37 அதுகளிஞட்டு ஜனங்ஙளா கணக்கெத்தா சமெயாளெ, கலிலாக்காறனாயிப்பா யூதாஸு ஹளாவாங் பந்தட்டு, கொறே ஆள்க்காறா அவனபக்க சேர்சிதாங்; அவனும் கொந்துரு, அவன நம்பித்தா ஆள்க்காரும் செதறிண்டு ஹோதுரு.
அம்மங்ங ஏசு அவனகூடெ, நின்ன வாளின ஒறெயாளெ ஹவுக்கு; ஏனாக ஹளிங்ங, வாளு எத்தாக்க ஒக்க வாளினாளெ தென்னெ சாயிவுரு.
ஆ சமெயாளெ பேதுரு அங்களதாளெ குளுதித்தாங்; அம்மங்ங ஒந்து கெலசகார்த்தி அவனப்படெ பந்தட்டு, “நீனும் கலிலந்த பந்தா ஏசினகூடெ இத்தாவனல்லோ?” ஹளி கேட்டா.