2 தெசலோனிக்கேயா 1 - சொர்கக்கு வழிநெடசுவுது புஸ்தகாவாழ்த்துகோளு 1 நானு பவுலுவு, நன்னுகூட இருவுது சில்வானுவு, தீமோத்தேயுவு தெசலோனிக்கேயா பட்டணதுல இருவுது கிறிஸ்துன நம்புவோரு கூட்டக்கு ஈ கடுதாசின எழுதுத்திரி. நீமு நம்மு அப்பாவாத தேவருனவு, ஆண்டவராத யேசு கிறிஸ்துனவு சேந்தோராங்க இத்தாரி. 2 நம்மு அப்பாவாத தேவருவு, ஆண்டவராத யேசு கிறிஸ்துவு நிம்மு மேல கருணென தோர்சி நிமியெ நிம்மதின கொடாட்டு. நன்றி ஏளுவுதுவு, தேவரொத்ர வேண்டுவுதுவு 3 கூடவுட்டிதோரு மாதரயிருவோரே, நிம்முன நெனசி நாமு ஏவாங்குவு தேவரியெ நன்றி ஏளுவுக்கு கடமெபட்டவரி. அவுது, நாமு ஆங்கே மாடுவுது செரியாங்க இத்தாத. ஏக்கந்துர நீமு கிறிஸ்து மேல மடகியிருவுது நம்பிக்கெலைவு, ஒந்தொப்புரு மேல ஒந்தொப்புரு மடகுவுது அன்புலைவு தும்ப அதிகவாங்காகிகோண்டு இத்தாரி. 4 அதுனாலத்தா நாமு தேவருன சேந்த கிறிஸ்துன நம்புவோரு கூட்டகோளொத்ர நிம்முன பத்தி பெருமெயாங்க மாத்தாடுத்திரி. ஜனகோளு நிம்முன கஷ்டபடுசுவுது ஒத்துல எல்லாவு, நிமியெ பருவுது கஷ்டகோளுன சகுச்சுகோண்டு இருவுதுனாலைவு, நீமு தும்ப பொறுமெயாங்க இருவுதுனாலைவு, கிறிஸ்துன நம்புவுதுன புட்டுபுடுலாங்க இருவுதுனாலைவு நாமு ஈங்கே மாத்தாடுத்திரி. 5 நீமு ஈங்கே பொறுமெயாங்க இருவுது, தேவரு ஏளுவுது தீர்ப்பு நேயவாங்க இருவுது அந்து தோர்சுவுக்கு ஆதாரவாங்க இத்தாத. தேவரு ஆட்சிமாடுவுக்காக கஷ்டகோளுன அனுபவுசுவுது நீமு இதுகோளுனால தேவரோட ஆட்சியொழக ஓவுக்கு தகுதி இருவோராங்க இத்தாரி. 6 ஏக்கந்துர நிம்முன கஷ்டபடுசுவோரியெ கஷ்டானவு, கஷ்டகோளுன அனுபவுசுவுது நிமியெ நம்முகூட சேந்து ஓய்வுனவு பலனாங்க திருசி கொடுவுரு. அதுத்தா அவுரியெ நேயவாங்க இத்தாத. 7 தேவருன பத்தி தெளினார்தோருனவு, நம்மு ஆண்டவராத யேசுவோட ஒள்ளிமாத்துன கேளி நெடைனார்தோருனவு நேயவாங்க தண்டுசுவுக்காக 8 ஆண்டவராத யேசு பெலா இருவுது அவுரோட தூதாளுகோளுகூடவு, கொழுந்துபுட்டு உரிவுது கிச்சோடைவு பானதுல இத்து பருவாங்க அவுருகோளியெ ஆங்கே மாடுவுரு. 9 தேவரோட ஜனகோளு அவுருன புகழ்ந்து ஏளுவோராங்கவு, அவுருன நம்புவோரு எல்லாருவு ஆச்சரியபட்டு தும்ப புகழ்ந்து ஏளுவோராங்கவு ஆண்டவரு ஆ தினதுல பருவுரு. நாமு நிமியெ சாச்சியாங்க ஏளிதுன நீமு நம்பி ஏத்துகோண்டதுனால நீமுவு ஆங்கே அவுருன புகழ்ந்து ஏளுவுரி. 10 ஆதர அவுரோட ஒள்ளிமாத்துன கேளி நெடைனார்தோரு ஆண்டவரோட ஆச்சரியவாத பெலான நோடுவுக்கு முடுஞ்சுனார்து. ஆண்டவரு அவுருகோளுன அவுரு முந்தால இத்து தள்ளிகோட்டு ஏவாங்குவு முடிவே இருனார்த அழிவுன அவுருகோளியெ தண்டனெயாங்க கொடுவுரு. 11 அதுனால நம்மு தேவருவு, ஆண்டவராத யேசு கிறிஸ்துவு நிமியெ தோர்சுவுது கருணெனால நிம்மு மூலியவாங்க நம்மு ஆண்டவராத யேசு கிறிஸ்துவியெவு, அவுரு மூலியவாங்க நிமியெவு புகழ்ச்சி பருவுக்காக 12 நம்மு தேவரு நிம்முன எதுக்காக கூங்கிரோ அதுக்கு நிம்முன தகுதி இருவோராங்க மாடுவுக்குவு, நீமு மாடுவுக்கு விரும்புவுது எல்லா ஒள்ளி காரியகோளுன அவுரோட பெலதுனால நெறெவேறுசுவுக்குவு, அவுரு மேல மடகியிருவுது நம்பிக்கெனால நீமு மாடுவுது காரியகோளுன மாடிமுடுசுவுக்குவு ஏவாங்குவு நிமியாக தேவரொத்ர வேண்டுத்திரி. |
@New Life Computer Institute