17 சத்துகளிஞட்டு ஆப்புது ஆ வில்பத்றத ஒறப்புபருசுது; ஆ வில்பத்ற எளிதிதாவாங் ஜீவோடெ இப்பட்ட அதங்ங ஒறப்பில்லெ.
நா நிங்காக சமாதானத பீத்தட்டு ஹோதீனெ, நன்ன சமாதானத நா நிங்காக தந்நீனெ. நா நிங்காக தப்பா சமாதான ஈ லோக தப்பா சமாதானத ஹாற உள்ளுதல்ல; நிங்க மனசங்கட படாதெயும், அஞ்சாதெயும் இரிவா.
ஏசின நம்பி இப்பா நன்ன கூட்டுக்காறே, காலகாலமாயிற்றெ லோகாளெ நெடிவா ஒந்து காரெபற்றி நா நிங்களகூடெ ஹளுதாப்புது; இப்புருகூடி கையெளுத்து ஹைக்கி ஒறசிதா ஒந்து ஒடம்படித மாற்றத்தெகோ, அதனாளெ பேறெ ஏதிங்ஙி கூட்டி சேர்சத்தெகோ பற்ற.
வில்பத்ற உள்ளாடெ, அதன எளிதிதாவாங் சத்தண்டுஹோதாங் ஹளிட்டுள்ளுது ஒறப்புபருசுது அத்தியாவிசெ ஆப்புது.
அதுகொண்டாப்புது ஆதியத்த ஒடம்படியும் சோரெ கொண்டுள்ளா ஹரெக்கெயாயிற்றெ தொடங்ஙுது.