெ, தெய்வதகொண்டு ஹுட்டிதா எல்லாரினும் சினேகிசுரு.


அவள மக்கள கொந்து ஒடுக்குவிங்; அம்மங்ங ஹிருதயதும், மனசின ஒளெயெ இப்புதனும் அறிவா தெய்வ நானாப்புது ஹளி, எல்லா சபெக்காரும் அருதம்புரு; நிங்களாளெ ஒப்பொப்பங்ஙும், நிங்கள பிறவர்த்தி பிரகார உள்ளா பலத நா தப்பிங்.


Lean sinn:

Sanasan


Sanasan