மாற்கு 3:2 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு2 இயேசுவைக் குற்றம் சாட்டுவதற்கான ஒரு ஆதாரத்தைத் தேடிக் கொண்டிருந்த சிலர், ஓய்வுநாளிலே அவர் அவனைக் குணமாக்குவாரோ என்று அவரைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார்கள். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்2 அவர் ஓய்வுநாளில் அவனைச் சுகமாக்கினால் அவர்மேல் குற்றஞ்சாட்டலாம் என்று அவரைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20222 சிலர் இயேசுவைக் குற்றப்படுத்துவதற்கான காரணத்தைத் தேடி, ஓய்வுநாளிலே அவர் அவனைக் குணமாக்குவாரோ என்று கவனமாகப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். See the chaptermārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)2 avar ōivunāɹlil avanai j̄osthamākināl avarpēril kutranjāɹtalām endru avarmēl nōkamāi irundhārhaɹl. See the chapterபரிசுத்த பைபிள்2 இயேசு தவறாக ஏதேனும் செய்யும் பட்சத்தில் அவரைக் குற்றம் சாட்டலாம் என்று சில யூதர்கள் கவனித்துக்கொண்டிருந்தனர். ஓய்வு நாளில் அவனைக் குணமாக்குவாரா என்று பார்க்கக் காத்திருந்தனர். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)2 அவர் ஓய்வுநாளில் அவனைச் சொஸ்தமாக்கினால் அவர்பேரில் குற்றஞ்சாட்டலாமென்று அவர்மேல் நோக்கமாயிருந்தார்கள். See the chapter |