Biblia Todo Logo
Bìoball air-loidhne

- Sanasan -




யோவானு 13:8 - Moundadan Chetty

8 பேதுரு ஏசினகூடெ, “நீ ஒரிக்கிலும் நன்ன காலு கச்சத்தெ பாடில்லெ” ஹளி ஹளிதாங்; அம்மங்ங ஏசு அவனகூடெ, “நா நின்னகாலின கச்சித்தில்லிங்ஙி, நினங்ங நன்னகூடெ பெந்த இல்லாதெ ஆயிண்டுஹோக்கு” ஹளி ஹளிதாங்.

Faic an caibideil Dèan lethbhreac




யோவானு 13:8
28 Iomraidhean Croise  

அம்மங்ங பேதுரு ஏசின தனிச்சு ஊது கொண்டுஹோயிட்டு, “குரூ! தெய்வ நினங்ங அந்த்தெ ஒந்தும் பருசாதெ இறட்டெ; அந்த்தெ ஒந்தும் நினங்ங சம்போசாதெ இறட்டெ” ஹளி ஏசினகூடெ ஜாள்கூடிதாங்.


அவங் ‘நனங்ங பற்ற’ ஹளி ஹளிதாங்; எந்நங்ஙும் கொறச்சுநேர களிவங்ங அவங்ங பயங்கர மனசங்கட உட்டாத்து; எந்தட்டு அவங் மனசுமாறி முந்திரி தோட்டாக கெலசகீவத்தெ ஹோதாங்.


அம்மங்ங பேதுரு ஏசினகூடெ, “எல்லாரும் நின்ன புட்டு ஓடிஹோதங்ஙும், நா நின்ன புட்டு ஹோகெய்ங்” ஹளி ஹளிதாங்.


அம்மங்ங பேதுரு, “நா நின்னகூடெ தென்னெ சாயிவத்தெ வேண்டிபந்நங்ஙும் பேக்காதில்லெ, நின்ன கொத்தில்லெ ஹளி ஒரிக்கிலும் ஹளெங்” ஹளி ஹளிதாங்; அம்மங்ங மற்றுள்ளா சிஷ்யம்மாரு எல்லாரும் அந்த்தெ தென்னெ ஹளிரு.


அந்த்தெ ஏசு, சீமோன்பேதுறினப்படெ பந்நா; அம்மங்ங அவங் ஏசினகூடெ, “எஜமானனே! நீ! நன்ன காலு கச்சத்தெ பொப்புதோ?” ஹளி கேட்டாங்.


அம்மங்ங சீமேன்பேதுரு, “எஜமானனே! அந்த்தெ ஆதங்ங, நன்ன காலுமாத்தற அல்ல நன்ன கையும், தெலெயும் ஒக்க கச்சு” ஹளி ஹளிதாங்.


ஏசு அவனகூடெ, “நா ஒறப்பாயிற்றெ ஹளுதாப்புது, நீரினாளெயும், பரிசுத்த ஆல்ப்மாவு தப்பா சக்தியாளெயும் ஹிந்திகும் ஹுட்டிதில்லிங்ஙி, அவனகொண்டு தெய்வராஜெக ஹோப்பத்தெபற்ற.


நீ தாமச மாடாதெ பிரிக எத்து எஜமானின கும்முட்டாக; தெய்வ நின்ன ஷெமிப்பத்தெபேக்காயி ஸ்நானகர்ம ஏற்றெத்திக ஹளி ஹளிதாங்.


எந்நங்ங, நிங்களாளெ செலாக்க இந்த்தெ ஒக்க தென்னெ ஜீவிசிண்டித்துது? எந்நங்ங ஈக நிங்கள, தெய்வ அந்த்தல துர்சொபாவந்த கச்சி, சுத்தி உள்ளாக்களாயி மாற்றித்தல்லோ! எந்த்தெ ஹளிங்ங, நிங்க கீதா துர்புத்திகுள்ளா சிட்ச்செத ஒக்க, ஏசுக்கிறிஸ்து ஏற்றெத்திதாங்; அதுகொண்டாப்புது, நிங்காக நீதிமான்மாராயிற்றெ ஆதுது; அதுகொண்டாப்புது பரிசுத்த ஆல்ப்மாவின சகாயதாளெ தெய்வதகூடெ நிங்காக ஒந்து ஹொசா பெந்தம் உட்டாதுது.


சரீர தெலெதகூடெ சேர்ந்நு, ஒந்நொந்து பாகம் ஒந்தாயி சேர்நிப்பா ஹாற நேராயிற்றெ எல்லாரிகும் தெலெயாயிற்றெ ஏசுக்கிறிஸ்தின அங்ஙிகரிசி தெய்வதகூடெ பெந்த உள்ளாக்களாயி ஜீவிசிவா; அதன புட்டட்டு ஒந்நங்ஙும் உபகார இல்லாத்த சொந்த பிஜாரதாளெயும், கனசு கண்டுதன பீத்தண்டும், தாழ்மெ உள்ளாக்கள ஹாற நடிச்சண்டு, தெய்வ உட்டுமாடிதா தூதம்மாரா கும்முட்டண்டும் நெடிவாக்களகூடெ கூடி ஜீவிசிதுட்டிங்ஙி, தெய்வ நிங்காகபேக்காயி பீத்திப்பா சம்மான கிட்டாதெ (அனுக்கிரக) ஆயிண்டுஹோக்கு.


எந்நங்ங தெய்வ நங்கள ரெட்ச்சிசிது நங்க கீதா ஒள்ளெ பிறவர்த்தி கொண்டல்ல; தன்ன கருணெ கொண்டாப்புது நங்கள ரெட்ச்சிசிது; தாங் நங்கள தெற்று குற்றத கச்சுது கொண்டும் பரிசுத்த ஆல்ப்மாவுகொண்டு நங்கள ஹொஸ்துமாடுது கொண்டும் ஆப்புது நங்கள ரெட்ச்சிசித்து.


அதுகொண்டு, தெற்று குற்ற கீதும் ஹளிட்டுள்ளா மனசாட்ச்சி மாறத்தெபேக்காயி, கிறிஸ்தின சோரெ தளுத்தா மனசோடெயும், தெளுத நீரினாளெ கச்சிதா சரீரத்தோடெயும், எதார்த்த மனசோடும், ஒறெச்ச நம்பிக்கெயோடும் நங்க தெய்வதப்படெ ஹோக்கெ.


ஈ கிறிஸ்து தென்னெயாப்புது சத்திய சாட்ச்சியாயி இப்பாவாங்; சத்துஹோதா எல்லாரின எடெந்தும் முந்தெ ஜீவோடெ எத்தாவனும், பூமியாளெ இப்பா எல்லா ராஜாக்கம்மாரிகும் மேலெ தலவனாயிற்றெ இப்பாவனும் அவங் தென்னெயாப்புது; அவங், நங்களமேலெ சினேக பீத்திப்புதுகொண்டு, தன்னதென்னெ சாவிக எல்சிகொட்டட்டு, நங்கள எல்லாரின தெற்று குற்றந்தும் ஹிடிபுடிசிதாங்.


அதங்ங நா, “எஜமானனே! அது நினங்ங அறியக்கெயல்லோ?” ஹளி ஹளிதிங்; அதங்ங அவங், “ஈக்கொக்க வளரெ பயங்கர உபத்தரந்த கடதுபந்தாக்களாப்புது; ஆடுமறியாயிப்பாவன சோரெயாளெ ஆக்கள துணித கச்சி பொளிசிதாக்களாப்புது” ஹளி ஹளிதாங்.


Lean sinn:

Sanasan


Sanasan