Biblia Todo Logo
Bìoball air-loidhne

- Sanasan -




1 கொரிந்தி 15:1 - Moundadan Chetty

1 கூட்டுக்காறே! நா நிங்காக அறிசிதா ஒள்ளெவர்த்தமானத நிங்க ஏற்றெத்தி நெலச்சு நிந்துதீரல்லோ! அதன நா ஒம்மெகூடி ஓர்மெபடுசுக்கு ஹளி பிஜாருசுதாப்புது.

Faic an caibideil Dèan lethbhreac




1 கொரிந்தி 15:1
22 Iomraidhean Croise  

நன்ன வாக்கின தள்ளி, நன்ன அங்ஙிகரிசாத்தாக்கள ஞாயவிதிப்பத்தெ ஒந்து காரெ ஹடதெ; அது ஏன ஹளிங்ங நா கூட்டகூடிதா வாக்கு தென்னெயாப்புது; ஆ வாக்கு கடெசி ஜினாளெ ஆக்கள ஞாயவிதிக்கு.


அன்னிய ஜாதிக்காரும் தெய்வ வஜன ஏற்றெத்திரு ஹளிட்டுள்ளுதன அப்போஸ்தலம்மாரும், யூதேயா தேசதாளெ ஏசின நம்பா கூட்டுக்காரும் அருதுரு.


பேதுறின வாக்கு கேட்டாக்க ஒக்க சந்தோஷத்தோடெ ஸ்நானகர்ம ஏற்றெத்திரு; அந்தத்தஜின ஏகதேச மூவாயிர ஆள்க்காறா தெய்வ சபெயாளெ சேர்சிரு.


பற்ற! எந்த்தெ ஹளிங்ங, யூதம்மாராயிப்பா ஆக்க, தெய்வதமேலெ நம்பிக்கெ பீயாத்துது கொண்டாப்புது, தெய்வ ஆக்கள பெட்டி எருதுது; எந்நங்ங நிங்க, தெய்வதமேலெ நம்பிக்கெ பீத்திப்பா ஹேதினாளெ தெய்வ நிங்கள தன்னகூடெ ஒடிசித்து; அதுகொண்டு, நங்க தெய்வதகூடெ சேர்ந்நு இப்பாக்களாப்புது ஹளி பெருமெ ஹளத்தெ நில்லாதெ, தெய்வாக அஞ்சி நெடதணிவா; ஏனாக ஹளிங்ங, தெய்வதமேலெ உள்ளா நிங்கள நம்பிக்கெ நஷ்டப்படத்தெ பாடில்லெயல்லோ! அதங்ங பேக்காயிற்றெ ஆப்புது.


நா இதொக்க ஹளுது ஏனாக ஹளிங்ங, தெய்வ ஞாயவிதிப்பா ஜினதாளெ மனுஷரு சொகாரெயாயிற்றெ கீதா தெற்று குற்றத ஒக்க, ஏசுக்கிறிஸ்தின பற்றிட்டுள்ளா ஒள்ளெவர்த்தமானத அடிஸ்தானங்கொண்டு தெய்வ ஆக்கள ஞாயவிதிக்கு.


ஆ ஜீவித தெய்வத கருணெயாளெ ஆப்புது நங்காக கிட்டிப்புது ஹளி பெருமெ ஹளத்தாப்பங்ங, கிறிஸ்திக கிட்டா பெகுமானதாளெ நங்காகும் ஒந்து பங்கு உட்டு ஹளிட்டுள்ளா நம்பிக்கெயோடெ ஜீவுசக்கெ.


உணர்வோடெ இரிவா; நம்பிக்கெயாளெ நெலச்சிரிவா; தைரெ உள்ளாக்களாயிரிவா; சக்தி உள்ளாக்களாயிரிவா.


தோட்டதாளெ ஒந்து பித்து நடா ஹாற நா நட்டிங், அப்பொல்லோ அதங்ங, நீரு ஹுயிதாங், எந்நங்ங தெய்வ தென்னெயாப்புது பெளெவத்தெ மாடிது.


ஏனாக ஹளிங்ங, நிங்காக புத்தி ஹளிதப்பத்தெ ஒந்துபாடு ஆள்க்காரு உட்டாக்கு; ஒந்து அப்பனஹாற நிங்கள நெடத்தத்தெ நானல்லாதெ பேறெ ஏற இத்தீரெ? ஏனாக ஹளிங்ங, நா கிறிஸ்தின பற்றிட்டுள்ளா ஒள்ளெவர்த்தமானத நிங்காக அறிசி, நிங்க கிறிஸ்தின மக்களாயிற்றெ ஹுட்டத்தெ ஆதுது நன்னகொண்டல்லோ!


ஏனாக ஹளிங்ங, இந்த்தெதென்னெ தெய்வத நம்புக்கு ஹளி, நா நிங்கள நிர்பந்துசுதில்லெ; நிங்க தொடர்ந்நு ஏசினமேலெ நம்பிக்கெ பீத்து ஜீவிசீரெ ஹளி நங்காக ஒறப்புட்டு; நிங்க இனியும் கூடுதலு சந்தோஷமாயிற்றெ சகாசிதப்பத்தெ நங்க ஆக்கிரிசீனு.


அதுகொண்டு, நிங்கள கஷ்டதாளெ ஒக்க தெய்வத வாக்கின சீகரிசி, பரிசுத்த ஆல்ப்மாவு தப்பா சந்தோஷத்தோடெ ஜீவிசிண்டித்துரு. ஏசுக்கிறிஸ்து எந்த்தெ ஜீவிசிதாங் ஹளியும், நங்க எந்த்தெ ஜீவிசிதும் ஹளியும் ஒக்க மனசிலுமாடிட்டு, அதனபிரகார ஜீவிசீரெ.


அதுமாத்தறல்ல, தெய்வத வாக்கின நிங்காக ஹளிதப்பங்ங, நிங்க அதன மனுஷம்மாரா வாக்காயிற்றெ பிஜாருசாதெ, அது நேராயிற்றும் தெய்வத வாக்குதென்னெ ஹளி நம்பி ஏற்றெத்திரு; அதங்ஙபேக்காயி நங்க தெய்வாக ஏகோத்தும் நண்ணி ஹளுதாப்புது. ஆ வாக்கு தெய்வத வாக்காயிற்றெ நம்பி ஏற்றெத்திதாக்கள ஜீவிதாளெ ஒள்ளெ பல கீதாதெ.


கூட்டுக்காறே! கடெசிக நனங்ங நிங்களகூடெ ஹளத்துள்ளுது ஏன ஹளிங்ங, தெய்வாக இஷ்டப்பட்டா ஹாற எந்த்தெ ஜீவுசுக்கு ஹளிட்டுள்ளுதன ஏசுக்கிறிஸ்தினகொண்டு நிங்காக படிசிதந்நனல்லோ? அந்த்தெ தென்னெ ஜீவிசீரெ, அதனாளெ இனியும் ஒந்து முன்னேற்ற உட்டாவுக்கு ஹளி ஏசுக்கிறிஸ்து நங்களகூடெ ஹளிதா ஹாற தென்னெ நா நிங்களகூடெ ஹளுதாப்புது.


அதுமாத்தற அல்ல, நங்க நிங்காக படிசிதந்தா தெய்வகாரெ ஒக்க கைக்கொண்டு நெடியாத்த மடியம்மாரு இத்தீரல்லோ, அந்த்தலாக்க ஆக்கள சொந்த இஷ்டப்பிரகார நெடிவாக்களும், ஒந்து உத்தரவாதும் இல்லாத்தாக்களாப்புது; நிங்க அந்த்தலாக்கள புட்டு மாறிவா ஹளி ஏசுக்கிறிஸ்தின அதிகார ஹளுதாப்புது.


தெய்வத எதார்த்தமாயிற்றுள்ளா தயவின பற்றி நிங்காக அருசத்தெகும், நிங்கள சந்தோஷப்படுசத்தெகும் பேக்காயி சத்தியநேரோடெ நெடிவா நன்ன தம்ம சில்வானின கொண்டு ஈ கத்து நா எளிசிது; அதுகொண்டு தெய்வத தயவினாளெ ஒறச்சு நிந்நணிவா; தெய்வ நம்பிக்கெயாளெ ஒறப்புள்ளா அவங் நனங்ங தம்மன ஹாற ஆப்புது.


Lean sinn:

Sanasan


Sanasan