ரோமர் 5:18 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு18 ஆகையால், ஒரு மீறுதலின் பிரதிபலனாக எல்லா மனிதருக்கும் தண்டனையின் தீர்ப்பு உண்டானது போல இயேசுவின் நீதியான ஒரே செயலால் எல்லா மனிதருக்கும் நீதிமான்கள் என்ற தீர்ப்பும் வாழ்வும் வந்தன. See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்18 எனவே, ஒரே மீறுதலினாலே எல்லா மனிதர்களுக்கும் தண்டனைக்குரிய தீர்ப்பு உண்டானதுபோல, ஒரே நீதியினாலே எல்லா மனிதர்களுக்கும் ஜீவனைக் கொடுக்கும் நீதிக்குரிய தீர்ப்பு உண்டானது. See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202218 ஆகையால், ஒரு மீறுதலின் பிரதிபலனாக, எல்லா மனிதருக்கும் தண்டனையின் தீர்ப்பு உண்டானதுபோல, ஒரு நீதிச் செயலின் பிரதிபலனாக, எல்லா மனிதருக்கும் வாழ்வைக் கொண்டுவருகிற, நீதிமான்கள் என்ற தீர்ப்பு உண்டானது. See the chapterபரிசுத்த பைபிள்18 எனவே ஆதாம் செய்த ஒரு பாவமானது மரணம் எனும் தண்டனையை அனைவருக்கும் தந்தது. அதுபோல் ஒரு மனிதரான இயேசுவின் நீதியானது அனைவரையும் நீதிமான்களாக்கும். அதோடு உண்மையான வாழ்வையும் அவர்களுக்குத் தந்தது. See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)18 ஆகையால் ஒரே மீறுதலினாலே எல்லா மனுஷருக்கும் ஆக்கினைக்கு ஏதுவான தீர்ப்பு உண்டானதுபோல, ஒரே நீதியினாலே எல்லா மனுஷருக்கும் ஜீவனை அளிக்கும் நீதிக்கு ஏதுவான தீர்ப்பு உண்டாயிற்று. See the chapter |