வெளிப்படுத்தல் 18:7 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு7 எந்தளவு அவள் தன்னைத் தானே மேன்மைப்படுத்தி சொகுசாக வாழ்ந்தாளோ, அதேயளவு அவளுக்கு கடும் வேதனையையும் துக்கத்தையும் கொடுங்கள். அவள் தன் இருதயத்தில் பெருமிதத்தோடு, ‘நான் அரசியைப் போல் அமர்ந்திருக்கிறேன், நான் ஒரு விதவை அல்ல, நான் ஒருபோதும் துக்கப்படுவதில்லை’ என கூறிக்கொள்கிறாள். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்7 அவள் தன்னை மகிமைப்படுத்தி, எவ்வளவு செல்வச்செழிப்பாய் வாழ்ந்தாளோ அந்த அளவுக்கே வாதையையும் துக்கத்தையும் அவளுக்குக் கொடுங்கள். நான் அரசியாக இருக்கிறேன்; நான் விதவைப் பெண் இல்லை, நான் துக்கத்தைப் பார்ப்பதில்லை என்று அவள் தன் இருதயத்திலே நினைத்தாள். See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20227 அவள் தன்னைத்தானே மேன்மைப்படுத்தி சொகுசாக வாழ்ந்தாள். அதற்குப் பதிலாய் அவளுக்கு வேதனையையும் துக்கத்தையும் கொடுங்கள். அவள் தன் இருதயத்தில், ‘நான் அரசியைப்போல் அமர்ந்திருக்கிறேன். நான் ஒரு விதவை அல்ல; நான் ஒருபோதும் புலம்பமாட்டேன்’ என்று பெருமிதமாய் கூறிக்கொள்கிறாள். See the chapterபரிசுத்த பைபிள்7 அவள் தனக்கு செல்வ வாழ்வையும் அதிக மகிமையையும் அளித்துக்கொண்டாள். அதே அளவு துன்பத்தையும் துக்கத்தையும் அவளுக்குக் கொடுங்கள். அவள் தனக்குத் தானே, ‘என் சிம்மாசனத்தில் உட்கார்ந்துக்கொண்டிருக்கிற நான் ஒரு ராணி. நான் விதவை அல்ல. நான் எக்காலத்திலும் துக்கப்படமாட்டேன்’ என்று சொல்லிக்கொள்கிறாள். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)7 அவள் தன்னை மகிமைப்படுத்தி, செல்வச்செருக்காய் வாழ்ந்ததெவ்வளவோ அவ்வளவாய் வாதையையும் துக்கத்தையும் அவளுக்குக் கொடுங்கள். நான் ராஜஸ்திரீயாய் வீற்றிருக்கிறேன்; நான் கைம்பெண்ணல்ல, நான் துக்கத்தைக் காண்பதில்லையென்று அவள் தன் இருதயத்திலே எண்ணினாள். See the chapter |