16 பேசித்தர கீவத்தெபேக்காயி பேசிதகூடெ கூடாவாங் அவளகூடெ ஒந்தே சரீரமாயிற்றெ ஆதீனெ ஹளியும் கொத்துட்டல்லோ! அதுகொண்டாப்புது ‘இப்புரும் ஒந்தே சரீமாயிற்றெ ஆப்புரு’ ஹளி தெய்வத புஸ்தகதாளெ எளிதிப்புது.
ஆக்க இப்புரும் ஒந்தாயுடுரு; இனி ஆக்க இப்புரு அல்ல, ஒந்தே சரீராயிப்புரு.
நங்க, தூதம்மாராகூடிங் ஞாயவிதியக்கெ; அந்த்தெ இப்பங்ங அந்தந்து நங்கள ஜீவிதாளெ பொப்பா சிண்ட சிண்ட பிரசனங்ஙளா நிங்களகொண்டு தீப்பத்தெ பற்றோ?
அதுகொண்டாப்புது மொதேகளிஞ்ஞா கெண்டாக்க தங்கள அவ்வெஅப்பன மெனெந்த பேறெ கடது ஹிண்டுறாகூடெ ஒந்தாயி ஜீவுசுரு ஹளியும், இஞ்ஞி ஆக்க இப்புரும் பேறெ பேறெ சரீரமாயிற்றெ அல்ல, ஒந்தே சரீரமாயிற்றெ ஜீவுசுரு ஹளியும் தெய்வத புஸ்தகதாளெ எளிதிப்புது.
ராகாபு ஹளா பேசி, ஒற்றுகாறா சமாதானமாயிற்றெ சீகரிசிதும், தெய்வத அனிசரிசாத்த ஜனதகூடெ சத்து ஹோகாதெ இத்துதும், ஈ நம்பிக்கெயாளெ தென்னெயாப்புது.