Biblia Todo Logo
Bìoball air-loidhne

- Sanasan -




1 திமோத்தி 3:16 - Moundadan Chetty

16 தெய்வபக்தி பற்றிட்டுள்ளா மர்ம ஹளுது ஏமாரி தொட்டுது ஹளிட்டுள்ளுதங்ங ஒந்து சம்செயும் இல்லெ; கிறிஸ்து ஏசு ஈ லோகாளெ மனுஷனாயி பந்நா; கிறிஸ்து நீதி உள்ளாவனாப்புது ஹளி பரிசுத்த ஆல்ப்மாவு காட்டிதந்துத்து; தூதம்மாரும் ஏசின கண்டுரு; யூதம்மாரல்லாத்த அன்னிய ஜாதிக்காறாகூடெ ஏசினபற்றி அறிவத்தெ பற்றித்து; ஈ லோக ஜனங்ஙளு எல்லாரும் ஏசின நம்பிரு; தெய்வ பெகுமானத்தோடெ ஏசின சொர்க்காக கொண்டுஹோத்து.

Faic an caibideil Dèan lethbhreac




1 திமோத்தி 3:16
81 Iomraidhean Croise  

பொளிச்சப்பாடி ஏன ஹளிது ஹளிங்ங, ஒந்து கன்னி ஹெண்ணு பெசிறி ஆயி ஒந்து கெண்டுமைத்தித ஹெருவா; ஆ மைத்திக இம்மானுவேலு ஹளி ஹெசறு பீப்புரு, இம்மானுவேலு ஹளிங்ங தெய்வ நங்களகூடெ இத்தீனெ ஹளி அர்த்த” ஹளி ஹளிதாங்.


அதங்ங ஏசு ஆக்களகூடெ, “சொர்க்கராஜெத பற்றிட்டுள்ளா மர்மத அறிவத்தெ நிங்காக பாக்கிய கிடுத்து; எந்நங்ங மற்றுள்ளாக்காக ஆ, பாக்கிய கிட்டிபில்லெ.


அம்மங்ங பெட்டெந்நு அல்லி பயங்கர பூமிகுலுக்க உட்டாத்து; ஏனாக ஹளிங்ங ஆகாசந்த தெய்வதூதங் எறங்ஙி பந்தட்டு, கல்லறெத பாகுலின மூடி பீத்தித்தா கல்லின உருட்டி மாற்றிட்டு, அதனமேலெ குளுதாங்.


அந்த்தெ ஏசு ஸ்நானகர்ம ஏற்றெத்தி நீரிந்த கரெ ஹத்திதாங்; அம்மங்ங ஆகாச தொறது பரிசுத்த ஆல்ப்மாவு மாடம்புறாவின ஹாற எறங்ஙி தன்னமேலெ பொப்புதன ஏசு கண்டாங்.


அந்த்தெ ஹளத்தாப்பங்ங செயித்தானு ஏசினபுட்டு ஓடி ஹோயுட்டாங்; ஆகளே தெய்வதூதம்மாரு பந்தட்டு, ஏசிக பேக்காத்த சகாய ஒக்க கீதுகொட்டுரு.


அந்த்தெ, ஏசு அல்லி காடுமிருகங்ஙளா எடநடுவு நாலத்துஜின இப்பா சமெயாளெ, செயித்தானு ஏசின பரீஷணகீதாங்; அம்மங்ங, தெய்வதூதம்மாரு அல்லிக பந்து ஏசிக பேக்காத்த சகாய கீதுகொட்டுரு.


இந்த்தெ, எஜமானு ஆக்களகூடெ கூட்டகூடிகளிஞட்டு, சொர்க்காக ஹோயி தெய்வத பலபக்க மதிப்புள்ளா ஸ்தானதாளெ குளுதாங்.


ஆக்க கல்லறெ ஒளெயெ ஹுக்கி நோடங்ங, ஆக்கள பலபக்க பெள்ளெ உடுப்பு ஹைக்கி குளுதித்தா, ஒந்து பாலேகாறன கண்டு அஞ்சியுட்டுரு.


இஸ்ரேல் ஜாதிக்காரு அல்லாத்தாக்களும் தெய்வத அறிவத்தெ, ஈ ரெட்ச்சகனாயிப்பாவாங் தொட்ட பொளிச்சாயிப்பாங்; நின்ன ஜனமாயிப்பா இஸ்ரேல்காறிக இவனகொண்டு பெகுமான உட்டாக்கு” ஹளி ஹளிதாங்.


தாவீதே கிறிஸ்தின எஜமானு ஹளி ஹளிப்பங்ங, ஹிந்தெ கிறிஸ்து எந்த்தெ தாவீதின மங்ஙனாப்புது?” ஹளி கேட்டாங்.


ஆ சமெயாளெ ஆகாசந்த ஒந்து தெய்வதூதங் எறங்ஙி பந்தட்டு, ஏசின ஆசுவாசபடிசிதாங்.


ஈக்காக ஆகெ கொழப்ப ஆத்து; ஏன ஆயிக்கு ஹளி அந்த்தெ ஆலோசிண்டு நிந்திப்பங்ங, ஒள்ளெ மின்னா உடுப்பு ஹைக்கித்தா இப்புரு ஈக்கள அரியெபந்து நிந்துரு.


அந்த்தெ ஆக்கள அனிகிரிசிண்டு இப்பங்ங தென்னெ, ஏசு ஆக்களபுட்டு பிரிஞ்ஞு சொர்க்காக ஹோதாங்.


ஆ வாக்காயி இப்பாவாங் மனுஷனாயி நங்களப்படெ பந்நா; அவங் கருணெயும், சத்தியம் உள்ளாவனாயி நங்களகூடெ இத்தாங்; நங்க அவன பெகுமானத கண்டும்; தன்ன அப்பன ஒந்தே மங்ங ஹளிட்டுள்ளா அடிஸ்தானதாளெ ஆப்புது அவங்ங ஆ பெகுமான கிட்டிப்புது.


அப்பங்ங எல்லா அதிகாரதும் தன்ன கையாளெ தந்துதீனெ ஹளியும், தாங் தெய்வதப்படெந்த ஆப்புது பந்துது ஹளியும், தெய்வதப்படெ ஆப்புது திரிச்சு ஹோப்புது ஹளியும் ஏசு அருதித்தாங்.


நன்ன அப்பனப்படெந்த நா ஹளாயிப்பா ஒந்து சகாயக்காறங் நிங்களப்படெ பொப்பாங்; அவங் தென்னெயாப்புது சத்தியத ஹளிதப்பா பரிசுத்த ஆல்ப்மாவு; அவங் நன்னபற்றிட்டுள்ளா காரெ ஒக்க நிங்களகூடெ கூட்டகூடுவாங்.


நா நன்ன அப்பனப்படெந்த தென்னெயாப்புது ஈ லோகாக பந்துது; ஹிந்திகும் ஈக ஈ லோகந்த புட்டு அப்பனப்படெ தென்னெ ஹோப்புது” ஹளி ஏசு ஹளிதாங்.


அப்பா! ஈ லோக உட்டாப்புதன முச்சே நீ நன்ன பெகுமானிசித்தெ, நீ ஈகளும் நின்ன அரியெ நன்ன நிருத்தி, அதே பெகுமானத நனங்ங தருக்கு.


அல்லி பொளுத்த துணி ஹைக்கிதா எருடு தூதம்மாரா கண்டா; ஏசின சவத பீத்தித்தா சலாளெ தெலெபக்க ஒப்பனும், காலுபக்க ஒப்பனும் குளுதித்துரு.


அந்த்தெ ஆயித்தங்ங மனுஷனாயி பந்தா நா ஆதி இத்தா சலாகதென்னெ ஹத்தி ஹோப்புதன நிங்க காமங்ங எந்த்தெ இக்கு?


ஈ சம்பவ எருசலேமாளெ உள்ளா எல்லாரிகும் கொத்துட்டு; அதுகொண்டு ஆ சலாக ஆக்கள பாஷெயாளெ சோரெபூமி ஹளி அர்த்த உள்ளா அக்கெல்தமா ஹளி ஹெசறு உட்டாத்து.


அம்மங்ங பேதுரு ஆக்களகூடெ, “தெய்வ, இச்சபட்ச்ச கீவாவனல்ல.


ஆக்க அல்லி பந்தட்டு, சபெக்காரு எல்லாரினும் கூட்டிபரிசிட்டு, ஆக்களகொண்டு தெய்வ கீதா எல்லா காரெதும், அன்னிய ஜாதிக்காரு எந்த்தெ ஏசினமேலெ நம்பிக்கெ பீத்துரு ஹளிட்டுள்ளுதும் ஒக்க ஆக்காக அறிசிரு.


அதுகொண்டு தெய்வ தன்ன சொந்த சோரெயாளெ நேடிதா தன்ன சபெத மேசத்தெ, மேல்நோட்டக்காறாயிற்றெ பரிசுத்த ஆல்ப்மாவு நிங்கள நிருத்திப்புது கொண்டு நிங்களும் ஜாகர்தெயாயிற்றெ இத்தணிவா; தன்ன ஆடின ஹாற இப்பா ஜனாதும் ஜாகர்தெயாயிற்றெ நோடியணிவா.


அதனாளெ யூதம்மாரு ஹளியோ, கிரீக்கம்மாரு ஹளியோ தெய்வ வித்தியாச நோடுதில்லெ; எல்லாரிகும் தெய்வ ஒப்பனே ஒள்ளு. தெய்வமே நீனே நன்ன ஜீவித நெடத்துக்கு ஹளி ஏறொக்க தெய்வதகூடெ பிரார்த்தனெ கீதீரெயோ, ஆக்க எல்லாரிகும் எல்லா நன்மெகளும் கொடத்தெ சக்தி உள்ளாவனாப்புது தெய்வ.


அந்த்தெ ஆதங்ங, ஏசுக்கிறிஸ்து கீதிப்புதன பற்றிட்டுள்ளா ஒள்ளெவர்த்தமானத இஸ்ரேல்காரு கேட்டுபில்லெ ஹளி ஹளத்தெ பற்றுகோ? அந்த்தெ ஹளத்தெபற்ற; ஏனாக ஹளிங்ங, “ஏசு கீதுதன பற்றிட்டுள்ளா ஒள்ளெவர்த்தமான ஈ லோகத மூலெ முடுக்கினாளெ ஒக்க ஹோயி எத்தித்து” ஹளி தெய்வத புஸ்தகதாளெ ஹடதெயல்லோ?


ஒரிக்கிலும் பொள்ளு ஆக; எந்த்தெ ஹளிங்ங, ஹளிதா வாக்கின நிவர்த்திகீவா காரெயாளெ சத்திய உள்ளாவாங் தெய்வ மாத்தற ஒள்ளு; மனுஷம்மாரு ஒக்க பொள்ளம்மாராப்புது; ஏனாக ஹளிங்ங, “நீ ஹளிதா வாக்குகொண்டு நின்ன விசாரணெ கீவுரு; அந்த்தெ விசாரணெ கீவதாப்பங்ங நீ தீர்ச்செயாயிற்றும் ஜெயிப்பெ” ஹளி தெய்வத புஸ்தகதாளெ எளிதி ஹடதெ.


எந்த்தெ ஹளிங்ங, நீ ஒள்ளேவனாயி ஜீவுசத்தெபேக்காயிற்றெ தெய்வ தந்தா தன்ன நேமத அடிஸ்தானதாளெ நின்னகொண்டு ஒயித்தாயி ஜீவுசத்தெ பற்றிபில்லெ; ஆ ஹேதினாளெ நீ சாவினாளெ குடிங்ஙித்தெ, அந்த்தெ குடிங்ஙித்தா நின்ன, தெய்வ கண்டட்டு, தன்ன மங்ஙன மனுஷனாயி ஹளாயிச்சு, சாவிந்த நின்ன ஹிடிபுடிசித்து.


அதுமாத்தறல்ல, ஆக்கள கார்ணம்மாராகூடெ ஒள்ளெ ஒந்து பெந்தம் சந்தோஷும் தெய்வாக உட்டாயித்து; அதுகொண்டு சடெசிக தன்ன மங்ஙனாயிப்பா ஏசுக்கிறிஸ்தினும் ஆ சமுதாயதாளெ ஹுட்டத்தெ மாடித்து; ஆ தெய்வ ஒப்பங்ஙே எந்தெந்தும் பெகுமான உட்டாட்டெ; ஆமென்.


எந்த்தெ ஹளிங்ங, ஆதியத்த மனுஷனாயிப்பா ஆதாமு மண்ணிந்த உட்டாதாவனாப்புது; எந்நங்ங, எறடாமாத்து பந்தா மனுஷனாயிப்பா கிறிஸ்து சொர்க்கந்த பந்நாவனாப்புது.


எந்த்தெ ஹளிங்ங, நங்க கூட்டகூடா தெய்வத பற்றிட்டுள்ளா ஆ புத்தி இதுவரெ மர்மமாயிற்றெ இத்து; எந்த்தெ ஹளிங்ங, லோகாளெ உள்ளா எல்லதனும் உட்டுமாடுதன முச்சே தெய்வ அந்த்தெ தீருமானிசித்து; ஆ புத்தித ஒளெயெ ஆப்புது நங்காக கிட்டத்துள்ளா மதிப்புள்ளா ஜீவிதும் அடங்ஙி இப்புது.


ஏனாக ஹளிங்ங, அந்த்தெ ஜீவுசத்தெ ஆப்புது தெய்வத மங்ஙனாயிப்பா ஏசுக்கிறிஸ்து நங்காக ஹளிதந்திப்புது; அதுமாத்தற அல்ல, கீவத்தெ இஷ்டில்லாத்த ஒந்து காரெத ஏசு கீயக்கெ ஹளி ஹளுதில்லெ; அந்த்தெ தென்னெயாப்புது நானும், சில்வானு, திமோத்தியும்கூடி, தெய்வகாரெபற்றி நிங்களகூடெ ஹளிப்புது.


அந்த்தெ தெய்வ, பேதுறின இஸ்ரேல்காறிக அப்போஸ்தலனாயிற்றெ இப்பத்தெ சக்தி கொட்டு நேமிசிப்பா ஹாற தென்னெ, நனங்ஙும் அன்னிய ஜாதிக்காறிக அப்போஸ்தலனாயிற்றெ இப்பத்தெ சக்திதந்து நேமிசி ஹடதெ.


எந்நங்ங தெய்வ தீருமானிசித்தா தக்க சமெ ஆப்பதாப்பங்ங, தன்ன மங்ஙனாயிப்பா கிறிஸ்தின ஒந்து ஹெண்ணின ஹொட்டெயாளெ ஹுட்டத்தெ மாடி, யூதம்மாரா நேமத அனிசரிசி ஜீவுசத்தெ மாடித்து.


நங்களகொண்டு இதுவரெ மனசிலுமாடத்தெ பற்றாதித்தா தன்ன கருணெத தன்ன மங்ஙனாயிப்பா ஏசுக்கிறிஸ்தினகொண்டு நங்க அறீக்கு ஹளிட்டுள்ளுதாப்புது தன்ன மனசிக சந்தோஷ ஆதுது.


அதுமாத்தறல்ல, நா ஒள்ளெவர்த்தமான அருசதாப்பங்ங அதனாளெ ஹளிப்பா சொகாரெத மனசிலுமாடத்தெகும், தைரெயாயிற்றெ கூட்டகூடத்தெ பேக்காயும் பிரார்த்தனெ கீயிவா.


அது எந்த்தெ ஹளிங்ங ஏசுக்கிறிஸ்தின பற்றிட்டுள்ளா ஆ ஒள்ளெவர்த்தமானத புட்டுடாதெ கடெசிவரெட்டும் நம்பிக்கெயோடெ ஒறச்சு நிந்நங்ங, நிங்க தெய்வதகூடெ பெந்த உள்ளாக்களாயிற்றெ இப்பத்தெ பற்றுகு; ஈ ஒள்ளெவர்த்தமான தென்னெயாப்புது பூமியாளெ உள்ளா எல்லா மனுஷரிகும் அறிசிபொப்புது; பவுலு ஹளா நானும் ஆ கெலச தென்னெயாப்புது கீதண்டிப்புது.


எந்த்தெ ஹளிங்ங, ஈ லோகாளெ உள்ளா எல்லா ஜாதிக்காறிகும் ஏசுக்கிறிஸ்தினகொண்டு தெய்வதகூடெ பெந்த உள்ளாக்களாயிற்றெ இப்பத்துள்ளா பாக்கிய கிட்டீதல்லோ? ஈ ஒள்ளெவர்த்தமான இந்துவரெட்ட சொகாரெயாயிற்றெ தென்னெ உட்டாயித்து; எந்நங்ங தெய்வ அதன இந்துள்ளா சபெக்காறிக அருசத்தெ ஆக்கிரிசிது கொண்டு, ஆ தெய்வதகூடெ சேரத்துள்ளா பாக்கிய நிங்காகும் கிடுத்தல்லோ? அது எத்தஹோற தொட்ட பாக்கிய.


ஏசுக்கிறிஸ்தினகொண்டு மனுஷம்மாராமேலெ தெய்வ கருணெ காட்டீதெ ஹளிட்டுள்ளா சத்தியநேரு உள்ளா ஈ ஒள்ளெவர்த்தமானத நிங்க மனசிலுமாடிதா ஜினந்த நிங்க கிறிஸ்திக பேக்காயி ஜீவிசீரெ; ஈ ஒள்ளெவர்த்தமானத கேளா லோக முழுக்க உள்ளா ஒந்துபாடு ஜனங்ஙளும் நிங்கள ஹாற தென்னெ ஜீவிசீரெ.


மனசொறப்புள்ளாக்களாயி தம்மெலெ தம்மெலெ ஒந்தே சினேக உள்ளாக்களாயிருக்கு ஹளிட்டுள்ளுதாப்புது நன்ன ஆசெ. அதுமாத்தறல்ல தெய்வ சொகாரெயாயிற்றெ பீத்தித்தா அறிவாயிப்பா ஏசுக்கிறிஸ்தினபற்றி நிங்க எல்லாரும் அறீக்கு ஹளிட்டுள்துளும் தென்னெயாப்புது நன்ன ஆக்கிர; ஈ ஏசினபற்றி அறிவத்தெ பற்றிது நிங்காக கிட்டிதா தொட்ட ஒந்து சொத்து ஆப்புது.


எந்நங்ங தெய்வ தன்ன பரிசுத்தம்மாரா கொண்டும், தன்ன நம்பிதா எல்லாரினகொண்டும் பெகுமானும் மதிப்பும் கிட்டத்தெபேக்காயி பொப்பா அந்தத்தஜின, ஆ கூட்டதாளெ நிங்களும் இப்புரு; ஏனகொண்டு ஹளிங்ங, நங்க நிங்களகூடெ ஹளிதா ஒள்ளெவர்த்தமானத கேட்டு நிங்களும் நம்பிறல்லோ?


துஷ்டனாயிப்பா அவங் செல ஆள்க்காறாகொண்டு ஈகளே தெய்வாக எதிராயிற்றுள்ளா பல காரெத சொகாரெயாயிற்றெ கீதண்டித்தீனெ; எந்நங்ங ஆ துஷ்டப்பிரவர்த்திகாறங் தன்ன ஜனங்ஙளா முந்தாக பூரணமாயிற்றெ காட்டத்தெ பற்றாத்த ஹாற பேறெ ஒப்பாங் அவன தடுத்து பீத்துதீனெ; தடுப்பாவனாயிப்பா அவங் ஈ பூமியாளெ இல்லாதெ ஆப்பாவரெட்ட, எல்லாரிகும் காம்பா ஹாற உள்ளா ஆ துஷ்டன பிறவர்த்தித ஒப்புரும் காம்பத்தெபற்ற.


தெய்வ ஆக்காக மனசிலுமாடி கொட்டா நம்பிக்கெத சுத்த மனசாட்ச்சியோடெ காத்து நெடதணுக்கு.


தெய்வ ஏற ஹளிட்டுள்ளுதனும், தெய்வத மதிப்பு ஏன ஹளிட்டுள்ளுதனும் தன்ன மங்ஙனாயிப்பா ஏசு காட்டீனெ; அவங் தன்ன வாக்கின சக்திகொண்டு, ஈ லோகாளெ உள்ளா எல்லதனும் தாஙி நிருத்தாவனும் ஆப்புது; அவங் மனுஷம்மாரா தெற்று குற்றத ஷெமிச்சு களிஞட்டு, சொர்க்காளெ இப்பா தன்ன அப்பன பலபக்க உள்ளா மதிப்புள்ளா சலதாளெ ஹோயி குளுதுதீனெ.


நங்காக நம்பிக்கெ தந்து, தொடங்ஙி பீப்பாவனும், அதன நிவர்த்தி கீவாவனுமாயிப்பா ஏசினமேலெ நங்கள கண்ணு இறபேக்காத்து; தனங்ங கிட்டத்துள்ளா சந்தோஷத ஓர்த்து, அவமானத வகெபீயாதெ குரிசு பாடின சகிச்சாங்; அதுகொண்டு ஈக தெய்வத பலபக்க குளுதுதீனெ.


தொட்டாவனாப்புது சிண்டாவன அனிகிருசுது; ஈ காரெயாளெ சம்செ இல்லெ.


இதுவரெ ஹளிதன அர்த்த ஏன ஹளிங்ங, இப்பிரகாரமாயிற்றுள்ளா ஒந்து தொட்ட பூஜாரி சொர்க்காளெ இப்பா தெய்வத பலபக்க குளுதுதீனெ ஹளிட்டுள்ளுது தென்னெயாப்புது.


ஆக்க ஈ காரெ ஒக்க ஒயித்தாயி கண்டுஹிடுத்து அறிசிது, ஆ காலதாளெ ஜீவிசிதா ஜனங்ஙளிக பேக்காயிற்றெ அல்ல; நிங்காக பேக்காயிற்றெ ஆப்புது; சொர்க்கந்த பந்தா அதே பரிசுத்த ஆல்ப்மாவினகொண்டு தென்னெயாப்புது நங்களும் ஒள்ளெவர்த்தமானமாயிற்றெ நிங்களகூடெ இந்தும் அறிசிண்டிப்புது; இதன ஒக்க காம்பத்தெபேக்காயி தெய்வ தூதமாருகூடி கொதிச்சண்டு இத்தீரெ.


ஈ லோக உட்டாப்புதன முச்சே ஏசுக்கிறிஸ்தினகொண்டு நங்கள தெரெஞ்ஞெத்திதா தெய்வ, நங்கள ரெட்ச்செக பேக்காயி ஈ கடெசி காலதாளெ பூமியாளெ ஏசின ஹுட்டத்தெமாடிது.


ஏசுக்கிறிஸ்தின கொண்டாப்புது நிங்க தெய்வதமேலெ நம்பிக்கெ பீத்திப்புது; சத்தா ஏசின தெய்வ ஜீவோடெ ஏள்சி பெகுமானிசிப்புது கொண்டு, தெய்வ நிங்களும் ஜீவோடெ ஏளுசுகு ஹளிட்டுள்ளா நம்பிக்கெயாளெ நிங்க காத்திருக்கு.


ஏனாக ஹளிங்ங, ஏசுக்கிறிஸ்து நங்க கீதா குற்றாகபேக்காயி ஒந்து பரச சத்துகளிஞுத்து; சத்தியநேரு உள்ளாவனாயிப்பா கிறிஸ்து, சத்தியநேரு இல்லாத்த நங்கள எல்லாரினும் தெய்வதகூடெ சேர்சத்தெ பேக்காயாப்புது சத்துது; ஜனங்ஙளு கிறிஸ்தின சரீரத மாத்தற கொந்துரு; எந்நங்ங தன்ன ஆல்ப்மாவு ஜீவோடெ தென்னெ உட்டாயித்து.


அந்த்தெ ஜீவோடெ எத்தா ஏசுக்கிறிஸ்து சொர்க்காளெ இப்பா தெய்வதகூடெ குளுது, தூதம்மாரினும் ஆக்கள எல்லா அதிகாரதும், சக்திதும் தன்ன கீளேக மாடிதீனெ.


ஈ லோக உட்டாப்புதன முச்சே அப்பனாயிப்பா தெய்வதகூடெ நித்தியஜீவ வஜனமாயிற்றெ இத்தாவாங் மனுஷனாயி ஹுட்டி பந்துதன நங்கள கண்ணாளெ கண்டட்டு, அவனகொண்டு நங்க எல்லாரிகும் எந்தெந்தும் ஜீவுசத்துள்ளா சாவில்லாத்த ஜீவித கிட்டுகு ஹளிட்டாப்புது அவனபற்றி நிங்களகூடெ ஹளுது.


எந்நங்ங தெய்வ நேமத மீறிதா எல்லாரின தெற்று குற்றாதும் நீக்கத்தெ பேக்காயாப்புது, ஏசுக்கிறிஸ்து ஈ பூமிக மனுஷனாயி பந்துது; எந்நங்ங ஏசுக்கிறிஸ்து ஒந்து தெற்று குற்றும் கீதுபில்லெ.


எந்நங்ங தெய்வ நேமத மீறி தெற்று குற்ற கீவா எல்லாரும் செயித்தானின ஹிடியாளெ உள்ளாக்களாப்புது; எந்த்தெ ஹளிங்ங, பண்டிந்தே தெய்வ நேமத மீறி தெற்று குற்ற கீவாவாங் பிசாசு தென்னெயாப்புது; ஆ பிசாசின பிறவர்த்தித ஒந்தும் இல்லாதெ மாடத்தெ பேக்காயாப்புது தெய்வத மங்ங ஈ லோகாக மனுஷனாயிற்றெ பந்துது.


அர்த்த மனசிலாகாத்த ஒந்து ஹெசறும், அவள நெற்றிமேலெ உட்டாயித்து; “மகா பாபிலோன் பட்டணதாளெ உள்ளா பேசிகளிகும், பூமியாளெ உள்ளா எல்லா அறப்பிகும் அவ்வெ” ஹளி ஆயித்து அதன அர்த்த.


அம்மங்ங, ஆ தூதங் நன்ன நோடிட்டு, “நீ ஆச்சரியபடுது ஏக்க? அவள பற்றிட்டுள்ளா சொகாரெயும், அவள ஹொத்தண்டு ஹோப்பா மிருகத பற்றிட்டுள்ளா சொகாரெயும் ஏன ஹளி, நா நினங்ங ஹளிதரக்கெ; ஆ மிருகாக ஏளு தெலெயும், ஹத்து கொம்பும் ஹடதெயல்லோ!


அதுகளிஞட்டு, ஒப்பனகொண்டும் எணுசத்தெ பற்றாத்த கொறே ஆள்க்காறா கண்டிங்; ஆக்க ஒக்க, எல்லா ஜாதிந்தும், எல்லா நாடிந்தும், எல்லா கோத்தறந்தும் பந்தா எல்லாவித பாஷெயும், கூட்டகூடா ஜனங்ஙளாப்புது; ஆக்க, சிம்மாசனத முந்தாகும், ஆடுமறியாயிப்பாவன முந்தாகும் நிந்தித்துரு; ஆக்க, நீண்ட பெள்ளெ உடுப்பு ஹைக்கிட்டு, ஈத்தப்பனெத கூம்பு ஓலெதும் கையாளெ ஹிடுத்தண்டு நிந்தித்துரு;


Lean sinn:

Sanasan


Sanasan