வெளிப்படுத்தல் 22:9 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு9 ஆனால் அவனோ என்னிடம், “இப்படிச் செய்யாதே! உன்னையும், இறைவாக்கினர்களாகிய உன் சகோதரர்களையும், இந்தப் புத்தகத்தின் வார்த்தைகளைக் கைக்கொள்ளுகின்ற எல்லோரையும் போல, நானும் உங்கள் அனைவரோடும்கூட ஒரு சக ஊழியக்காரனாகவே இருக்கின்றேன். ஆகையால், இறைவனையே ஆராதனை செய்வாயாக” என்றான். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்9 அதற்கு அவன்: நீ இப்படிச் செய்யவேண்டாம்; “உன்னோடும் உன் சகோதரர்களோடும் தீர்க்கதரிசிகளோடும், இந்தப் புத்தகத்தின் வசனங்களைக் கடைபிடிக்கிற ஊழியர்களில் நானும் ஒருவன்; தேவனைத் தொழுதுகொள்” என்றான். See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20229 ஆனால் அவனோ என்னிடம், “இப்படிச் செய்யாதே! உன்னுடனும், உன் சகோதரர்களான இறைவாக்கினருடனும், இந்தப் புத்தகத்தின் வார்த்தைகளைக் கைக்கொள்ளுகிற எல்லோருடனும், நானும் உடன் ஊழியன். ஆகையால், இறைவனையே ஆராதனைசெய்” என்றான். See the chapterபரிசுத்த பைபிள்9 ஆனால் அத்தூதன் என்னிடம், “என்னை வணங்க வேண்டாம். நானும் உன்னைப் போல ஒரு ஊழியன் மட்டுமே. தீர்க்கதரிசிகளாகிய உன் சகோதரர்களைப் போன்றவன் நான். இந்நூலிலுள்ள வசனங்களுக்குக் கீழ்ப்படிகிற மற்றவர்களைப்போல நானும் ஒருவனே. நீ தேவனை வணங்கு” என்றான். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)9 அதற்கு அவன்: நீ இப்படிச் செய்யாதபடிக்குப் பார்; உன்னோடும் உன் சகோதரரோடும் தீர்க்கதரிசிகளோடும், இந்தப் புஸ்தகத்தின் வசனங்களைக் கைக்கொள்ளுகிறவர்களோடுங்கூட நானும் ஒரு ஊழியக்காரன்; தேவனைத் தொழுதுகொள் என்றான். See the chapter |