Biblia Todo Logo
Bìoball air-loidhne

- Sanasan -




கலாத்தி 1:4 - Moundadan Chetty

4 நங்கள தெற்று குற்ற ஒக்க ஷெமிச்சு, ஈ துஷ்ட லோகந்த நங்கள ஹிடிபுடுசத்தெ பேக்காயி, ஏசுக்கிறிஸ்து தன்னதென்னெ ஹரெக்கெயாயிற்றெ ஏல்சிகொட்டாங்; அது நங்கள அப்பனாயிப்பா தெய்வாக இஷ்ட உள்ளா காரெ ஆயித்து.

Faic an caibideil Dèan lethbhreac




கலாத்தி 1:4
56 Iomraidhean Croise  

முள்ளுகாடினாளெ பித்தா பித்திக ஒத்தாக்களும் வஜனத கேளுரு; எந்நங்ங ஆக்க, ஹண உட்டுமாது எந்த்தெ? சுகமாயிற்றெ ஜீவுசுது எந்த்தெ? நாளேக பேக்காயி ஏனொக்க கீவுது? ஹளிட்டுள்ளா பல சிந்தெயும், பேறெ பல லோக ஆசெயும் ஆக்கள ஹிடுத்து மூடதாப்பங்ங, வஜனாத மறது ஆக்களும் பல இல்லாதெ ஆயிண்டுஹோப்புரு.


அதே ஹாற தென்னெ மனுஷனாயி பந்தா நானும், மற்றுள்ளாக்க நனங்ங கெலசகீது தருக்கு ஹளிட்டு பந்துபில்லெ; மற்றுள்ளாக்காக சேவெ கீவத்தெகும், ஒந்துபாடு ஜனங்ஙளா ரெட்ச்செபடுசத்தெபேக்காயி, நன்ன ஜீவன கொடத்தெகும் பந்நாவனாப்புது; அதுகொண்டு நிங்களும் அந்த்தெ தென்னெ இருக்கு” ஹளி ஹளிதாங்.


இது ஒந்துபாடு ஆள்க்காறா தெற்று குற்றாக மாப்பு கிட்டத்தெ பேக்காயிற்றெ உள்ளா ஒடம்படி சோரெத அடெயாள ஆப்புது.


எந்தட்டு ஏசு ஹிந்திகும் ஹோயி, “நன்ன அப்பா! ஈ கஷ்டப்பாடு நா ஏற்றெத்தியே பற்றுகு அல்லாதெ அது நன்னபுட்டு ஹோக ஹளி கண்டங்ங, நின்ன இஷ்டப்பிரகார தென்னெ நெடெயட்டெ” ஹளி பிரார்த்தனெ கீதாங்.


அதுகொண்டு நிங்க தெய்வதகூடெ எந்த்தெ பிரார்த்தனெ கீயிக்கு ஹளிங்ங, சொர்க்காளெ இப்பா நங்கள அப்பா! பரிசுத்தனாயிப்பா நின்ன எல்லாரும் பெகுமானிசட்டெ.


ஏனாக ஹளிங்ங, மனுஷனாயி பந்தா நனங்ங, மற்றுள்ளாக்க கெலசகீது தருக்கு ஹளிட்டு நா பந்துபில்லெ; மற்றுள்ளாக்காக சேவெ கீதுகொடத்தெ ஆப்புது நா பந்துது; ஒந்துபாடு ஜனங்ஙளா ரெட்ச்செபடுசத்துள்ளா பகர வஸ்துவாயிற்றெ, நன்ன ஜீவாத கொடத்தெகும் ஆப்புது நா பந்திப்புது” ஹளி ஹளிதாங்.


எந்தட்டு, ஏசு தொட்டித கையாளெ எத்தி தெய்வாக நண்ணி ஹளிட்டு, அதன முருத்து, முருத்து ஆக்காக கொட்டாங்; நா தப்புது நிங்காகபேக்காயி கீறிமுருத்தா நன்ன சரீர ஆப்புது; நன்ன ஓர்மேக பேக்காயி நிங்க இதன கீயிவா ஹளி ஹளிதாங்.


எந்தட்டு, அப்பா! நினங்ங இஷ்டாயித்தங்ங, நனங்ங பொப்பத்தெ ஹோப்பா கஷ்ட ஹளா ஈ பாத்தறத நன்னப்படெந்த மாற்றி தருக்கு; எந்நங்ஙும் நன்ன இஷ்ட அல்ல, எல்லதும் நின்ன இஷ்ட பிரகார நெடெயட்டெ ஹளி பிரார்த்தனெ கீதாங்.


ஆடின ஒக்க காப்பத்தெபேக்காயி தன்ன ஜீவதகூடிங் கொடாவனாப்புது ஒள்ளெமேசாவாங்; ஆ ஒள்ளெமேசாவாங் நா தென்னெயாப்புது.


ஈகளே ஈ லோக ஜனாக ஞாயவிதி பந்துகளிஞுத்து; தெய்வ ஈ லோகத அதிபதி ஆயிப்பாவன ஹொறெயெ தள்ளுகு.


நன்ன சொந்த அதிகாரதாளெ நா ஒந்துகாரெயும் கீவுதில்லெ; நன்ன அப்பாங் ஹளிதந்தா ஹாற நா ஞாயவிதிப்புதுகொண்டு, அது நீதி உள்ளா ஞாயவிதி ஆப்புது; நா நன்ன சொந்த இஷ்டப்பிரகார கீயாதெ நன்ன ஹளாயிச்சாவாங் நா ஏன கீயிக்கு ஹளி ஆக்கிரிசீனெயோ அதன மாத்தற கீதீனெ.


ஏனாக ஹளிங்ங, நன்ன சொந்த இஷ்டப்பிரகார கீவத்தெ அல்ல, நன்ன ஹளாய்ச்சா அப்பன இஷ்டப்பிரகார கீவத்தெ ஆப்புது நா ஆகாசந்த எறங்ஙி பந்திப்புது.


ரோமினாளெ இப்பா எல்லாரிகும், பிறித்தியேகிச்சு ஈ ஒள்ளெவர்த்தமானத நம்பிதுகொண்டு, தெய்வ சினேகிசா பரிசுத்தம்மாராயிப்பா நிங்காகும் நங்கள அப்பனாயிப்பா தெய்வதப்படெந்தும், எஜமானனாயிப்பா ஏசுக்கிறிஸ்தினப்படெந்தும் கருணெயும், சமாதானும் கிட்டட்டெ.


ஏனாக ஹளிங்ங, நங்கள எல்லாரின தெற்று குற்றாக உள்ளா சிட்ச்செக பேக்காயி, தெய்வ ஏசின குரிசாமேலெ கொல்லத்தெ ஏல்சிகொட்டுத்து; அந்த்தெ நங்கள எல்லாரினும் சத்தியநேரு உள்ளாக்களாயி மாற்றத்தெபேக்காயி ஏசின ஜீவோடெ ஏள்சிப்புது.


நங்கள மனசினாளெ இப்புதன தெய்வ அறிகு; தெய்வத மனசினாளெ இப்புதன அறிவா பரிசுத்த ஆல்ப்மாவு நங்காக பிரார்த்தனெ கீவத்தெ சகாசீதெ.


எந்த்தெ ஹளிங்ங, நீ ஒள்ளேவனாயி ஜீவுசத்தெபேக்காயிற்றெ தெய்வ தந்தா தன்ன நேமத அடிஸ்தானதாளெ நின்னகொண்டு ஒயித்தாயி ஜீவுசத்தெ பற்றிபில்லெ; ஆ ஹேதினாளெ நீ சாவினாளெ குடிங்ஙித்தெ, அந்த்தெ குடிங்ஙித்தா நின்ன, தெய்வ கண்டட்டு, தன்ன மங்ஙன மனுஷனாயி ஹளாயிச்சு, சாவிந்த நின்ன ஹிடிபுடிசித்து.


நங்காக அந்த்தல பெகுமானப்பட்டா ஜீவித தப்பத்தெ பேக்காயி, தெய்வ தன்ன சொந்த மங்ங ஹளிகூடி நோடாதெ, நங்காக பேக்காயி தந்திப்பங்ங, அதனகூடெ மற்றுள்ளா எல்லதும் தாராதிக்கோ?


நா கேட்டு நிங்காக ஹளிதந்தா ஆ ஒள்ளெவர்த்தமானதபற்றி தெய்வத புஸ்தகதாளெ எளிதிப்புது இந்த்தெ ஆப்புது; ஏசுக்கிறிஸ்து நங்கள தெற்று குற்றாகபேக்காயி சத்தாங்;


ஏனாக ஹளிங்ங, ஈ லோகாளெ தன்ன தெய்வத ஹாற காட்டா பிசாசு, ஆக்கள குருடுமாடி பீத்துதீனெ; அதுகொண்டாப்புது ஆக்க ஒள்ளெவர்த்தமானதாளெ உள்ளா பெகுமானப்பட்ட பொளிச்சத காம்பத்தெ பற்றாத்துதும், தெய்வத ஹாற இப்பா கிறிஸ்தினமேலெ நம்பிக்கெ இல்லாத்தாக்களாயி இப்புதும்.


அதுகொண்டு இனி நா அல்ல ஜீவிசிண்டிப்புது, கிறிஸ்து ஆப்புது நன்ன ஒளெயெ ஜீவிசிண்டிப்புது; இஞ்ஞி நா ஜீவுசா காலதாளெ ஒக்க நன்ன சினேகிசி, நனங்ஙபேக்காயி ஜீவதந்தா தெய்வத மங்ஙனாயிப்பா கிறிஸ்தின நம்பிண்டு தென்னெயாப்புது ஜீவுசுது.


எந்நங்ங நனங்ங பெருமெ ஹளத்துள்ளுது, நங்கள எஜமானனாயிப்பா ஏசுக்கிறிஸ்து குரிசாமேலெ சத்துதனபற்றி மாத்தறே ஒள்ளு. எந்த்தெ ஹளிங்ங, ஏசுக்கிறிஸ்தினகொண்டு லோகப்பிரகார உள்ளா நன்ன ஆசெத ஒக்க குரிசாமேலெ தறெச்சு களிஞுத்து; இனி லோகப்பிரகார உள்ளா ஆசெக நன்னமேலெ அதிகாரஇல்லெ.


அந்த்தெ கிறிஸ்தினகொண்டாப்புது நங்காக தெய்வத மக்க ஹளிட்டுள்ளா அவகாச கிட்டிது; இது தன்ன அறிவுகொண்டு பண்டே தீருமானிசித்தா காரெ தென்னெயாப்புது; ஆ தெய்வ தென்னெயாப்புது இது எல்லதனும் நெடத்தி பொப்பாவாங்.


அம்மங்ங நிங்க, கண்ணிக காணாத்த பிசாசின இஷ்டப்பிரகார நெடிவா ஈ லோகாளெ உள்ளாக்க கீவா ஹாற தென்னெ பேடாத்த காரெ ஒக்க கீதண்டித்துரு; அதுமாத்தறல்ல, ஆக்கள ஹாற தென்னெ நிங்களும் தெய்வத வாக்கின அனிசரிசாதெ ஜீவிசிண்டித்துரு.


மற்றுள்ளாக்க பேடாத்த காரெ கீதண்டிப்பா ஈ காலகட்டதாளெ, நிங்காக சமெ கிட்டங்ஙஒக்க தெய்வாக இஷ்ட உள்ளா காரெத கீதண்டிரிவா.


ஏனாக ஹளிங்ங, ஏசுக்கிறிஸ்து நங்களமேலெ சினேகபீத்து, நங்க கீதா தெற்று குற்றாகபேக்காயி, தன்ன ஜீவதே தெய்வாக ஹரெக்கெ கொடா ஹாற கொட்டாங்; தாங் அந்த்தெ தெய்வாக இஷ்டப்பட்ட ஜீவித ஜீவிசிதா ஹாற தென்னெ, நிங்களும் தம்மெலெ தம்மெலெ சினேக உள்ளாக்களாயி ஜீவிசிவா.


ஏனாக ஹளிங்ங, மனுஷம்மாராகூடெ மாத்தறல்ல, ஆகாசாளெ உள்ளா கண்ணிக காணாத்த பிசாசின பட்டாளதகூடெயும், இவேத ஒக்க பட்டெநெடத்திண்டிப்பா மூப்பம்மாராகூடெயும், ஆக்கள தந்தறதாளெ ஈ லோகத அதிகார கீவாக்களகூடெயும் நங்காக யுத்தகீவத்தெ உட்டு.


அந்த்தெ நங்கள சகாசா அப்பனாயிப்பா தெய்வாக எந்தெந்தும் மரியாதெ உட்டாட்டெ; ஆமென்.


எந்த்தெ ஹளிங்ங, நிங்க தெய்வதமேலெ நம்பிக்கெ பீத்து, தெய்வாகபேக்காயி கீவா கெலசாகும், நிங்கள கஷ்டப்பாடின எடேக நிங்க மற்றுள்ளாக்கள சினேகிசுது கொண்டும், அப்பனாயிப்பா தெய்வத முந்தாக, எஜமானனாயிப்பா ஏசுக்கிறிஸ்தின கையிந்த நிங்காக கிட்டா பலாக பேக்காயி, ஒறெச்ச நம்பிக்கெ பீத்திப்புதுகொண்டும் நங்க தெய்வாக நண்ணி ஹளீனு.


அதங்ஙபேக்காயி நங்கள அப்பனாயிப்பா தெய்வும், எஜமானாயிப்பா ஏசுக்கிறிஸ்தும் நங்காக பட்டெகாட்டி தரட்டெ.


அந்த்தெ நங்கள எஜமானாயிப்பா ஏசுக்கிறிஸ்து தன்ன பரிசுத்தம்மாரு எல்லாரினும் கூடெ பொப்பதாப்பங்ங, நங்கள அப்பனாயிப்பா தெய்வத காழ்ச்செயாளெ நிங்க தெற்று குற்ற இல்லாத்த பரிசுத்தம்மாராயி நில்லத்தெக எஜமானு நிங்கள மனசிக பெல தரட்டெ.


நங்கள எஜமானாயிப்பா ஏசுக்கிறிஸ்தும், நங்கள அப்பனாயிப்பா தெய்வும், நிங்கள மனசிக ஆசுவாச தந்து, நிங்க கீவா எல்லா காரெயாளெயும், நிங்க கூட்டகூடா எல்லா வாக்கினாளெயும் நிங்காக பெல தரட்டெ; அப்பனாயிப்பா ஆ தெய்வ நிங்களமேலெ சினேகும், தயவும் காட்டி நித்தியமாயிற்றெ ஜீவுசுவும் ஹளிட்டுள்ளா ஒள்ளெ நம்பிக்கெயாளெ நெலெ நில்லத்தெபேக்காயி நிங்கள சகாசட்டெ.


ஒந்நொந்து மனுஷனும் கீதா தெற்று குற்றாக கிட்டத்துள்ளா சிட்ச்செந்த, ஆக்கள ரெட்ச்செபடுசத்தெபேக்காயி ஏசுக்கிறிஸ்து தென்னெயாப்புது தன்னதென்னெ பகர வஸ்துவாயிற்றெ குரிசு மரணாக ஏல்சி கொட்டுதாப்புது; இதொக்க ஒந்து அடெயாளமாயிற்றெ தெய்வ முன்குறிச்சா சமெயாளெ தென்னெ நெடதுத்து.


ஏசுக்கிறிஸ்து, எல்லா அக்கறமந்தும் நீக்கி, நங்கள காத்து ஒள்ளெ காரெ சகலதும் கீவத்தெ மனசுள்ளாக்க ஆப்பத்தெகும் பரிசுத்த ஜனமாயிற்றெ மாடத்தெகும், தன்ன சொந்த ஜனமாயிற்றெ மாடத்தெகும் பேக்காயாப்புது தன்னத்தானே குரிசு மரணாக ஏல்சிகொட்டுது.


இனி பொப்பத்துள்ளா லோகத பற்றி நங்க கூட்டகூடீனு; எந்நங்ங, தெய்வ அதன தூதம்மாரா அதிகாரத கீளேக அல்ல கொட்டிப்புது.


ஈக்க தெய்வத வாக்கினகொண்டு கிட்டிதா நன்மெத அனுபோசிதாக்களும், இனி பொப்பத்துள்ளா லோகத சக்தித அருதாக்களும் ஆப்புது.


எந்நங்ங கிறிஸ்தின சோரெ அந்த்தெ உள்ளுதல்ல; ஆ சோரெ, ஜீவனுள்ள தெய்வத நங்க கும்முடத்தெபேக்காயி, நங்கள நாசமாடா பிறவர்த்திந்த நங்கள மனசாட்ச்சித திரிச்சு, கூடுதலாயி சுத்தமாடீதெ; ஏனாக ஹளிங்ங கிறிஸ்து, நித்தியமாயிற்றுள்ளா பரிசுத்த ஆல்ப்மாவினகொண்டு, தன்னதென்னெ தெய்வாகபேக்காயி குற்ற இல்லாத்த ஹரெக்கெயாயிற்றெ ஏல்சிகொட்டுதீனெ.


ஈ லோகக்காரெயாளெ ஆசெபீத்து ஜீவுசாவாங், தெய்வாக இஷ்டில்லாத்த சூளெத்தரத ஹாற உள்ளா குற்ற ஆப்புது கீவுது ஹளி நிங்காக கொத்தில்லே? அதுகொண்டு ஈ லோகக்காரெயாளெ ஆசெபீப்பாவாங் தெய்வாக ஹகெகாறனாப்புது.


ஹளே ஜீவிதாக நங்க சத்தாக்கள ஹாரும், ஹொசா ஜீவிதாக நங்க ஜீவோடெ இப்பாக்கள ஹாரும் ஜீவுசத்தெபேக்காயிற்றெ, ஏசுக்கிறிஸ்து தன்ன மேலாமேலெ நங்கள தெற்று குற்றத ஒக்க ஏற்றெத்தி குரிசுமரதமேலெ சத்தாங்; அந்த்தெ தன்ன பாசண்டிகொண்டாப்புது நங்க எல்லாரிகும் சுக கிட்டிது.


ஏனாக ஹளிங்ங, ஏசுக்கிறிஸ்து நங்க கீதா குற்றாகபேக்காயி ஒந்து பரச சத்துகளிஞுத்து; சத்தியநேரு உள்ளாவனாயிப்பா கிறிஸ்து, சத்தியநேரு இல்லாத்த நங்கள எல்லாரினும் தெய்வதகூடெ சேர்சத்தெ பேக்காயாப்புது சத்துது; ஜனங்ஙளு கிறிஸ்தின சரீரத மாத்தற கொந்துரு; எந்நங்ங தன்ன ஆல்ப்மாவு ஜீவோடெ தென்னெ உட்டாயித்து.


எந்த்தெ ஹளிங்ங, நங்கள தெற்று குற்றாக மாப்பு கிட்டத்துள்ளா ஹரெக்கெயாயிற்றெ ஏசுக்கிறிஸ்து குரிசாமேலெ சோரெ ஒளிக்கி சத்துதுகொண்டு தென்னெயாப்புது; நங்கள தெற்று குற்றாக மாத்தறல்ல, ஈ லோகாளெ உள்ளா எல்லா மனுஷரு கீதா தெற்று குற்றதும் நீக்கத்தெ பேக்காயி குரிசாமேலெ சத்துது ஏசுக்கிறிஸ்து தென்னெயாப்புது.


ஏசுக்கிறிஸ்து எல்லாரிக பேக்காயி தன்ன ஜீவதந்து சத்துதுகொண்டு, நேராயிற்றுள்ளா சினேக ஏன ஹளிட்டுள்ளுது நங்காக கொத்துட்டல்லோ! அதுகொண்டு நங்களும் மற்றுள்ளாக்காக பேக்காயி நங்கள ஜீவத கொடத்தெயும் கடமெ உள்ளாக்களாப்புது.


ஈ கிறிஸ்து தென்னெயாப்புது சத்திய சாட்ச்சியாயி இப்பாவாங்; சத்துஹோதா எல்லாரின எடெந்தும் முந்தெ ஜீவோடெ எத்தாவனும், பூமியாளெ இப்பா எல்லா ராஜாக்கம்மாரிகும் மேலெ தலவனாயிற்றெ இப்பாவனும் அவங் தென்னெயாப்புது; அவங், நங்களமேலெ சினேக பீத்திப்புதுகொண்டு, தன்னதென்னெ சாவிக எல்சிகொட்டட்டு, நங்கள எல்லாரின தெற்று குற்றந்தும் ஹிடிபுடிசிதாங்.


ஆ, நாக்கு ஜீவிகளும், மூப்பம்மாரும், இதுவரெட்ட பாடாத்த ஒந்து ஹொசா பாட்டின பாடிண்டித்துரு; அதனாளெ, “சுருளுபுஸ்தக பொடுசத்தெகும், அதன முத்திரெ ஹொடிசி தொறெவத்தெகும் கழிவுள்ளாவாங் நீ தென்னெயாப்புது; ஏனாக ஹளிங்ங, நின்ன கொந்துரு; எந்நங்ங, நீ நின்ன சோரெகொண்டு எல்லா பாஷெக்காறப்படெந்தும், எல்லா கோத்தறக்காறப்படெந்தும், எல்லா ராஜெக்காறப்படெந்தும் தெய்வாகபேக்காயி ஜனங்ஙளா பெலெகொட்டு பொடிசித்தெ.


அதுகளிஞட்டு, ஒப்பனகொண்டும் எணுசத்தெ பற்றாத்த கொறே ஆள்க்காறா கண்டிங்; ஆக்க ஒக்க, எல்லா ஜாதிந்தும், எல்லா நாடிந்தும், எல்லா கோத்தறந்தும் பந்தா எல்லாவித பாஷெயும், கூட்டகூடா ஜனங்ஙளாப்புது; ஆக்க, சிம்மாசனத முந்தாகும், ஆடுமறியாயிப்பாவன முந்தாகும் நிந்தித்துரு; ஆக்க, நீண்ட பெள்ளெ உடுப்பு ஹைக்கிட்டு, ஈத்தப்பனெத கூம்பு ஓலெதும் கையாளெ ஹிடுத்தண்டு நிந்தித்துரு;


Lean sinn:

Sanasan


Sanasan