Biblia Todo Logo
Bìoball air-loidhne

- Sanasan -




எபேசியம்மாரு 3:16 - Moundadan Chetty

16 சக்தி உள்ளா தெய்வ, தன்ன பரிசுத்த ஆல்ப்மாவுகொண்டு நிங்கள மனசிக தைரெ தரட்டெ ஹளி பிரார்த்தனெ கீவுதாப்புது.

Faic an caibideil Dèan lethbhreac




எபேசியம்மாரு 3:16
28 Iomraidhean Croise  

நங்க தெற்று குற்ற கீவத்துள்ளா ஒந்து சந்தர்ப உட்டாகாதிப்பத்தெகும், பிசாசின கையிந்தும் நங்கள காத்தணுக்கு; ராஜெ, அதிகார, மரியாதெ எந்தெந்தும் நிந்து தென்னெயாப்புது; ஆமென்.


அதனபகர தெய்வ நேமப்பிரகார கீவா சுன்னத்தின அர்த்த ஏன ஹளிட்டுள்ளுதன பரிசுத்த ஆல்ப்மாவின சகாயங்கொண்டு மனசிலுமாடிட்டு, தெய்வ இஷ்டப்பிரகார ஜீவுசாவனாப்புது எதார்த்தமாயிற்றுள்ளா யூதங்; அவங்ங மனுஷம்மாராகொண்டு ஒள்ளெ ஹெசறு கிட்டிதில்லிங்கிலும் தெய்வதகொண்டு ஒள்ளெ ஹெசறு கிட்டுகு.


அதுகொண்டு நா, நன்ன ஒள்ளேவனாயி மாற்றத்தெபேக்காயி தெய்வ தந்தா நேமத ஒக்க மனசினாளெ ஓர்த்து நா வளரெ சந்தோஷபடுதாப்புது.


எந்த்தெ ஹளிங்ங, தாங் தெரெஞ்ஞெத்திதா தன்ன ஜனாக தன்னகூடெ சேர்ந்நு, தன்ன பெகுமான உள்ளா ஜீவிதாளெ ஜீவுசுது எத்தஹோற தொட்டுது ஹளிட்டுள்ளுதன ஆக்காக அருசத்தெபேக்காயி, ஆக்களமேலெ தயவு காட்டத்தெகும் தெய்வாக அவகாச உட்டல்லோ?


உணர்வோடெ இரிவா; நம்பிக்கெயாளெ நெலச்சிரிவா; தைரெ உள்ளாக்களாயிரிவா; சக்தி உள்ளாக்களாயிரிவா.


எந்நங்ங எஜமானு, “நன்ன கருணெ நினங்ங இத்தங்ங மதி; நின்னகொண்டு கீவத்தெ பற்றாத்த காரெயாளெ நன்ன பெல நினங்ங சகாய ஆக்கு” ஹளி ஹளிதாங்; அந்த்தெ இப்பங்ங, நன்னகொண்டு கீவத்தெ பற்றாத்த சமெயாளெ ஒக்க எஜமானின சக்தி நனங்ங கிட்டுதுகொண்டு, நா அதனபற்றி பெருமெயாயிற்றெ ஹளுவிங்.


அதுகொண்டு, நங்க தளருதில்லெ; ஏனாக ஹளிங்ங, நங்க இந்த்தெ கஷ்டப்படா ஹேதினாளெ நங்கள சரீர சாயிவா நெலெயாளெ இத்தங்ஙும், நங்கள மனசினாளெ ஜினாஜினாக ஒள்ளெ ஒறப்புள்ளாக்களாயி இத்தீனு.


தெய்வ நிங்கள ஏமாரி அந்தசாயிற்றெ ஜீவுசத்தெபேக்காயி ஊதுது ஹளியும், ஏசின நம்பா மற்றுள்ளாக்கள எடேக நிங்காக கிட்டிப்பா மதிப்பு எத்தஹோற தொட்டுது ஹளியும் அறிவத்துள்ளா பொளிச்ச நிங்காக கிட்டத்தெ பேக்காயும் நா பிரார்த்தனெ கீவுதாப்புது.


தெய்வத அளவில்லாத்த ஆ, கருணெ நங்காக கிட்டிது எந்த்தெ ஹளிங்ங, தன்ன மங்ங ஏசுக்கிறிஸ்தின சோரெகொண்டு நங்கள தெற்று குற்றத ஷெமிச்சு, நங்கள ஆல்ப்மாவின சாவிந்த காத்துது கொண்டாப்புது.


அந்த்தெ தெய்வ ஏசுக்கிறிஸ்தினகொண்டு நங்களமேலெ காட்டிதா தயவு கருணெ ஏமாரி தொட்டுது ஹளி இஞ்ஞி பொப்பத்துள்ளா காலதாளெ உள்ளாக்க ஒக்க மனசிலுமாடத்தெ பேக்காயாப்புது அந்த்தெ கீதுது.


தெய்வ ஜனதாளெ பீத்து நா ஒந்து விஷேஷும் இல்லாத்தாவனாயி இத்தட்டுகூடி, கிறிஸ்தின அளவில்லாத்த அனுக்கிரக உள்ளா ஈ ஒள்ளெவர்த்தமானதபற்றி, பண்டு தெய்வத அறியாத்த அன்னிய ஜாதிக்காறாயித்தா நிங்களகூடெ அருசத்தெபேக்காயி தெய்வ நன்ன தெரெஞ்ஞெத்திது, நன்ன பாக்கிய தென்னெயாப்புது.


கடெசிக நா நிங்களகூடெ ஹளுதேன ஹளிங்ங, நங்கள எஜமானாயிப்பா கிறிஸ்தின சக்தி எத்தஹோற தொட்டுது ஹளி மனசிலுமாடி, கிறிஸ்து தப்பா சக்திகொண்டு, தன்னகூடெ சேர்ந்நு ஜீவிசிண்டிரிவா.


நா கிறிஸ்தின நம்பி நெடெவுதுகொண்டும், கிறிஸ்து நனங்ங சக்தி தந்நண்டிப்புது கொண்டும், ஏது சாஜரியதாளெயும் சந்தோஷமாயிற்றெ ஜீவுசத்தெ பற்றுகு.


நங்கள தெய்வதகையி அளவில்லாத்த அனுக்கிரக ஹடதெ; ஆ அனுக்கிரகங்கொண்டு கிறிஸ்து ஏசின நம்பி ஜீவுசா நிங்கள புத்திமுட்டு ஒக்க தெய்வ மாற்றி தக்கு.


அதுமாத்தற அல்ல, ஏசுக்கிறிஸ்து தனங்ங பந்தா கஷ்டத ஒக்க சந்தோஷமாயிற்றெ சகிச்சா ஹாற தென்னெ, நிங்காக பொப்பா கஷ்டதாளெயும் நிங்க பொருமெயாயிற்றெ சகிப்பத்துள்ளா பெல கிட்டத்தெ பேக்காயும் நங்க பிரார்த்தனெ கீதீனு.


எந்த்தெ ஹளிங்ங, ஈ லோகாளெ உள்ளா எல்லா ஜாதிக்காறிகும் ஏசுக்கிறிஸ்தினகொண்டு தெய்வதகூடெ பெந்த உள்ளாக்களாயிற்றெ இப்பத்துள்ளா பாக்கிய கிட்டீதல்லோ? ஈ ஒள்ளெவர்த்தமான இந்துவரெட்ட சொகாரெயாயிற்றெ தென்னெ உட்டாயித்து; எந்நங்ங தெய்வ அதன இந்துள்ளா சபெக்காறிக அருசத்தெ ஆக்கிரிசிது கொண்டு, ஆ தெய்வதகூடெ சேரத்துள்ளா பாக்கிய நிங்காகும் கிடுத்தல்லோ? அது எத்தஹோற தொட்ட பாக்கிய.


மனசொறப்புள்ளாக்களாயி தம்மெலெ தம்மெலெ ஒந்தே சினேக உள்ளாக்களாயிருக்கு ஹளிட்டுள்ளுதாப்புது நன்ன ஆசெ. அதுமாத்தறல்ல தெய்வ சொகாரெயாயிற்றெ பீத்தித்தா அறிவாயிப்பா ஏசுக்கிறிஸ்தினபற்றி நிங்க எல்லாரும் அறீக்கு ஹளிட்டுள்துளும் தென்னெயாப்புது நன்ன ஆக்கிர; ஈ ஏசினபற்றி அறிவத்தெ பற்றிது நிங்காக கிட்டிதா தொட்ட ஒந்து சொத்து ஆப்புது.


எந்நங்ங தெய்வ நனங்ங தொணெ நிந்து சக்தி படிசித்து; அதுகொண்டு அன்னிய ஜாதிக்காறாகூடெயும் ஒள்ளெவர்த்தமான கூட்டகூடத்தெ பற்றித்து; அந்த்தெ நனங்ங கிட்டத்துள்ளா மரண சிட்ச்செந்த தெய்வ நன்ன ஜீவன காத்துத்து.


கிச்சின சூடு கெடிசிரு; வாளின ஹிடிந்த தப்பிரு; பெல இல்லாத்தாக்களாயி இத்தங்ஙும் பெல உள்ளாக்களாதுரு; யுத்தக்களதாளெ சாமர்த்தெ காட்டிரு; அன்னிய பட்டாளக்காறா தோல்சிரு.


அதன பகராக நிங்கள மனசாளெ மறெஞ்ஞிப்பா தாழ்மெயும், சமாதானமுமாயிற்றுள்ளா ஒரிக்கிலும் நசியாத்த சொபாவ ஆப்புது நிங்காக அலங்காரமாயிற்றெ இறபேக்காத்து; அதாப்புது தெய்வத காழ்ச்செயாளெ பெலெப்பிடிப்புள்ளுது.


Lean sinn:

Sanasan


Sanasan