மாற்கு 2:18 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு18 அந்நாட்களில் யோவானுடைய சீடர்களும் பரிசேயரும் உபவாசித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது சிலர் இயேசுவிடம் வந்து, “யோவானின் சீடர்களும், பரிசேயருடைய சீடர்களும் உபவாசம் செய்கின்றார்கள். ஆனால் உம்முடைய சீடர்கள் ஏன் உபவாசிப்பதில்லை?” என்று கேட்டார்கள். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்18 யோவானுடைய சீடர்களும் பரிசேயர்களுடைய சீடர்களும் உபவாசம்பண்ணிவந்தார்கள். அவர்கள் இயேசுவிடம் வந்து: யோவானுடைய சீடர்களும் பரிசேயர்களுடைய சீடர்களும் உபவாசம்பண்ணுகிறார்களே, ஆனால் உம்முடைய சீடர்கள் உபவாசம்பண்ணாமல் இருப்பது ஏன் என்று கேட்டார்கள். See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202218 அந்நாட்களில் யோவானின் சீடர்களும் பரிசேயரும் உபவாசித்துக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது சிலர் இயேசுவினிடத்தில் வந்து, “யோவானின் சீடர்களும், பரிசேயருடைய சீடர்களும் உபவாசிக்கிறார்கள், ஆனால் உம்முடைய சீடர்கள் ஏன், உபவாசிப்பதில்லை?” என்று கேட்டார்கள். See the chaptermārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)18 yōvānuɹdaiya sīsharum parisēyaruɹdaiya sīsharum ubavāsam paɹnni vandhārhaɹl. avarharl avariɹdathil vandhu: ‘yōvānuɹdaiya sīsharum parisēyaruɹdaiya sīsharum ubavāsikir̄ārhaɹlē, ummuɹdaiya sīshar ubavā siyāmal irukir̄adhenna?’ vendru kēɹtārhaɹl. See the chapterபரிசுத்த பைபிள்18 யோவானின் சீஷர்களும், பரிசேயரின் சீஷர்களும் உபவாசம் இருந்தனர். சிலர் இயேசுவிடம் வந்து “யோவானுடைய சீஷர்களும் உபவாசம் இருக்கின்றனர். பரிசேயருடைய சீஷர்களும் உபவாசம் இருக்கின்றனர். உங்களுடைய சீஷர்கள் ஏன் உபவாசம் இருப்பதில்லை?” என்று கேட்டனர். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)18 யோவானுடைய சீஷரும் பரிசேயருடைய சீஷரும் உபவாசம்பண்ணிவந்தார்கள். அவர்கள் அவரிடத்தில் வந்து: யோவானுடைய சீஷரும் பரிசேயருடைய சீஷரும் உபவாசிக்கிறார்களே, உம்முடைய சீஷர் உபவாசியாமலிருக்கிறதென்னவென்று கேட்டார்கள். See the chapter |