Online Bible

- Advertisements -




ரோமர் 5:16 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

16 மேலும் இறைவனின் இலவசமான அன்பளிப்பான கிருபை வரத்தின் விளைவையும், ஒரு மனிதனின் மீறுதலின் விளைவையும் எந்த விதத்திலும் ஒப்பிடவே முடியாது. ஏனெனில் ஆதாமின் ஒரே மீறுதலின் பின் வந்த நியாயத்தீர்ப்பினால் குற்றத்துக்குத் தண்டனை வந்தது. ஆனால் எண்ணிக்கையற்ற மீறுதல்களின் பின் வந்த இறைவனின் இலவச அன்பளிப்போ நீதிமான்கள் என்ற தீர்ப்பைக் கொண்டுவந்தது.

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

16 மேலும் ஒருவன் பாவம் செய்ததினால் உண்டான தீர்ப்பு தேவன் அருளும் ஈவிற்கு ஒப்பானது இல்லை; அந்தத் தீர்ப்பு ஒரே குற்றத்தினால் தண்டனைக்குரியதாக இருந்தது; கிருபைவரமோ அநேக குற்றங்களை நீக்கி நீதிவிளங்கும் தீர்ப்புக்குரியதாக இருக்கிறது.

See the chapter Copy

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

16 மேலும் இறைவனுடைய நன்கொடையின் விளைவோ, ஒரு மனிதனுடைய பாவத்தின் விளைவைப் போன்றதல்ல: அந்த நியாயத்தீர்ப்பு ஒரே பாவத்தினிமித்தம் தண்டனையைக் கொண்டுவந்தது; ஆனால் அந்த நன்கொடையோ பல மீறுதல்களை நீக்கி, நீதிமான்கள் என்ற தீர்ப்பைக் கொண்டுவந்தது.

See the chapter Copy

பரிசுத்த பைபிள்

16 ஒருமுறை ஆதாம் பாவம் செய்த பிறகு, அவன் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டான். ஆனால் தேவனுடைய கிருபையோ வேறு தன்மையானது. இந்த வரம் மக்களை தேவனுக்கேற்ற நீதிமான்களாக்கிற்று.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

16 மேலும் ஒருவன் பாவஞ்செய்ததினால் உண்டான தீர்ப்பு தேவன் அருளும் ஈவுக்கு ஒப்பானதல்ல; அந்தத் தீர்ப்பு ஒரே குற்றத்தினிமித்தம் ஆக்கினைக்கு ஏதுவாயிருந்தது; கிருபைவரமோ அநேகக் குற்றங்களை நீக்கி நீதிவிளங்கும் தீர்ப்புக்கு ஏதுவாயிருக்கிறது.

See the chapter Copy




ரோமர் 5:16

Follow us:

Advertisements


Advertisements