14 அதே ஹாற ஒந்து கெண்டு, ஹெண்ணாகள ஹாற தெலெமுடி நீட்டி பீத்தங்ங, கெண்டிகுள்ளா மதிப்பு அவங்ங கிட்டுகோ?
அதங்ங ஏசு, “நா பேயி ஹிடுத்தாவனல்ல, நா நன்ன அப்பன பெகுமானிசீனெ, எந்நங்ங நிங்க நன்ன பெகுமானிசுதில்லெ.
அதுகொண்டு ஹெண்ணாக தெலெ மூடாதெ தெய்வதகூடெ பிரார்த்தனெ கீவத்தெ பாடுட்டோ? அது செரி ஆயிக்கோ ஹளி நிங்களே சிந்திசிநோடிவா.
அதேசமெ ஹெண்ணு அவள தெலெமுடி நீட்டிதங்ங அவாக ஹெண்ணிகுள்ளா மதிப்பு கிட்டுகு; ஒந்து ஹெண்ணு தன்ன கெண்டனகீளேக இத்தாளெ ஹளிட்டுள்ளுதங்ங அடெயாளமாயிற்றெ ஆப்புது தெய்வ அவாக தெலெமுடி நீளமாயிற்றெ கொட்டிப்புது.
தெளிவில்லாத்த காரெ ஏதிங்ஙி அறீக்கு ஹளி ஹெண்ணாக பிஜாரிசிதுட்டிங்ஙி ஊரிக ஹோயி ஆக்கள கெண்டாக்களகூடெ கேட்டறிவுதாப்புது ஒள்ளேது; ஹெண்ணாக சபெயாளெ கூட்டகூடுது அவாக நாணக்கேடாயி இக்கு.