13 ஈ வாக்கு கேளதாப்பங்ங பிலாத்து ஏசின ஹொறெயெ கூட்டிண்டுபந்ந; எந்தட்டு, கல்தள ஹளா சலதாளெ இப்பா ஞாயாதிபதி குளிவா சலாளெ குளுதாங்; ஆ சலாக எபிரெய பாஷெயாளெ கபத்தா ஹளி ஹெசறும் உட்டாயித்து.
பிலாத்து ஞாயவிதிப்பா சலாளெ குளுதிப்பங்ங, அவன ஹிண்டுரு அவனப்படெ ஒந்து ஆளா ஹளாய்ச்சட்டு, “சத்தியநேரு உள்ளா ஆ மனுஷன நீ ஒந்தும் கீவாடா; ஆ மனுஷனபற்றி நென்னெ ராத்திரி நா கனசு கண்டிங்; நனங்ங ஒறக்கே பந்துபில்லெ பயங்கர கஷ்ட ஆயிஹோத்து” ஹளி ஹளத்தெ ஹளிதா.
அதுகொண்டு நிங்க தெய்வாக மாத்தற அஞ்சி நெடிவா. ஏனாக ஹளிங்ங, சரீரத கொந்து, நரகதாளெ தள்ளத்துள்ளா அதிகார தெய்வாக மாத்றே ஒள்ளு. அதுகொண்டு நிங்க தெய்வாக மாத்ற அஞ்சி ஜீவிசிவா!
ஏசு தானே குரிசின ஹொத்தண்டு தெலெஓடின ஹாற இப்பா சலாக ஹோதாங்; ஆ சலாக எபிரெய பாஷெயாளெ கொல்கொதா ஹளிட்டுள்ளா ஹெசறு உட்டாயித்து.
ஏசின குரிசாமேலெ தறெச்சா சல பட்டணத அரியெ இத்தாஹேதினாளெ யூதம்மாராளெ ஒந்துபாடு ஆள்க்காரு அதன பாசிரு; ஆ ஹலெயாளெ எளிதிது எபிரெய, கிரீக்கு, லத்தீன் ஹளா பாஷெயாளெ ஒக்க ஆயித்து.
பிலாத்து ஈ வாக்கு கேட்டு அஞ்சியுட்டாங்.
எருசலேமாளெ ஆடுபாகுலு ஹளிட்டு ஒந்து பாகுலு ஹடதெ; அதன அரியெ எபிரெய பாஷெயாளெ பெதஸ்தா ஹளி ஹெசறுள்ளா ஒந்து கொள உட்டாயித்து; அதன சுத்தூடு ஐது சிண்ட, சிண்ட மண்டாக உட்டாயித்து.
அதங்ங, பேதுரும் யோவானும் ஆக்களகூடெ ஹளிது ஏன ஹளிங்ங, “தெய்வத வாக்கு கேட்டு நெடிவுதோ, நிங்கள வாக்கு கேட்டு நெடிவுதோ, ஏதாயிக்கு செரி? நிங்களே சிந்திசிநோடிவா.