மத்தேயு 24:6 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு6 யுத்தங்களைப் பற்றியும், யுத்தங்களைப் பற்றிய செய்திகளையும் கேள்விப்படுவீர்கள். ஆனால் நீங்களோ கலங்காதபடி இருங்கள். இப்படிப்பட்ட காரியங்கள் நிகழ வேண்டியவையே. ஆனாலும் முடிவு வர, இன்னும் காலம் இருக்கின்றது. See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்6 யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள்; கலங்காதபடி எச்சரிக்கையாக இருங்கள்; இவைகளெல்லாம் நடக்கவேண்டியதே; ஆனாலும், முடிவு உடனே வராது. See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20226 நீங்கள் யுத்தங்களையும், யுத்தங்களைப்பற்றிய செய்திகளையும் கேள்விப்படுவீர்கள். ஆனால் பயப்படாதபடி கவனமாயிருங்கள். இப்படிப்பட்ட காரியங்கள் நடக்கவே வேண்டும். ஆனால் முடிவு வருவதற்கோ, இன்னும் காலம் உண்டு. See the chapterபரிசுத்த பைபிள்6 போர்களைப்பற்றியும் போர்களைப்பற்றிய செய்திகளையும் நீங்கள் கேட்பீர்கள். ஆனால் பயப்படாதீர்கள். முடிவு வருவதற்கு முன்பு இச்செயல்கள் நடக்க வேண்டும். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)6 யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள்; கலங்காதபடி எச்சரிக்கையாயிருங்கள்; இவைகளெல்லாம் சம்பவிக்கவேண்டியதே; ஆனாலும், முடிவு உடனே வராது. See the chapter |