ரோமர் 1:28 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு28 மேலும் அவர்கள் இறைவனைப் பற்றிய உண்மை அறிவை ஏற்றுக்கொண்டு வாழ்வதைப் பயனுள்ளதாக எண்ணாதபடியால், இறைவன் அவர்களைச் செய்யத் தகாதவைகளைச் செய்கின்ற சீர்கெட்ட சிந்தையின் கட்டுப்பாட்டின் கீழ் கைவிட்டார். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்28 தேவனைத் தெரிந்துகொள்ளும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனமில்லாமல் இருந்ததால், தவறான காரியங்களைச் செய்வதற்காக, தேவன் அவர்களைக் கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார். See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202228 மேலும், அவர்கள் இறைவனைப்பற்றிய அறிவைக் காத்துக்கொள்வதை ஒரு தகுதியான செயலாக எண்ணவில்லை. இதனால் அவர்கள் செய்யத் தகாதவைகளைச் செய்யும்படி, இறைவன் அவர்களைச் சீர்கெட்ட சிந்தைக்கும் விட்டுவிட்டார். See the chapterபரிசுத்த பைபிள்28 தேவனைப் பற்றிய உண்மையான அறிவைப் பெற்றுக்கொள்ள வேண்டியது முக்கியம் என்று மக்கள் நினைக்கவில்லை. எனவே தேவன் அவர்களைக் கைவிட்டுவிட்டார். அவர்கள் தங்கள் பயனற்ற சிந்தனைகளில் அமிழ்ந்து கிடக்க அனுமதித்தார். எனவே அவர்கள் செய்யக் கூடாதவற்றையெல்லாம் செய்து வந்தனர். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)28 தேவனை அறியும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லாதிருந்தபடியால், தகாதவைகளைச் செய்யும்படி, தேவன் அவர்களைக் கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார். See the chapter |