Online Bible

- Advertisements -




ரோமர் 4:19 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

19 அவர் ஏறத்தாழ நூறு வயதுள்ளவராக இருந்தபோது தனது உடல் தளர்ந்து பிள்ளை பெறும் சக்தி அற்றதாகிவிட்டது என்றும், சாராளின் கருவறை கருத்தரிக்கும் சக்தியை இழந்துவிட்டது என்றும் அவர் உணர்ந்தபோதும், அவர் விசுவாசத்தில் தளரவில்லை.

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

19 அவன் விசுவாசத்திலே பலவீனமாக இருக்கவில்லை; அவன் ஏறக்குறைய நூறு வயதுள்ளவனாக இருக்கும்போது, தன் சரீரம் செத்துப்போனதையும், சாராளுடைய கர்ப்பம் செத்துப்போனதையும் நினைக்காமல் இருந்தான்.

See the chapter Copy

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

19 அவன் ஏறத்தாழ நூறு வயதுள்ளவனாயிருந்தான். இதனால் அவனுடைய உடல் சக்தியற்றுப் போயிருந்தது. சாராளுடைய கருப்பையும் கருத்தரிக்கும் சக்தியை இழந்திருந்தது. இதை அவன் நன்றாய் அறிந்திருந்தும், அவனுடைய விசுவாசம் தளரவில்லை.

See the chapter Copy

பரிசுத்த பைபிள்

19 அவன் ஏறக்குறைய 100 வயதுள்ளவனாய் இருந்தான். அவ்வயதில் பிள்ளைகள் உருவாக உயிர் சக்தியில்லை. அதே சமயத்தில் சாராளாலும் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது. ஆபிரகாம் இதைப்பற்றியும் நினைத்துப் பார்த்தான். ஆனால் தேவன் மேல் வைத்த விசுவாசம் மட்டும் குறையவே இல்லை.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

19 அவன் விசுவாசத்திலே பலவீனமாயிருக்கவில்லை; அவன் ஏறக்குறைய நூறு வயதுள்ளவனாயிருக்கும்போது, தன் சரீரம் செத்துப்போனதையும், சாராளுடைய கர்ப்பம் செத்துப்போனதையும் எண்ணாதிருந்தான்.

See the chapter Copy




ரோமர் 4:19

Follow us:

Advertisements


Advertisements