Biblia Todo Logo
Bìoball air-loidhne

- Sanasan -

மாற்கு 8 - சொர்கக்கு வழிநெடசுவுது புஸ்தகா


யேசு நாக்காயிரா ஆளுகோளியெ உண்ணுவுக்கு கொடுவுது
( மத்தேயு 15:32–39 )

1 ஆ தினகோளுல, திருசிவு தும்ப ஆளுகோளு தும்ப தொட்டு கூட்டவாங்க சேந்து பந்துயிருவாங்க, அவுருகோளு உண்ணுவுக்கு கூளு ஒந்துவு இல்லாங்க இத்துதுனால யேசு அவுரோட சீஷருகோளுன அவுரொத்ர கூங்கி அவுருகோளொத்ர,

2 “ஈ ஜனகோளு மூறு தினகோளாங்க நன்னுகூட இத்தார. உண்ணுவுக்கு இவுருகோளொத்ர ஒந்துவே இல்லாததுனால இவுருகோளு மேல நன்னு மனசு உருகுத்தாத.

3 இவுருகோளுல கொஞ்ச ஆளுகோளு தும்ப தூரதுல இத்து பந்துயித்தார. அதுனால இவுருகோளுன ஒட்டசுவாங்க மனெயெ திருசி கெளுசிரெ ஓவுது தாரிலயே அவுருகோளியெ மயக்கா பந்துபுடுவுது” அந்தேளிரு.

4 அதுக்கு அவுரோட சீஷருகோளு, “ஈ தொட்டு கூட்டா திருப்தியாங்க உண்ணுவுக்கு பேக்கும்புது ரொட்டிகோளுன ஈ வனாந்தரதுல எல்லி இத்து கொண்டுகோண்டு பருவுக்கு முடுஞ்சுவுது?” அந்தேளிரு.

5 அதுக்கு அவுரு, “நிம்மொத்ர ஏசு ரொட்டிகோளு இத்தாத?” அந்து கேளிரு. அவுருகோளு, “ஏழு ரொட்டிகோளு இத்தாத” அந்தேளிரு.

6 ஆக யேசு ஜனகோளுன நெலதுல பந்தி இருவுக்கு கட்டளெ கொட்டு, ஆ ஏழு ரொட்டிகோளுன எத்தி தேவரியெ நன்றி ஏளி அதுகோளுன பிச்சி, ஜனகோளியெ ஆக்குரி அந்து சீஷருகோளொத்ர கொட்டுரு. அவுருகோளு ஜனகோளியெ கொட்டுரு.

7 அவுருகோளொத்ர கொஞ்ச சின்னு மீனுகோளுவு இத்துத்து. யேசு அதுகோளுனவு ஆசீர்வாதா மாடி ஜனகோளியெ ஆக்குரி அந்தேளிரு.

8 ஜனகோளு உண்டு திருப்தியாங்காதுரு. சீஷருகோளு மிச்சவாங்க இத்த ரொட்டி துண்டுகோளுன ஏழு கூடெகோளு தும்ப எத்திரு.

9 ஆ தினதுல கூளுண்டோரு சுமாரு நாக்காயிரா ஆளுகோளாங்க இத்துரு. அப்பறா யேசு ஜனகோளுன மனெயெ கெளுசிபுட்டுரு.

10 ஆகவே அவுரு அவுரோட சீஷருகோளுகூட ஒந்து படகுல ஏறி தல்மனூத்தா அம்புது ஜில்லாவியெ ஓதுரு.


யேசுவொத்ர அடெயாளான கேளுவுது
( மத்தேயு 16:1–4 ; மாற்கு 8:11–13 )

11 அவுருகோளு அல்லி பந்துயிருவாங்க பரிசேயரு கூட்டான சேந்த கொஞ்ச ஆளுகோளு யேசுவொத்ர பந்து அவுரொத்ர பாய்ஜகள மாடுவுக்கு ஆரம்புசிரு. அவுருன சோதுச்சுவுக்காக பானதுல இத்து ஒந்து அடெயாளான தோர்சுவுக்கு கேளிரு.

12 அப்பறா யேசு அவுரொழகவே பெருமூச்சுபுட்டு அவுருகோளொத்ர, “ஏக்க ஈ தலெகட்டு ஒந்து அடெயாளான கேளுத்தாத? இவுருகோளியெ நானு ஏ அடெயாளானவு கொடுவுது இல்லா அந்து நெஜவாங்கவே நிமியெ ஏளுத்தினி” அந்தேளிரு.

13 அப்பறா அவுரு அவுருகோளுனபுட்டு பொறபட்டு திருசிவு அவுரு ஒந்து படகுல ஏறி அக்கரெயெ ஓதுரு.


பரிசேயரு, ஏரோதியரு கூட்டான சேந்தோரோட உளியேறித மாவு
( மத்தேயு 16:5–12 )

14 சீஷருகோளு அவுருகோளியெ பேக்கும்புது ரொட்டிகோளுன கொண்டுகோண்டு பருவுக்கு மறதோதுரு. படகுல அவுருகோளொத்ர ஒந்தே ஒந்து ரொட்டி மட்டுத்தா இத்துத்து.

15 அவுருகோளு ஓய்கோண்டு இருவாங்க, யேசு அவுருகோளொத்ர, “நீமு பரிசேயரு கூட்டான சேந்தோரோட உளியேறித மாவுன பத்திவு, ஏரோதோட உளியேறித மாவுன பத்திவு தும்ப கவனவாங்க இருரி” அந்தேளிரு.

16 யேசு ஏளிது சீஷருகோளியெ புருஞ்சுனார்துனால அவுருகோளு ஒந்தொப்புரியெ ஒந்தொப்புரு, “நம்மொத்ர ரொட்டிகோளு இல்லாங்க இருவுதுனாலத்தா அவுரு ஈங்கே ஏளுத்தார” அந்தேளிரு.

17 யேசு அதுன தெளுகோண்டு அவுருகோளொத்ர, “நிமியெ பேக்கும்புது ரொட்டிகோளு நிம்மொத்ர இல்லா அந்து நீமு ஏக்க மாத்தாடுத்தாரி? இன்னுவு நீமு ஒணருலவா? இன்னுவு நீமு புருஞ்சுகோலவா? இன்னுவு நிம்மு மனசு கல்லாங்க இத்தாதையா?

18 நிமியெ கண்ணுகோளு இத்துவு நீமு நோடுலாங்க இத்தாரியா? நிமியெ கிமிகோளு இத்துவு நீமு கேளுலாங்க இத்தாரியா? நிமியெ நாபகவில்லவா?

19 ஐதாயிரா ஆளுகோளியெ கூளு கொடுவுக்காக நானு ஐது ரொட்டிகோளுன பிச்சி கொடுவாங்க, மிச்சவாத ரொட்டி துண்டுகோளுன ஏசு கூடெகோளு தும்ப எத்திரி?” அந்து கேளிரு. அவுருகோளு “அன்னெரடு” அந்தேளிரு.

20 அப்பறா அவுரு, “நாக்காயிரா ஆளுகோளியெ கொடுவுக்காக நானு ஏழு ரொட்டிகோளுன பிச்சி கொடுவாங்க மிச்சவாத ரொட்டி துண்டுகோளுன ஏசு கூடெகோளு தும்ப எத்திரி?” அந்து கேளிரு. அதுக்கு அவுருகோளு, “ஏழு” அந்து பதுலு ஏளிரு.

21 அப்பறா அவுரு அவுருகோளொத்ர, “இன்னுவு நீமு புருஞ்சுலாங்க இருவுது ஏங்கே?” அந்து கேளிரு.


யேசு பெத்சாயிதாவுல ஒந்து குருடன்ன கண்ணு தெளிவுக்கு மாடுவுது

22 அப்பறா அவுருகோளு பெத்சாயிதா அம்புது ஊரியெ பந்து சேந்துரு. ஆக கொஞ்ச ஆளுகோளு ஒந்து குருடன்ன யேசுவொத்ர கூங்கிகோண்டு பந்துரு. அவுனியெ கண்ணு தெளிவுக்காக அவுரு அவுன்ன தொடுபேக்கு அந்து கெஞ்சிகேளிரு.

23 யேசு ஆ குருடனோட கையினயிடுது, அவுன்ன ஊரியெ பெளியே கூங்கிகோண்டு ஓதுரு. யேசு அவுனோட கண்ணு மேல எஞ்சில்ன துப்பி, அவுரு கையின அவுனு மேல மடகி, அவுனொத்ர, “நிய்யி ஏதாசி நோடுத்தாயா?” அந்து கேளிரு.

24 ஆ ஆளு அண்ணாந்து நோடி, “அவுது, நானு நெடதுகோண்டு இருவுது ஜனகோளுன நோடுத்தினி. ஆதர அவுருகோளு மரகோளு மாதர இத்தார” அந்தேளிதா.

25 அப்பறா யேசு திருசிவு அவுனோட கண்ணுகோளு மேல கையின மடகிரு. அவ உத்து நோடிதா. ஆக அவுனோட கண்ணுகோளு முழுசுவு சென்னங்க ஆயோத்து. அவுன்னால எல்லாத்துனவு சென்னங்க நோடுவுக்கு முடுஞ்சுத்து.

26 அப்பறா யேசு அவுனொத்ர ஊரொழக ஓகுலாங்குவு, இதுன ஒந்தொப்புரொத்ரவு ஏளுலாங்கவு இரு அந்தேளி அவுன்ன அவுனோட மனெயெ கெளுசிபுட்டுரு.


பேதுரு யேசுன கிறிஸ்து அந்து மத்தோரு முந்தால ஏளுவுது
( மத்தேயு 16:13–20 ; லூக்கா 9:18–21 )

27 அப்பறா, யேசுவு, அவுரோட சீஷருகோளுவு பொறபட்டு, செசரியா பிலிப்பு அம்புது பட்டணதொத்ர இருவுது ஊருகோளியெ ஓதுரு. ஓவுது தாரில அவுரோட சீஷருகோளொத்ர, “ஜனகோளு நன்னுன யாரு அந்து ஏளுத்தார?” அந்து கேளிரு.

28 அதுக்கு அவுருகோளு, “கொஞ்ச ஆளுகோளு நிம்முன யோவானு ஸ்நானனு அந்துவு, கொஞ்ச ஆளுகோளு நீமு எலியா அந்துவு, மத்தோரு நீமு தேவரொத்ர இத்து பருவுது மாத்துன ஏளுவோருல ஒந்தொப்புரு அந்துவு ஏளுத்தார” அந்தேளிரு.

29 ஆக யேசு அவுருகோளொத்ர, “நீமு நன்னுன யாரு அந்து ஏளுத்தாரி?” அந்து கேளிரு. அதுக்கு பேதுரு, “நீமுத்தா கிறிஸ்து” அந்து பதுலு ஏளிதா.

30 ஆக யேசு அவுருத்தா கிறிஸ்து அந்து ஒந்தொப்புரியெவு ஏளுலாங்க இருவுக்கு அவுருகோளியெ உறுதியாங்க கட்டளெ கொட்டுரு.


யேசு அவுரோட சாவுன பத்திவு, அவுரு திருசி உசுரோட எத்துருவுதுன பத்திவு முந்தாலயே ஏளுவுது
( மத்தேயு 16:21–28 ; லூக்கா 9:22–27 )

31 அப்பறா யேசு, அவுரோட சீஷருகோளொத்ர, “சொர்கதுல இத்து மனுஷனாங்க பந்தவரு தும்ப கஷ்டபடுபேக்கு. யூதருகோளோட தலெவருகோளுவு, தொட்டு பூஜேரிகோளுவு, யூதமத சட்டான ஏளிகொடுவோருவு, அவுருன ஏத்துகோலாங்க சாய்கொலுசுபேக்கு. மூறு தினகோளியெ இந்தால அவுரு திருசி உசுரோட எத்துருவுரு” அந்து ஏளிகொடுவுக்கு ஆரம்புசிரு.

32 ஆங்கே அவுரு எதுனவு மறசுலாங்க ஏளிரு. ஆதர பேதுரு, அவுருன தனியாங்க கூங்கிகோண்டு ஓயி அவுருன தும்ப பொய்வுக்கு ஆரம்புசிதா.

33 யேசு திருகி அவுரோட சீஷருகோளுன நோடிரு. அப்பறா அவுரு பேதுருன தும்ப பொய்து அவுனொத்ர, “நனியெ இந்தால ஓகு சாத்தானே. நானு ஏனு மாடுபேக்கு அந்து தேவரு விரும்புவுது மாதர நிய்யி நெனசுலாங்க, மனுஷரு விரும்புவுது மாதர நெனசுத்தாயி” அந்தேளிரு.

34 அப்பறா யேசு ஜனகோளுனவு, அவுரோட சீஷருகோளுனவு அவுரொத்ர கூங்கிரு, “ஒந்தொப்பா நன்னு சீஷனாங்க ஆவுக்கு விரும்பிரெ, அவ அவுனோட விருப்பகோளுன வெறுத்துகோட்டு, அவுனோட சிலுவென எத்திகோண்டு நன்னு இந்தால பருபேக்கு.

35 ஏக்கந்துர ஒந்தொப்பா அவுனோட உசுருன காப்பாத்துவுக்கு விரும்பிரெ அவ ஏவாங்குவு பதுக்குனார்ரா. ஆதர நனியாகவு, நன்னுன பத்தித ஒள்ளிமாத்தியாகவு அவ சத்தோதுரெ அவ நன்னுகூட ஏவாங்குவு பதுக்குவா.

36 ஒந்தொப்பா ஈ ஒலகா முழுசுனவு அவுனியெ சொந்தவாங்க ஆக்கிகோண்டுரிவு, அவ அவுனோட பதுக்குன எழந்தோதுரெ அவுனியெ ஏனு லாபா?

37 அவ அவுனோட பதுக்கியெ ஈடாங்க எதுன கொடுவா?

38 அதுனால, விபச்சாராதுலைவு, பாவகோளுலைவு தும்பியிருவுது ஈ தலெகட்டுல யாராசி ஒந்தொப்பா நன்னுன பத்திவு, நன்னு மாத்துன பத்திவு வெக்கபட்டுரெ அவுன்ன பத்தி சொர்கதுல இத்து மனுஷனாங்க பந்தவருவு, அவுரோட அப்பாவொத்ர இருவுது அதிகாரதோட தும்ப சுத்தவாத தூதாளுகோளுகூட திருசி பருவாங்க வெக்கபடுவுரு” அந்தேளிரு.

@New Life Computer Institute

Lean sinn:



Sanasan