5 அந்த்தெ கூட்டிபீத்தா சொத்து மொதுலாளெ சுகமாயிற்றெ திந்து குடுத்து கொளுத்தட்டு இத்தீரெ; ஒள்ளெ கொளுத்த ஆடின பெட்டத்தெ கொண்டுஹோப்பா ஹாற, தெய்வ ஒந்துஜின நிங்காகும் சிட்ச்செ தக்கு.
ஒந்து ராஜெயாளெ ஒந்து ஹணகாறங் இத்தாங்; அவங் ஏகளும் ஒள்ளெ பட்டு உடுப்பும் ஹைக்கி ஒயித்தாயி திந்து குடுத்து ஜீவிசிண்டித்தாங்.
அதங்ங அப்ரகாமு, மங்ங! நீ பூமியாளெ இத்தா காலதாளெ ஒக்க சுகஆயி ஜீவிசிதெ; எந்நங்ங லாசரு அல்லி இப்பட்ட ஒந்துபாடு கஷ்டத சகிச்சு ஜீவிசிண்டித்தாங்; அதன ஒம்மெ நீ ஓர்த்து நோடு, ஈக அவங் சுகமாயிற்றெ இத்தீனெ, நீ பேதனெ சகிச்சண்டித்தெ;
எந்த்தெ ஹளிங்ங, குடுத்து கூத்தாடி, பேசித்தர கீதண்டு அசுயபட்டு ஹூலுடிகூடிண்டு, அந்த்தல இருட்டினஹாற உள்ளா சரீரஆசெத நிவர்த்திகீவா காரெ எல்லதனும் புட்டட்டு, ஏசுக்கிறிஸ்தினகொண்டு நங்கள ஜீவிதாளெ பொளகாத்து ஹளி பிஜாரிசி, அதங்ஙேற்ற காரெ கீது சந்தோஷமாயிற்றெ ஜீவிசிவா.
தன்னபோற்றி ஹாற ஜீவுசா விதவெ, ஜீவோடெ இத்தட்டும் காரெஇல்லெ; அவ சத்தா சவாக சம தென்னெயாப்புது.
சதிப்பாக்களாயும், மொரடம்மாராயும், பெருமெ ஹளாக்களாயும், தெய்வகாரெத காட்டிலும் சொந்த காரெ தொட்டுது ஹளி, அதன கீவாக்களாயும் ஜீவுசுரு.
அந்த்தலாக்க நிங்கள ஏமாத்தி, கொறச்சுநேர கிட்டா சரீர சுகாக பேக்காயி சந்தோஷபடாக்களாப்புது; அந்த்தலாக்க நிங்களகூடெ பளகுதுகொண்டு பெள்ளெ முண்டாளெ பற்றிதா கறெத ஹாற இத்தீரெ; அதுகொண்டு ஆக்க கீதா அன்னேயாக உள்ளா கூலி சிட்ச்செதென்னெ ஆப்புது.
ஏசின மரணத ஓர்த்து தீனிதிம்பா நிங்களகூடெ, அந்த்தலாக்களும் தெய்வாக அஞ்சிக்கெ இல்லாதெ தீனிதிந்து, பெள்ளெ முண்டாமேலெ கறெபற்றிதா ஹாற இத்தீரெ; ஆக்க மளெ ஹுயாதெ காற்றிக பறந்நண்டு ஹோப்பா மோடத ஹாற உள்ளாக்களும் ஆப்புது; அந்த்தலாக்க பறிச்சு நட்டா ஒணக்கு மரத ஹாற உள்ளாக்களும் ஆப்புது.
அவ ஏசு பெருமெயாயிற்றும், ஆடம்பரமாயிற்றும் ஜீவிசிளோ அதங்ங தகுந்ந சிட்ச்செயும், துக்கம் அவாக கொடிவா, ‘நா விதவெ அல்ல, மகாராணி ஆப்புது; நனங்ங ஒந்து கஷ்டம் பார’ ஹளி அவ தன்ன மனசினாளெ பிஜாரிசிண்டித்தா.