Biblia Todo Logo
Bìoball air-loidhne

- Sanasan -




1 கொரிந்தி 9:24 - Moundadan Chetty

24 ஒந்து ஓட்டப்பந்தயதாளெ கொறே ஆள்க்காரு ஓடிதங்ஙும், சம்மான ஒப்பங்ஙே கிட்டுகு ஹளி நிங்காக கொத்துட்டல்லோ! ஆக்க சம்மானகாயிற்றெ ஓடாஹாற, நிங்களும் தெய்வாபேக்காயிற்றெ கெலசகீயிவா.

Faic an caibideil Dèan lethbhreac




1 கொரிந்தி 9:24
18 Iomraidhean Croise  

ஏனாக ஹளிங்ங, தெற்று குற்ற கீது நெடதங்ங சாயிவத்தெ ஆக்கு ஹளியும், தெய்வத கருணெ அனிசரிசி நெடதங்ங சத்தியநேரு உள்ளாவனாயிற்றெ மாறக்கெ ஹளியும், நிங்காக கொத்துட்டல்லோ?


தெய்வத அம்பலதாளெ பூஜாரிமாராயி இப்பாக்க, ஜனங்ஙளு அல்லி கொண்டுபொப்பா ஹரெக்கெந்த ஆக்கள ஆவிசெக ஒந்து பங்கின பொடிசீரெ ஹளிட்டுள்ளுது நிங்காக கொத்தில்லே?


ஏசினபற்றிட்டுள்ளா ஒள்ளெவர்த்தமானத எல்லாரிகும் அருசத்தெகும், அதுகொண்டு பொப்பா அனுக்கிரக எல்லாரிகும் கிட்டத்தெ பேக்காயிற்றும் ஆப்புது நா அந்த்தெ கீதண்டிப்புது.


அதுகொண்டு, தெய்வத கையிந்த சம்மான கிட்டுகோ, கிட்டோ ஹளிட்டுள்ளா சம்செயாளெ கெலசகீயாதெ, தீர்ச்செயாயிற்றும் சம்மான பொடுசுவிங் ஹளிட்டுள்ளா நம்பிக்கெயாளெ ஆப்புது நா கெலசகீவுது; அல்லிங்ஙி நா காற்றினகூடெ குஸ்திகூடா ஹாறல்லோ இக்கொள்ளு?


“நீ எருசலேமிக ஹோக்கு” ஹளிட்டுள்ளா சிந்தெ தெய்வ நன்ன மனசினாளெ காட்டிதந்துத்து; அதுகொண்டாப்புது நா அல்லிக ஹோதுது; அன்னிய ஜாதிக்காறாகூடெ ஒள்ளெவர்த்தமான அருசதாப்பங்ங ஏனொக்க ஹளிதிங் ஹளிட்டுள்ளுதன பற்றி, அல்லிப்பா சபெ மூப்பம்மாராகூடெ மாத்தற பிவறாயிற்றெ கூட்டகூடிதிங்; ஏனாக ஹளிங்ங, நா நேரத்தெ கீதுதும் ஈக கீதண்டிப்புதும் ஒக்க பொருதெ ஆக்கோ ஹளிட்டுள்ளா அஞ்சிக்கெ உட்டாயித்து.


ஏசுக்கிறிஸ்து நிங்காகபேக்காயி கீதுதன ஒக்க நம்பி ஒயித்தாயி ஜீவிசிண்டித்துரு; எந்நங்ங ஈக நிங்கள ஆ சத்தியமாயிற்றுள்ளா காரெத அனுசருசத்தெ பாடில்லெ ஹளி நிங்கள தடுத்துது ஏற?


நித்தியஜீவங் தப்பா ஒள்ளெவர்த்தமானதாளெ ஹளிப்பா ஹாற நெடதணிவா; அம்மங்ங நா கஷ்டப்பட்டுதும் கெலசகீதுதும் ஒந்தும் பொருதெ ஆயிபில்லெ ஹளி கிறிஸ்து பொப்பா ஜினதாளெ நனங்ங நிங்களபற்றி பெருமெ ஹளத்தெ பற்றுகு.


இதொக்க நனங்ங கிடுத்து ஹளியோ, நா தெகெஞ்ஞாவனாயுட்டிங் ஹளியோ பிஜாரிசிபில்லெ; கிறிஸ்து ஏசு நன்ன தெரெஞ்ஞெத்திது கொண்டு, தாங் ஆக்கிரிசிதா ஹாற உள்ளா ஒந்து மனுஷனாயி ஆப்பத்தெ நா தொடர்ந்நு கஷ்டப்படுதே ஒள்ளு; இதொக்க தென்னெயாப்புது நன்ன உத்தேச.


சரீர தெலெதகூடெ சேர்ந்நு, ஒந்நொந்து பாகம் ஒந்தாயி சேர்நிப்பா ஹாற நேராயிற்றெ எல்லாரிகும் தெலெயாயிற்றெ ஏசுக்கிறிஸ்தின அங்ஙிகரிசி தெய்வதகூடெ பெந்த உள்ளாக்களாயி ஜீவிசிவா; அதன புட்டட்டு ஒந்நங்ஙும் உபகார இல்லாத்த சொந்த பிஜாரதாளெயும், கனசு கண்டுதன பீத்தண்டும், தாழ்மெ உள்ளாக்கள ஹாற நடிச்சண்டு, தெய்வ உட்டுமாடிதா தூதம்மாரா கும்முட்டண்டும் நெடிவாக்களகூடெ கூடி ஜீவிசிதுட்டிங்ஙி, தெய்வ நிங்காகபேக்காயி பீத்திப்பா சம்மான கிட்டாதெ (அனுக்கிரக) ஆயிண்டுஹோக்கு.


“அதுகொண்டு மளெமோடத ஹாற ஈமாரி சாட்ச்சிக்காரு நங்கள சுத்தூடும் இப்பதாப்பங்ங, எல்லாவித தடசதும், தெற்று குற்ற கீசத்தெபேக்காயி நங்கள ஹிடுத்து முறிக்கிண்டிண்டிப்பா எல்லா சொபாவத கொடது எருதட்டு, நங்கள முந்தாக பீத்திப்பா பந்தயதாளெ மனசொறப்போடெ ஓடத்தெ நோடுவும்.


தெய்வத நம்பி, கஷ்ட பந்நங்கூடி அதனொக்க சகிச்சு பொருமெயாயிற்றெ ஜீவுசாவாங் பாக்கியசாலி ஆப்புது; எந்த்தெ ஹளிங்ங, நன்ன சினேகிசா எல்லாரிகும் நா ஒள்ளெ ஜீவித கொடுவிங் ஹளி தெய்வ ஒறப்பாயிற்றெ வாக்கு ஹளி ஹடதெயல்லோ?


நா பிரிக பொப்பத்தெ ஹோதீனெ! நினங்ஙுள்ளா கிரீடத பேறெ ஒப்புரும் கொண்டுஹோகாதெ நோடிக! நினங்ங கிட்டிதன முறிக்கி ஹிடுத்தாக.


Lean sinn:

Sanasan


Sanasan