மாற்கு 9:35 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு35 இயேசு உட்கார்ந்து, பன்னிருவரையும் தம்மிடம் வரும்படி அழைத்து, “யாராவது முதன்மையானவனாக இருக்க விரும்பினால் அவனே எல்லோரிலும் கடைசியானவனாக இருக்க வேண்டும். அவன் எல்லோருக்கும் பணியாளனாகவும் இருக்க வேண்டும்” என்றார். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்35 அப்பொழுது அவர் உட்கார்ந்து, பன்னிரண்டுபேரையும் அழைத்து: யாராவது முதல்வனாக இருக்கவிரும்பினால் அவன் எல்லோருக்கும் கீழானவனும், எல்லோருக்கும் ஊழியக்காரனுமாக இருக்கவேண்டும் என்று சொல்லி; See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202235 இயேசு உட்கார்ந்து, பன்னிரண்டு சீடர்களையும் தம்மிடம் வரும்படி கூப்பிட்டு, “யாராவது முதன்மையானவனாயிருக்க விரும்பினால், அவனே எல்லாரிலும் கடைசியானவனாக இருக்கவேண்டும். அவன் எல்லோருக்கும் வேலைக்காரனாகவும் இருக்கவேண்டும்” என்றார். See the chaptermārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)35 apoɹudhu avar uɹtkārndhu, panniruvaraiyum aɹaithu: ‘evanāhilum mudhalvanā yiruka virumbināl avan ellārukum kaɹdaiyānavanum, ellārukum ūɹiyakāranumā yiruka kaɹdavan,’ endru solli; See the chapterபரிசுத்த பைபிள்35 ஓரிடத்தில் இயேசு உட்கார்ந்துகொண்டு பன்னிரண்டு சீஷர்களையும் அருகில் அழைத்தார். அவர்களிடம் இயேசு, “எவனாவது மிக முக்கியமானவனாக விரும்பினால் அவன் தன்னைவிட மற்ற அனைவரையும் மிக முக்கியமானவர்களாகக் கருதி அவன் அனைவருக்கும் வேலைக்காரனாக இருக்க வேண்டும்” என்றார். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)35 அப்பொழுது அவர் உட்கார்ந்து, பன்னிருவரையும் அழைத்து: எவனாகிலும் முதல்வனாயிருக்க விரும்பினால் அவன் எல்லாருக்கும் கடையானவனும், எல்லாருக்கும் ஊழியக்காரனுமாயிருக்கக்கடவன் என்று சொல்லி; See the chapter |