Biblia Todo Logo
Bìoball air-loidhne

- Sanasan -

கொலோசெயரு 3 - சொர்கக்கு வழிநெடசுவுது புஸ்தகா


ஒச பதுக்கு

1 தேவரு சத்தோதோருல இத்து யேசு கிறிஸ்துன எத்துருசிது மாதர கிறிஸ்து மேல நம்பிக்கெ மடகியிருவோராத நிம்முனவு அவுருகூட எத்துருசிரு. ஈக கிறிஸ்து அதிகாராவு, பெலாவு இருவுது தேவரோட பலக்கையி பக்கதுல குத்துகோண்டு இத்தார. அதுனால அல்லி இருவுது காரியகோளு மேலயே விருப்பவாங்க இருரி.

2 அவுது, பூமில இருவுது காரியகோளு மேல இல்லா சொர்கதுல இருவுது காரியகோளு மேலயே நிம்மு மனசுன மடகுரி.

3 ஏக்கந்துர நீமு கிறிஸ்துகூட சத்தோதுரி. நிம்மு உசுரு அவுருகூட தேவரொழக மறெஞ்சு இத்தாத.

4 நமியெ ஒச பதுக்குன கொடுவுது கிறிஸ்து மகிமெயாங்க ஈ ஒலகியெ திருசி பருவாங்க நீமுவு அவுருகூட ஆங்கே பருவுரி.

5 அதுனால ஈ ஒலகான சேந்த காரியகோளாத விபச்சாரா, ஒழுக்கவில்லாத மோசவாத காரியா, காமவெறி, மைய்யி விரும்புவுது தும்ப மோசவாத காரியகோளு இதுகோளுன அழுசிபுடுரி. இன்னுவு பொருளுகோளு மேல மடகுவுது ஆசெகோளு சாமி செலெகோளுன கும்புடுவுது மாதர இருவுதுனால பொருளுகோளு மேல ஆசெபடுவோராங்க இருகூடாது.

6 தேவரு மாத்துன கேளி நெடைனார்த ஜனகோளு ஈ மாதர காரியகோளுன மாடுவுதுனாலத்தா தேவரு தும்ப கோப்பவாங்க அவுருகோளுன தண்டுசுத்தார.

7 முந்தால நீமு அவுருகோளுகூட பதுக்குவாங்க நீமுவு ஈ மாதர காரியகோளுனத்தா மாடிகோண்டு இத்துரி.

8 ஆதர ஈக நீமு இதுகோளு எல்லாத்துனவுபுட்டு வெலகி இருரி. கோப்பா, மத்தோருன பகெச்சுவுது, பொறாமெ இதுகோளுன புட்டுபுடுரி. மத்தோருன பத்தி மோசவாங்க ஏளுவுது, கெட்ட மாத்து இதுகோளு நிம்மு பாயில இத்து பருகூடாது.

9 ஒந்தொப்புரியெ ஒந்தொப்புரு பொய்யி ஏளுலாங்க இருரி. அழுக்காத துணின எத்திபுடுவுது மாதர நீமு நிம்மு அள பதுக்குல மாடித ஈ காரியகோளுன வெலக்கிபுட்டுதுனால

10 ஈக நீமு சுத்தவாத துணின ஆக்குவுது மாதர ஒச பதுக்குன ஆக்கியித்தாரி. ஈ ஒச பதுக்குல நிம்முன உண்டுமாடித தேவரு நீமு இன்னுவு அவுருன புருஞ்சுகோம்புக்கு மாடி அவுரோட கொணகோளுனால நிம்மு மனசுன ஒசதாங்க மாடிகோண்டே இத்தார.

11 நீமு ஈங்கே ஒசதாங்காவுதுனால இனிமேலு கிரேக்கரு யூதரு அந்து வித்தியாசா இல்லா; சுன்னத்து மாடிதோரு சுன்னத்து மாடுனார்தோரு அந்து வித்தியாசா இல்லா; பேற தேசதுல இத்து பந்தோரு அந்துவு, நாகரீகவாங்க இல்லாதோரு அந்துவு இல்லா. அடிமெ அந்துவு அடிமெயாங்க இருனார்தோரு அந்துவு வித்தியாசா இல்லா. ஏக்கந்துர கிறிஸ்துத்தா எல்லாவுவாங்க இத்தார. அவுருத்தா நம்மு எல்லாரொழகவு பதுக்குத்தார.

12 அதுனால தேவரு தெளுகோண்டோராங்கவு, அவுரோட பார்வெல தும்ப சுத்தவாதோராங்கவு, அவுரியெ பிரியவாதோராங்கவு இருவுது நீமு மனஉருக்கவாங்கவு, எரக்கவாங்கவு தாழ்மெயாங்கவு, சாந்தவாங்கவு, பொறுமெயாங்கவு இருரி.

13 ஒந்தொப்புருன ஒந்தொப்புரு சகுச்சுகோண்டு இருரி. ஒந்தொப்புரியெ ஒந்தொப்புரு மாடுவுது தப்புன மன்னுசுரி. ஆண்டவரு நிம்முன மன்னுசிது மாதர நீமுவு அவுருகோளுன மன்னுசுரி.

14 ஈ ஒள்ளி கொணகோளு மட்டுவில்லாங்க ஒந்தொப்புரு மேல ஒந்தொப்புரு அன்பாங்க இருரி. ஈ அன்புத்தா நிம்மு எல்லாருனவு ஒந்தாங்க சேர்சி நீமு ஒந்தொப்புரொத்ர ஒந்தொப்புரு ஐக்கியவாங்க இருவுக்கு மாடுத்தாத.

15 கிறிஸ்துவோட மைய்யாங்க இருவுது நீமு ஒந்தொப்புரொத்ர ஒந்தொப்புரு சமாதானவாங்க இருவுக்குத்தா தேவரு நிம்முன கூங்கிரு. அதுனால கிறிஸ்து நிமியெ கொடுவுது நிம்மதி நீமு ஏங்கே நெடைபேக்கு அந்து தோர்சாட்டு. தேவரியெ நன்றி ஏளுவோராங்க இருரி.

16 ஏவாங்குவு கிறிஸ்துன பத்தித மாத்து நிம்மு மனசுல ஏ கொறெயுவு இல்லாங்க இராட்டு. தேவரோட மாத்துன பத்தித பாட்டுகோளு, யேசுன பத்தித பாட்டுகோளு, தேவரோட ஆவியாதவரொத்ர இத்து பந்த பாட்டுகோளு இதுகோளுனால ஒந்தொப்புரியெ ஒந்தொப்புரு புத்தி ஏளி நிம்மு மனசொழக இத்து தேவரியெ நன்றி ஏள்ரி.

17 நீமு ஆண்டவராத யேசு கிறிஸ்து ஏளிதுனத்தா கேளி நெடைத்தாரி அம்புதுன நீமு ஏளுவுதுலைவு, மாடுவுதுலைவு தோர்சுபேக்கு.


கிறிஸ்தவ குடும்பக்காத ஒழுங்கு

18 மதுவெ மாடியிருவுது எங்கூசுகோளே, நீமு ஆண்டவரு ஏளுவுதுன கேளி நெடைவுதுனால நிம்மு கண்டனுகோளு ஏளுவுது மாத்துனவு கேளி நெடைரி.

19 மதுவெ மாடியிருவுது கண்டாளுகோளே, நீமு நிம்மு இன்றுகோளு மேல அன்பாங்க இருரி. அவுருகோளு மேல கோப்பபடுலாங்க அவுருகோளொத்ர சாந்தவாங்க இருரி.

20 மக்குளுகோளே, நீமு தேவரு மாத்துன கேளி நெடைவுது மாதர நிம்மு எத்தோரு ஏளுவுது எல்லா மாத்துனவு கேளி நெடைரி. நீமு ஈங்கே மாடுவுது தேவரியெ பிரியவாங்க இத்தாத.

21 எத்தோரே, நிம்மு மக்குளுகோளு மனசு சோந்தோயிபுடுவுது மாதர அவுருகோளுன எரிச்சலு மாடுபேடரி.

22 அடிமெகோளே, ஈ ஒலகதுல நிமியெ மொதலாளிகோளாங்க இருவோரு ஏளுவுது எல்லாத்துனவு கேளி நெடைரி. நீமு நிம்மு மொதலாளிகோளுன பிரியபடுசுவுக்காக அவுருகோளு நோடுவாங்க மட்டுவே சென்னங்க கெலசமாடுவோரு மாதர இல்லாங்க நீமு தேவரொத்ர பயபக்தியாங்க இருவுதுனால நேர்மெயாத மனசோட கெலசமாடுரி.

23 தேவரு நிமியெ வாக்கு கொட்டுயிருவுது உரிமெ சொத்துன நீமு ஈசிகோம்புரி அந்து நிமியெ தெளித்தாத. கிறிஸ்து நிம்மு ஆண்டவராங்க இருவுதுனால

24 எதுன மாடிரிவு அதுன நீமு மனுஷரியாக மாடுலாங்க, ஆண்டவரியாகவே முழு மனசோட மாடுரி.

25 யாரெல்லா தப்புமாடுத்தானையோ அவுனெல்லா அவ மாடித தப்பியெ ஏத்த தண்டனென ஈசிகோம்பா. ஏவாங்குவு தேவரு பச்சபாதா தோர்சுனார்ரு.

@New Life Computer Institute

Lean sinn:



Sanasan