Biblia Todo Logo
Bìoball air-loidhne

- Sanasan -




யாக்கோபு 1:27 - Moundadan Chetty

27 நங்கள அப்பனாயிப்பா தெய்வதமேலெ உள்ளா ஒள்ளெ பக்தி ஏனொக்க ஹளிங்ங; தப்பிரிமக்கள சகாசுதும், கஷ்டதாளெ இப்பா விதவெகளா சகாசுதும், ஹிந்தெ லோகக்காரு அசுத்தியாளெ நெடிவா ஹாற, ஒந்து தெற்று குற்றதாளெயும் குடுங்ஙாதெ தன்ன காத்தம்புதும் ஆப்புது செரியாயிற்றுள்ளா தெய்வபக்தி.

Faic an caibideil Dèan lethbhreac




யாக்கோபு 1:27
36 Iomraidhean Croise  

மனுஷனாயி பந்நாவங்ங எதிராயிற்றெ ஏரிங்ஙி ஒப்பாங் ஏனிங்ஙி ஹளித்துட்டிங்ஙி தெய்வ மாப்பு தக்கு; எந்நங்ங, பரிசுத்த ஆல்ப்மாவிக எதிராயிற்றெ ஏவனிங்ஙி கூட்டகூடிதங்ங ஈ லோகாளெயும், தெய்வ பரிப்பா லோகதாளெயும் அவங்ங மாப்பு கிட்ட.”


சுத்த மனசு உள்ளாக்கள தெய்வ அனிகிருசுகு; ஆக்க தெய்வத காம்புரு.


தெய்வத எல்லா நேமும், விதியும் அனிசரிசி தெற்று குற்ற ஒந்தும் கீயாதெ தெய்வத காழ்ச்செயாளெ சத்தியநேரோடெ ஜீவிசி பந்துரு.


எந்நங்ங, தெய்வ நேமத கேளுதுகொண்டு மாத்தற ஒப்புரும் சத்தியநேரு உள்ளாக்களாயிற்றெ ஆப்பத்தெ பற்ற; அதன கைக்கொண்டு நெடிவாக்களே சத்தியநேரு உள்ளாக்களாயி ஆப்பத்தெ பற்றுகொள்ளு.


நங்கள தெற்று குற்ற ஒக்க ஷெமிச்சு, ஈ துஷ்ட லோகந்த நங்கள ஹிடிபுடுசத்தெ பேக்காயி, ஏசுக்கிறிஸ்து தன்னதென்னெ ஹரெக்கெயாயிற்றெ ஏல்சிகொட்டாங்; அது நங்கள அப்பனாயிப்பா தெய்வாக இஷ்ட உள்ளா காரெ ஆயித்து.


அதுகொண்டு ஆ நேமதாளெ ஹளிப்பா காரெ ஒக்க கீவத்தெ நோடுதுகொண்டு ஒப்பனும் தெய்வத முந்தாக சத்தியநேரு உள்ளாவனாயிற்றெ நில்லத்தெ பற்ற ஹளிட்டுள்ளுது ஒயித்தாயி கொத்துட்டல்லோ! எந்நங்ங “சத்தியநேரு உள்ளாக்க, தெய்வதமேலெ உள்ளா நம்பிக்கெயாளெ ஜீவுசுரு” ஹளி தெய்வத புஸ்தகதாளெ எளிதி ஹடதெ.


கிறிஸ்து ஏசினகூடெ ஜீவுசாக்க, சுன்னத்து கீவுதோ, கீயாதிப்புதோ அதொந்தும் அல்ல பிரதான; கிறிஸ்து ஏசின நம்புதுகொண்டு மற்றுள்ளாக்களகூடெ நங்க காட்டா சினேக தென்னெயாப்புது பிரதானப்பட்டுது.


எந்நங்ங நனங்ங பெருமெ ஹளத்துள்ளுது, நங்கள எஜமானனாயிப்பா ஏசுக்கிறிஸ்து குரிசாமேலெ சத்துதனபற்றி மாத்தறே ஒள்ளு. எந்த்தெ ஹளிங்ங, ஏசுக்கிறிஸ்தினகொண்டு லோகப்பிரகார உள்ளா நன்ன ஆசெத ஒக்க குரிசாமேலெ தறெச்சு களிஞுத்து; இனி லோகப்பிரகார உள்ளா ஆசெக நன்னமேலெ அதிகாரஇல்லெ.


அம்மங்ங நிங்க, கண்ணிக காணாத்த பிசாசின இஷ்டப்பிரகார நெடிவா ஈ லோகாளெ உள்ளாக்க கீவா ஹாற தென்னெ பேடாத்த காரெ ஒக்க கீதண்டித்துரு; அதுமாத்தறல்ல, ஆக்கள ஹாற தென்னெ நிங்களும் தெய்வத வாக்கின அனிசரிசாதெ ஜீவிசிண்டித்துரு.


நா நின்னகூடெ ஈ பிறமாண ஒக்க ஹளிது ஏனகொண்டு ஹளிங்ங, ஏசுக்கிறிஸ்தின நம்பாக்க சினேக உள்ளாக்களாயி இருக்கு ஹளிட்டாப்புது; ஆ சினேக சுத்த ஹிருதயதாளெயும், ஒள்ளெ மனசாட்ச்சியாளெயும், மாய இல்லாத்த தெய்வ நம்பிக்கெயாளெயும் ஆப்புது பொப்புது.


எந்நங்ங, ஒந்து விதவெக மக்களோ, மம்மக்களோ உட்டிங்ஙி, ஆக்க முந்தெ ஆக்கள குடும்ப காரெ ஒக்க ஒயித்தாயி நோடி நெடத்தி, ஈ விதவெக பேக்காத்த காரியங்ஙளும் நோடி கொடட்டெ; ஆக்க அந்த்தெஒக்க கீது தெய்வபக்தி உள்ளாக்களாப்புது ஹளி காட்டட்டெ; இதாப்புது தெய்வாக இஷ்டப்பட்டா காரெ.


ஈ கருணெகொண்டு, நங்கள தெய்வபக்தி இல்லாத்த சொபாவதும், ஈ லோகக்காரெயாளெ இருக்கு ஹளிட்டுள்ளா ஆசெதும் புட்டு தள்ளிட்டு, சுபோத உள்ளாக்களாயும், தெய்வபக்தி உள்ளாக்களாயும் சத்தியநேரோடெ ஈ லோகாளெ ஜீவுசத்தெ படியக்கெ.


எந்த்தெ ஹளிங்ங, தெய்வ தப்பா அறிவு மாய இல்லாத்த ஒள்ளெ சுத்த அறிவாப்புது; ஈ அறிவுள்ளாக்க மற்றுள்ளாக்கள சினேகிசி, சமாதானமாயிற்றெ ஜீவுசுரு; மற்றுள்ளாக்கள மனசுஅருது தாநு ஹோப்புரு; கஷ்டதாளெ உள்ளாக்காக கருணெ காட்டி சகாசுரு; ஒள்ளேவன ஹாற நடிச்சு ஒப்பங்ஙும் இச்சபட்ச்ச கீயரு.


நங்காக உள்ளுது ஒந்தே நாவு; ஆ நாவினாளெ தெய்வத வாழ்த்துதும், அவன ஹாற தென்னெ தெய்வ உட்டுமாடிதா இஞ்ஞொப்பன சாப ஹவுக்குதும் இது எருடனும் கீவத்தெ பாடுட்டோ?


ஈ லோகக்காரெயாளெ ஆசெபீத்து ஜீவுசாவாங், தெய்வாக இஷ்டில்லாத்த சூளெத்தரத ஹாற உள்ளா குற்ற ஆப்புது கீவுது ஹளி நிங்காக கொத்தில்லே? அதுகொண்டு ஈ லோகக்காரெயாளெ ஆசெபீப்பாவாங் தெய்வாக ஹகெகாறனாப்புது.


அதுகொண்டு தெய்வ நங்காக ஒந்து தொட்ட வாக்கு தந்துஹடதெ; அது ஏன ஹளிங்ங, பேடாத்த பிறவர்த்தி கீது நசிச்சு ஹோதா ஈ லோகக்காறா சொபாவ ஒக்க புட்டட்டு, தெய்வத சொபாவ உள்ளாக்களாயி ஜீவுசுக்கு.


நங்கள எஜமானும், ரெட்ச்சகனுமாயிப்பா ஏசுக்கிறிஸ்தினபற்றி அருதுதுகொண்டு, ஈ லோகப்பிரகார உள்ளா பேடாத்த பட்டெந்த தப்பிசிட்டு ஹிந்திகும் அதனாளெ ஹோயி குடிங்ஙிதுட்டிங்ஙி ஆக்கள நெலெ முந்தளத்த நெலெத காட்டிலும் மோச ஆயிதீயிகு.


சினேகுள்ளாக்களே, ஹொசா பூமியும், ஹொசா ஆகாசங்ஙளும் பொக்கு ஹளி காத்திப்புதுகொண்டு, தெய்வத காழ்ச்செயாளெ தெற்று குற்ற இல்லாத்தாக்களாயி, சமாதானத்தோடெ ஜீவுசத்தெ ஜாகர்தெயாயிற்றெ இரிவா.


அந்த்தெ இப்பங்ங, தெய்வதகொண்டு ஹுட்டிதாக்க ஒப்புரும் தெற்று குற்ற கீதண்டு இரரு; எந்த்தெ ஹளிங்ங துஷ்டனாயிப்பா பிசாசின கெணியாளெ குடுங்ஙாதெ, தெய்வ ஆக்கள பாதுகாத்தங்கு.


Lean sinn:

Sanasan


Sanasan