Biblia Todo Logo
Bìoball air-loidhne

- Sanasan -

வெளி. காரியகோளு 18 - சொர்கக்கு வழிநெடசுவுது புஸ்தகா


பாபிலோனு அழுஞ்சோவுது

1 இதுகோளியெ இந்தால இன்னொந்து தூதாளு சொர்கதுல இத்து எறங்கி பருவுதுன நோடிதே. அவ தும்ப அதிகாரா இருவோனாங்க இத்தா. அவுனோட பிரகாசதுனால பூமிவு பிரகாசவாங்க ஆத்து.

2 அவ தும்ப தொட்டு சத்தவாங்க, “அழுஞ்சோத்து, தும்ப தொட்டு பட்டணவாத பாபிலோனு அழுஞ்சோத்து. ஈக அது பேய்கோளு ஒக்கலு இருவுது எடவாங்கவு, கெட்ட ஆவிகோளு பதுக்குவுது எடவாங்கவு, தும்ப அருவெருப்பாத பறவெகோளு இருவுது கூடாங்கவு ஆயோத்து.

3 அவுளோட வேசித்தனவாத தும்ப உளியேறித திராச்செ ரசான எல்லா ஜாதிஜனகோளுவு குடுதுரு. பூமில இருவுது எல்லா ராஜாகோளுவு அவுளுகூட சேந்து வேசித்தனா மாடிரு. தொட்டு அணகாரி அம்புது அவுளோட பெருமெனால பூமில இருவுது பேப்பாரிகோளு அணகாரராங்க ஆதுரு” அந்தேளிதா.

4 அப்பறா சொர்கதுல இத்து பந்த இன்னொந்து சத்து ஏளிதுன கேளிதே. அது, “நன்னு ஜனகோளே, நீமு அவுளோட பாவகோளுல பங்கு எத்துலாங்கவு, அவுளியெ பருவுது தொட்டு கஷ்டகோளு நிமியெ பர்லாங்க இருவுக்குவு அவுளுன புட்டுகோட்டு பெளியே பந்துபுடுரி.

5 ஏக்கந்துர அவுளு மாடுவுது பாவகோளு பானான தொடுவுது வரெக்குவு தும்ப அதிகவாங்க இத்தாத. தேவரு அவுளு மாடியிருவுது அநியாயகோளுன மறெலாங்க இத்தார.

6 வேசியாத ஈ பட்டணதுல இருவோரு மத்தோரியெ மாடியித்தது எதுவோ அதுனவே நீமுவு அவுளியெ மாடுரி. அவுளு மாடித மோசவாத காரியகோளுன எரடு மடங்காங்க அவுளியெ திருசி மாடுரி. அவுளு அவுளோட மோசவாத காரியகோளு அம்புது உளியேறித திராச்செ ரசான மத்த ஜனகோளியெ குடிவுக்கு கொட்ட ஆ பாத்ரதுல எரடு மடங்காங்க கலந்து அவுளியெ கொடுரி.

7 ஏ அளவியெ அவுளு அவுளுனவே தும்ப ஒசத்தியாங்க நெனசிளோ, அவுளோட தொட்டு அணகாரி அம்புது பெருமெனால ஏ அளவியெ மத்த ஜனகோளுன கஷ்டபடுசிளோ ஆ அளவியெ அவுளியெவு தொட்டு கஷ்டானவு, துக்கானவு கொடுரி. அவுளு அவுளோட மனசுல, ‘நானு ராணி மாதர ஆட்சிமாடுத்தினி. நானு முண்டெசி எங்கூசு இல்லா. நானு ஏவாங்குவு முண்டெசி எங்கூசு மாதர பொலம்புனார்ரே’ அந்து பெருமெயாங்க நெனசிகோண்டுளு.

8 அதுனால அவுளியெ பருவுது தொட்டு கஷ்டகோளாத சாவுவு, பொலம்புவுதுவு, பஞ்சவு ஒந்தே தினதுல பருவுது. கிச்சு உருது அவுளுன அழுசிபுடுவுது. அவுளுன நேயதீர்சுவுது ஆண்டவராத தேவரு எல்லா பெலாவு இருவோராங்க இத்தார.

9 அவுளுகூட சேந்து வேசித்தனமாடி தும்ப அணகாரரு அந்து பெருமெயாங்க பதுக்கித பூமில இருவுது ராஜாகோளு அவுளுன கிச்சு உருசுவுது ஒகென நோடுவாங்க அவுளியாக அத்து பொலம்புவுரு.

10 அவுளியெ பந்த தொட்டு கஷ்டகோளுன நோடி அவுருகோளு எல்லாருவு அஞ்சி தூரதுலயே நிந்துகோண்டு, ஐயோ தும்ப தொட்டு பட்டணவாத பாபிலோனே, ஐயோ தும்ப பெலா இருவுது பட்டணவே, ஒந்து கெட்டெ ஒத்துலயே நினியெ தண்டனெ சிக்கிபுடுத்தே” அந்து ஏளுவுரு.

11 பூமில பேப்பாரா மாடுவோரு அவுருகோளோட பொருளுகோளாத தங்கானவு, பெள்ளினவு, தும்ப பெலெ இருவுது ரத்தன கல்லுகோளுனவு, முத்துகோளுனவு, மெலிசாத பட்டு துணினவு, தும்ப பெலெ இருவுது நீல நெறா பட்டு துணினவு, தும்ப பெலெ இருவுது ஊதா நெறா பட்டு துணினவு,

12 சந்தனா மாதர தும்ப கமலபீசுவுது எல்லா வித மரகட்டெகோளுனவு, தந்ததுனால மாடியிருவுது எல்லா வித பொருளுகோளுனவு, தும்ப பெலெ இருவுது மரதுனாலைவு, பெங்கலதுனாலைவு, கப்புனதுனாலைவு, பளிங்கு அம்புது கல்லுனாலைவு மாடித எல்லா வித பொருளுகோளுனவு,

13 லவங்க பட்டெனவு, தூபா ஆக்குவுக்கு கமலபீசுவுது பொருகோளுனவு, கமலபீசுவுது தைலகோளுனவு, சாம்புராணினவு, உளியேறித திராச்செ ரசானவு, ஒலிவ எண்ணெனவு, ஒள்ளி மாவுனவு, கோதுமெனவு, தனானவு, குரிகோளுனவு, குதுரெகோளுனவு, ரதகோளுனவு, அடிமெகோளாத மனுஷருனவு இனிமேலு ஈசுவுக்கு யாருவு இல்லாததுனால அவுளியாக அத்து பொலம்புவுரு.

14 இன்னுவு அவுருகோளு, “பாபிலோனே, நிய்யி ஆசெபட்ட அண்ணுகோளு நின்னுனபுட்டு ஓய்புடுத்து. தும்ப பெலெ இருவுது பொருளுகோளு எல்லாவு நின்னுனபுட்டு ஓய்புடுத்து. நின்னு மினுக்குவு அழுஞ்சோத்து. இனிமேலு நிய்யி அதுகோளுன நோடுனார்ர” அந்தேளுவுரு.

15 ஈ பொருளுகோளுன எல்லா அவுளொத்ர மாறி அதுனால இன்னுவு அணகாரராங்காத பேப்பாரா மாடுவோரு எல்லாருவு அவுளியெ பந்துயிருவுது தொட்டு கஷ்டான நோடி அஞ்சி தூரதுலயே நிந்துகோண்டு,

16 “ஐயோ, மெலிசாத பட்டுனவு, தும்ப பெலெ இருவுது ஊதா நெறா துணினவு, செவப்பு நெறா துணினவு ஆக்கியித்தியே! தங்கதுனாலைவு, ரத்தனகோளுனாலைவு, முத்துகோளுனாலைவு அலங்கார மாடியித்தியே. ஒந்து கெட்டெ ஒத்துலயே ஈசு சொத்துகோளு எல்லாவு அழுஞ்சோத்தே” அந்து அத்து துக்கபடுவுரு.

17 கப்பலுன ஓடுசுவோரு எல்லாருவு, அதுல பயணமாடுவுது எல்லாருவு, கப்பலுல கெலசமாடுவோரு எல்லாருவு, கடலுல ஓயி பேப்பாரா மாடுவுது எல்லாருவு தூரதுல நிந்துகோண்டு,

18 வேசியாத ஆ பட்டணா உருக்கோண்டு இருவாங்க பருவுது ஒகென நோடி, “ஈசு தொட்டு பட்டணவாத பாபிலோனியெ ஒப்பாத பட்டணா ஏ ஒத்துலையாவுது இத்துத்தா?” அந்து தும்ப சத்தவாக்கிரு.

19 அவுருகோளு தலெ மேல புழுதின ஆக்கிகோண்டு, “ஐயோ தும்ப தொட்டு பட்டணக்கு அழிவு பந்துபுடுத்தே. கடலுல பேப்பாரா மாடுவோரு எல்லாருவு இவுளொத்ர இத்த தும்ப பெலெ இருவுது பொருளுகோளுனாலத்தான தும்ப அணகாரராங்காதுரு. ஆதர இவுளு ஒந்து கெட்டெ ஒத்துல அழுஞ்சோதுளே” அந்து அத்து துக்கவாயி பொலம்புவுரு.

20 ஆக ஒந்து தூதாளு, “சொர்கதுல இருவோரே அவுளுன நெனசி சந்தோஷபடுரி. தேவரோட ஜனகோளே, விசேஷவாத தூதாளுகோளே, தேவரு மாத்துன ஏளுவோரே நீமுவு சந்தோஷபடுரி. ஏக்கந்துர அவுளு நிமியெ மாடித எல்லா கொடுமெகோளியாக தேவரு அவுளியெ செரியாத தண்டனென கொட்டுபுட்டுரு” அந்தேளிதா.

21 ஆக தும்ப பெலா இருவுது தூதாளு ஒந்தொப்பா தொட்டு ராய்கல்லு மாதரயிருவுது ஒந்து தொட்டு கல்லுன எத்தி கடலுல பீசி, “ஈங்கேத்தா தும்ப தொட்டு பட்டணவாத பாபிலோனுன பீசிபுடுவுரு. இனிமேலு அவுளு இத்த எடா எதுந்துகூட தெளிலாங்க ஓய்புடுவுது.

22 வீணெ மாதரயிருவுதுன மீட்டுவோரோட சத்துவு, பாட்டு பாடுவோரோட சத்துவு, புல்லாங்கொழலு ஊதுவோரோட சத்துவு, எக்காளா ஊதுவோரோட சத்துவு இனிமேலு நின்னொத்ர கேள்சேனார்து. இனிமேலு ஏவாங்குவு நின்னொத்ர ஏ கெலசமாடுவுது கெலசக்காரனுவு நோடுவுக்கு முடுஞ்சுனார்து. இனிமேலு நின்னொத்ர ராய்கல்லோட சத்துவு கேள்சுனார்து.

23 இனிமேலு நின்னொத்ர இத்து தீப்பதோட பெளுசவு பீசுனார்து. இனிமேலு ஏவாங்குவு எண்ணு மாப்புளெயோட சத்துவு நின்னொத்ர கேள்சுனார்து. நின்னு பேப்பாரிகோளுத்தா ஒலகதுலயே தும்ப தொட்டு ஆளுகோளாங்க இத்துரு. நிய்யி மாடித மாயமந்தரகோளுனால எல்லா ஜாதிஜனகோளுவு ஏமாந்தோய்புட்டுரு.

24 தேவரொத்ர இத்து பருவுது மாத்துன ஏளுவோரோட நெத்ரவு, தேவரோட ஜனகோளோட நெத்ரவு, ஜனகோளு பூமில சாய்கொலுசிதோரு எல்லாரோட நெத்ரவு நின்னொத்ர இத்துத்து” அந்தேளிதா.

@New Life Computer Institute

Lean sinn:



Sanasan