வெளிப்படுத்தல் 5:13 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு13 பின்பு பரலோகத்திலும், பூமியிலும், பூமியின் கீழும், கடலிலும் உள்ள எல்லா படைப்புயிர்களும், “அரியணையில் அமர்ந்திருக்கின்றவருக்கும், ஆட்டுக்குட்டியானவருக்கும் துதியும், மாண்பும், மகிமையும், வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாவதாக!” என்று பாடுவதைக் கேட்டேன். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்13 அப்பொழுது, வானத்திலும், பூமியிலும், பூமியின் கீழும் இருக்கிற படைப்புகளும், கடலில் உள்ள எல்லா ஜீவன்களும்: சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் வல்லமையும் எல்லாக் காலங்களிலும் உண்டாவதாக என்று சொல்வதைக்கேட்டேன். See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202213 பின்பு பரலோகத்திலும், பூமியிலும், பூமியின்கீழும், கடலிலும் உள்ள எல்லா படைப்புயிர்களும் பாடுவதைக் கேட்டேன்: “அரியணையில் அமர்ந்திருக்கிறவருக்கும், ஆட்டுக்குட்டியானவருக்கும் துதியும், கனமும், மகிமையும், வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாவதாக!” See the chapterபரிசுத்த பைபிள்13 பிறகு பரலோகத்தில் உள்ள அத்தனை உயிருள்ள ஜீவன்களும், பூமியிலும் கடலிலும் பூமிக்கு அடியிலுள்ள உலகிலுமுள்ள அத்தனை உயிருள்ள ஜீவன்களும் கீழ்க்கண்டவாறு சொல்வதைக் கேட்டேன். “சிம்மாசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் பாராட்டுகளும், கனமும், புகழும், அதிகாரமும் சதாகலங்களிலும் உண்டாகட்டும்.” See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)13 அப்பொழுது, வானத்திலும் பூமியிலும் பூமியின் கீழுமிருக்கிற சிருஷ்டிகள் யாவும், சமுத்திரத்திலுள்ளவைகளும், அவற்றுளடங்கிய வஸ்துக்கள் யாவும்: சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் வல்லமையும் சதா காலங்களிலும் உண்டாவதாக என்று சொல்லக்கேட்டேன். See the chapter |