ரோமர் 7:5 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு5 ஏனெனில், நாம் நம்முடைய பாவ மனித இயல்பின்படி வாழ்ந்தபோது, நீதிச்சட்டத்தினாலே தூண்டி விடப்பட்ட பாவ ஆசைகளே நம்முடைய அங்கங்களில் செயலாற்றின. அதனால் மரணத்திற்கு ஏதுவான கனியே பிறப்பிக்கப்பட்டது. See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்5 நாம் சரீரத்திற்கு உட்பட்டிருந்த காலத்தில் நியாயப்பிரமாணத்தினாலே தோன்றிய பாவ இச்சைகள் மரணத்திற்குரிய பலன்களைக் கொடுக்கக்கூடியதாக நம்முடைய சரீர உறுப்புகளிலே பெலன்செய்தது. See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20225 நம்முடைய மனித இயல்பின்படியே நாம் வாழ்ந்தபொழுது, மோசேயின் சட்டத்தினாலே தூண்டிவிடப்பட்ட பாவ ஆசைகள் நம்முடைய உடல்களில் செயலாற்றியது. எனவே நம்மிலிருந்து மரணத்திற்கேதுவான கனி பிறப்பிக்கப்பட்டது. See the chapterபரிசுத்த பைபிள்5 முன்பு, நாம் நமது மாமிசத்தால் ஆளப்பட்டிருந்தோம். சட்டத்தால் பாவ இச்சைகள் நம்மிடம் தோன்றின. அவை நமது சரீர உறுப்புகள் மீது ஆட்சி செலுத்தியது. அது நமக்கு மரணத்தைக் கொடுத்தது. See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)5 நாம் மாம்சத்திற்கு உட்பட்டிருந்த காலத்தில் நியாயப்பிரமாணத்தினாலே தோன்றிய பாவ இச்சைகள் மரணத்திற்கு ஏதுவான கனிகளைக் கொடுக்கத்தக்கதாக நம்முடைய அவயவங்களிலே பெலன்செய்தது. See the chapter |