8 பரிசுத்த ஆல்ப்மாவின சகாயங்கொண்டு, நிங்க மற்றுள்ளாக்கள சினேகிசீரெ ஹளிட்டுள்ளுதன பற்றி ஒக்க எப்பாப்பிராத்து நங்களகூடெ ஹளிதாங்.
அதே ஹாற ஹொறெயெ கடெயாத்த சொகாரெ ஒந்தும் இல்லெ; உணிசி பீத்தா எல்லா சங்ஙதியும், ஒந்துஜின ஹொறெயெ கடிகு.
கூட்டுக்காறே! நங்கள எல்லாரினும் நெடத்தா ஏசுக்கிறிஸ்தினகொண்டு பரிசுத்த ஆல்ப்மாவு நங்கள ஒளெயெ தந்திப்பா சினேகதாளெ நா நிங்களகூடெ ஹளுது ஏன ஹளிங்ங, நனங்ஙபேக்காயி தெய்வதகூடெ பிரார்த்தனெ கீயிவா.
அந்த்தெ தெய்வதமேலெ நம்பிக்கெ கூடதாப்பங்ங, நங்க நாணப்பட்டு ஹோக்கோ ஹளிட்டுள்ளா அஞ்சிக்கெ இல்லாதெ ஜீவுசக்கெ; இதொக்க எந்த்தெ சம்போசுகு ஹளிங்ங, தெய்வ தன்ன பரிசுத்த ஆல்ப்மாவின நங்கள மனசினாளெ தந்து, நங்கள சினேகிசுதுகொண்டு சம்போசுகு.
எந்நங்ங தெய்வத ஆல்ப்மாவு ஹளா ஹாற நெடிவாக்கள சொபாவ ஏனொக்க ஹளிங்ங, சினேக, சந்தோஷ, சமாதான, ஷெமெ, தயவு, மற்றுள்ளாக்கள சகாசுது, நம்பத்தெ பற்றிதா ஒள்ளெ சொபாவ,
தெய்வ நங்காக தந்துது, ஒந்து காரெ கீவத்தெ அஞ்சிக்கெ உள்ளா ஆல்ப்மாவின அல்ல; நங்காக பெல தப்புதும், மற்றுள்ளாக்கள சினேகிசத்தெகும், நங்கள நங்களே நேந்திறசத்தெகும் சகாசத்தெ கழிவுள்ளா ஆல்ப்மாவின ஆப்புது தந்திப்புது.
நிங்க தம்மெலெ சினேக உள்ளாக்கள ஹாற நடியாதெ, தெய்வ தந்தா சத்தியத அனிசரிசி, தம்மெலெ தம்மெலெ எதார்த்தமாயிற்றெ சினேகிசி சுத்த மனசு உள்ளாக்களாயிரிவா.