ரோமர் 2:29 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு29 ஒருவன் உள்ளத்தில் யூதனாயிருந்தால், அவனே யூதன். எழுதப்பட்ட ஒழுங்குவிதியினால் அன்றி பரிசுத்த ஆவியானவரால் இருதயத்தில் செய்யப்படும் விருத்தசேதனமே விருத்தசேதனம். இப்படிப்பட்டவனுக்கு மனிதரிடமிருந்து அல்ல இறைவனிடமிருந்தே புகழ்ச்சி வருகின்றது. See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்29 உள்ளத்திலே யூதனானவனே யூதன்; எழுத்தின்படி உண்டாகாமல், ஆவியின்படி இருதயத்தில் உண்டாகும் விருத்தசேதனமே விருத்தசேதனம்; இப்படிப்பட்டவனுக்கு வரும் புகழ்ச்சி மனிதராலே உண்டாகவில்லை, தேவனாலே உண்டாயிருக்கிறது. See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202229 ஒருவன் உள்ளத்தில் யூதனாயிருந்தால், அவனே யூதன்; எழுதப்பட்ட ஒழுங்குவிதியினால் அல்ல, பரிசுத்த ஆவியானவரால் இருதயத்தில் செய்யப்படும் விருத்தசேதனமே விருத்தசேதனம். இப்படிப்பட்ட மனிதனுக்குரிய புகழ்ச்சி மனிதரிடமிருந்து அல்ல, இறைவனிடமிருந்தே வருகிறது. See the chapterபரிசுத்த பைபிள்29 மனத்தளவில் யூதனாக இருப்பவனே உண்மையான யூதன். உண்மையான விருத்தசேதனம் இருதயத்தில் செய்யப்படுவது. அது ஆவியால் செய்யப்படுவது. அது எழுதப்பட்ட ஆணைகளால் செய்யப்படுவதல்ல. ஆவியின் மூலம் இதயத்தில் விருத்தசேதனம் செய்யப்படும் ஒருவன் மக்களால் புகழப்படாவிட்டாலும் தேவனால் புகழப்படுவான். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)29 உள்ளத்திலே யூதனானவனே யூதன்; எழுத்தின்படி உண்டாகாமல், ஆவியின்படி இருதயத்தில் உண்டாகும் விருத்தசேதனமே விருத்தசேதனம்; இப்படிப்பட்டவனுக்குரிய புகழ்ச்சி மனுஷராலே அல்ல, தேவனாலே உண்டாயிருக்கிறது. See the chapter |