கொலோசெயரு 1 - சொர்கக்கு வழிநெடசுவுது புஸ்தகாவாழ்த்துகோளு 1 தேவரோட விருப்பபடி கிறிஸ்து யேசுவோட விசேஷவாத தூதாளாங்க இருவுது நானு பவுலுவு, நம்மு கூடவுட்டிதோனு மாதரயிருவுது தீமோத்தேயுவு 2 கொலோசெ பட்டணதுல கிறிஸ்துகூட ஐக்கியவாங்க இருவுது தேவரோட ஜனகோளியெ ஈ கடுதாசின எழுதுத்திரி. நம்மு அப்பாவாத தேவரு நிமியெ கருணென தோர்சி நிம்மதின கொடாட்டு. தேவரியெ நன்றி ஏளுவுதுவு, அவுரொத்ர வேண்டுவுதுவு 3 நீமு கிறிஸ்து யேசு மேல மடகியிருவுது நம்பிக்கென பத்திவு, நீமு தேவரோட ஜனகோளு எல்லாரு மேல மடகியிருவுது அன்புன பத்திவு நாமு கேள்விபட்டு 4 தேவரு சொர்கதுல நிமியாக மடகியிருவுது ஒள்ளிதுன ஈசிகோம்புரி அந்து நீமு நம்பிக்கெயாங்க இருவுதுக்காக 5 நாமு தேவரியெ ஏவாங்குவு நன்றியேளி நம்மு ஆண்டவராத யேசு கிறிஸ்துவோட அப்பாவாத தேவரொத்ர நிமியாக வேண்டுத்திரி. 6 தேவரோட நெஜவாத மாத்தாத கிறிஸ்துன பத்தித ஒள்ளிமாத்து மூலியவாங்க தேவரு நிமியாக ஈங்கே மடகியிருவுதுன பத்தி முந்தாலயே கேள்விபட்டுயித்தாரி. ஈ ஒள்ளிமாத்து ஈ ஒலகா முழுசுவு பரவி ஒந்து மரா அண்ணுன கொடுவுது மாதர பலனு கொடுத்தாத. அது மாதர ஈ ஒள்ளிமாத்துன கேளித நீமு தேவரோட கருணென நெஜவாங்க புருஞ்சுகோண்ட தினதுல இத்து அது நிம்மொத்ரவு பலனு கொடுவுதாங்க இத்தாத. 7 நம்முகூட சேந்து தேவரியாக கெலசமாடுவுது எப்பாப்பிரா மூலியவாங்க நீமு ஈ ஒள்ளிமாத்துன படிச்சுகோண்டுரி. நமியெ அன்பாங்க இருவுது அவ நிமியாக கெலசமாடுவுதுல கிறிஸ்துவியெ நம்பிக்கெயெ ஏத்த கெலசக்காரனாங்க இத்தா. 8 அவத்தா தும்ப சுத்தவாத ஆவியாதவரு நிமியெ கொட்ட அன்புனால நீமு மத்தோரு மேல அன்பாங்க இருவுதுன பத்தி நம்மொத்ர ஏளிதா. 9 அதுனால நிம்முன பத்தி நாமு கேள்விபட்ட தினதுல இத்து நிமியாக தேவரொத்ர வேண்டுவுதுன நிலுசுலா. தேவரோட ஆவியாதவரு நிமியெ எல்லா அறுவுன கொட்டு அவுரு விரும்புவுதுன நீமு புருஞ்சுகோம்புக்கு ஒதவி மாடுவுக்காக அவுரொத்ர வேண்டுத்திரி. 10 நீமு ஆண்டவரு விரும்புவுது மாதர பதுக்குவுக்குவு, ஏவாங்குவு அவுரியெ பிரியவாங்க நெடைவுக்குவு, எல்லா ஒள்ளி காரியகோளுன மாடுவுக்குவு, நீமு தேவருன பத்தி இன்னுவு தும்ப அதிகவாங்க தெளுகோம்புக்குவு அவுரொத்ர வேண்டுத்திரி. 11 எல்லாத்துனவு சந்தோஷவாங்க தாங்கிகோம்புக்குவு, பொறுமெயாங்க இருவுக்குவு தேவரு அவுரோட தொட்டு பெலான கொடுவுக்காகவு நிமியாக அவுரொத்ர வேண்டுத்திரி. 12 ஆக அப்பாவாத தேவரு அவுரோட ஜனகோளியாக பெளுசவாங்க இருவுது அவுரோட ராஜ்ஜியதுல மடகியிருவுது உரிமெ சொத்துன நீமுவு ஈசிகோம்புக்கு நிம்முன அவுரு தகுதி இருவோராங்க ஆக்கிதுக்காக நீமு அவுரியெ நன்றி ஏளுவுக்கு முடுஞ்சுவுது. 13 கத்தளெயோட அதிகாரதுல இத்து நம்முன காப்பாத்தி அவுரோட அன்பாத மகனோட ராஜ்ஜியக்கு கொண்டுகோண்டு பந்து இத்தார. 14 அவுரோட மகனாத கிறிஸ்து நமியாக செல்லித நெத்ரதுனால தேவரு நம்மு பாவகோளுன மன்னுசி நம்முன விடுதலெ மாடுத்தார. கிறிஸ்துத்தா எல்லாத்தியெவு மேலாதவரு 15 ஒந்தொப்புருனாலைவு நோடுவுக்கு முடுஞ்சுனார்த தேவரு அவுரோட எல்லா கொணகோளுனவு கிறிஸ்து மூலியவாங்க தோர்சியித்தார. இவுரு தலெமொகு மாதர உண்டுமாடித எல்லாத்தியெவு மேலாதவராங்க இத்தார. 16 ஏக்கந்துர தேவரு இவுரு மூலியவாங்க எல்லாத்துனவு உண்டுமாடிரு. பானதுலைவு, பூமிலைவு, நம்மு கண்ணியெ தெளிவுதுவு, கண்ணியெ தெளினார்த ஒலகதுல இருவுது சிங்காசனகோளுவு, எல்லா ராஜ்ஜியகோளுனவு, ஆட்சிமாடுவோருனவு, அதிகாரா இருவோருனவு உண்டுமாடிரு. 17 எல்லாத்துனவு உண்டுமாடுவுக்கு முந்தாலயே கிறிஸ்து இத்தார. எல்லாவு அவுருகூட சேந்து நெலெச்சு இத்தாத. 18 அவுரோட மைய்யி மாதரயிருவுது அவுருன நம்புவோரோட கூட்டக்கு அவுருத்தா தலெயாங்க இத்தார. அவுருத்தா எல்லாத்துக்குவு ஆரம்பவாங்கவு, மொதலு மொதலாங்க சத்தோதோருல இத்து உசுரோட எத்துரிதவராங்கவு எல்லாத்துக்குவு மேலாதவராங்க இத்தார. 19 தேவரு அவுரோட கொணா முழுசுவு கிறிஸ்துவொழக தங்கி இருவுக்கு பிரியவாங்க இத்துரு. 20 கிறிஸ்து நமியாக சிலுவெல செல்லித நெத்ரதுனால தேவரு சமாதானான உண்டுமாடி பூமில இருவுது எல்லாத்துனவு, சொர்கதுல இருவுது எல்லாத்துனவு அவுரு மூலியவாங்க அவுரோட சிநேகிதருகோளாங்க ஆக்கிகோம்புக்கு பிரியவாங்க இத்துரு. 21 முந்தால நீமு தேவருனபுட்டு தூரவாங்க இத்துரி. நீமு மோசவாத காரியகோளுன மாடிதுனால நிம்மு மனசுல அவுரியெ எதுராளிகோளாங்க இத்துரி. ஆதர நிமியாக அவுரோட மகன்ன பலியாங்க கொட்டுது மூலியவாங்க தேவரு ஈக நிம்முன அவுரோட சிநேகிதராங்காவுக்கு மாடிரு. நீமு அவுரோட பார்வெல தும்ப சுத்தவாதோராங்கவு, ஏ கொறெயுவு இருனார்தோராங்கவு, ஒந்தொப்புருனாலைவு ஏ குத்தவு ஏளுவுக்கு முடுஞ்சுனார்தோராங்கவு மாடுவுக்காக ஈங்கே மாடிரு. 22 நீமு தேவரோட ஒள்ளிமாத்துன கேளிதுனால ஈசிகோண்ட நம்பிக்கென புட்டுபுடுலாங்க, அவுரு மேல மடகியிருவுது நம்பிக்கெல தும்ப உறுதியாங்க நெலச்சு இத்துரத்தா ஈங்கே மாடுவுரு. 23 ஈ ஒள்ளிமாத்துனத்தா பானக்கு கெழக இருவுது எல்லா படெப்புகோளியெவு ஏளிகொடுத்தார. நானு பவுலு, அதுன ஏளிகொடுவுது தேவரோட கெலசக்காரனாங்க இத்தவனி. யேசு கிறிஸ்துவோட கூட்டக்கு பவுலு மாடித கெலசா 24 நானு நிமியாக அனுபவுசுவுது கஷ்டகோளியாக ஈக சந்தோஷபடுத்தினி. ஈங்கே நானு நன்னு மைய்யில அனுபவுசுவுது கஷ்டகோளு மூலியவாங்க கிறிஸ்து அவுரோட மைய்யாத அவுருன நம்புவோரு கூட்டக்காக பட்ட கஷ்டகோளுல கொறெவாங்க இருவுதுன நெறெவேறுசுத்தினி. 25 தும்ப காலக்கு தலெகட்டு தலெகட்டாங்க தேவரு மறெசி மடகியித்த ரகசியான ஈக அவுரோட ஜனகோளியெ வெளிபடுசி இத்தார. அவுரோட மாத்துன நிமியெ முழுசாங்க ஏளிகொடுவுக்கு தேவரு நன்னுன பொறுப்பாங்க மடகி இத்தார. 26 தேவரு நனியெ கொட்ட ஈ பொறுப்புன மாடுவுக்காக நானு அவுருன நம்புவோரு கூட்டக்கு கெலசக்காரனாங்காதே. 27 எல்லா ஜனகோளியாக அவுரு மாடியிருவுது திட்டா ஏசு தொட்டுது அந்து ஈக யூதரல்லாத நீமு தெளுகோம்புக்கு விரும்பிரு. கிறிஸ்து நிம்மொழக பதுக்குவுரு அம்புதுத்தா ஆ திட்டா. அவுரு நிம்மொழக பதுக்குவுதுனால நீமு தேவரோட மேலாத நெலெமெல பங்கு ஈசிகோம்புரி அந்து நம்பிக்கெயாங்க இத்தாரி. 28 ஒவ்வொந்தொப்புருனவு கிறிஸ்துகூட ஐக்கியவாதோராங்கவு ஏ கொறெயுவு இருனார்தோராங்கவு தேவரொத்ர கொண்டுகோண்டு பருவுக்காக அவுருகோளியெ கிறிஸ்துன பத்தி ஏளி எச்சரிக்கெ மாடுத்திரி. இதுன நாமு எல்லா அறுவோடைவு ஏளிகொடுத்திரி. 29 இதுக்காக நானு தும்ப பாடுபட்டு உசுருன கொட்டு மாடுவுது கெலசகோளு கிறிஸ்துவோட தும்ப தொட்டு பெலான தோர்சுத்தாத. |
@New Life Computer Institute