லூக்கா 3:19 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு19 அதேவேளை, சிற்றரசனான ஏரோது தனது சகோதரனின் மனைவி ஏரோதியாளை மணமுடித்திருந்ததனாலும், வேறு பல தீய காரியங்களை செய்ததனாலும் யோவான் ஏரோதைக் கண்டித்தான். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்19 தேசத்தின் அதிபதியாகிய ஏரோது, அவன் சகோதரன் பிலிப்புவின் மனைவியாகிய ஏரோதியாளைத் திருமணம் செய்ததாலும், அவன் செய்த மற்றப் பொல்லாங்குகளுக்காகவும், யோவானாலே கடிந்துகொள்ளப்பட்டபோது, See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202219 ஆனால் சிற்றரசன் ஏரோது தனது சகோதரனின் மனைவியாகிய ஏரோதியாளை திருமணம் செய்திருந்ததினாலும், வேறு பல தீய காரியங்களைச் செய்ததினாலும் யோவான் அவனைக் கண்டித்தான். See the chapterபரிசுத்த பைபிள்19 ஆளுநராகிய ஏரோதுவை யோவான் கண்டித்தான். ஏரோதுவின் சகோதரனின் மனைவியாகிய ஏரோதியாளை அவன் தகாத முறையில் சேர்த்துக்கொண்டதை யோவான் கண்டனம் செய்தான். ஏரோது செய்த பல தீய செயல்களையும் யோவான் கண்டித்தான். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)19 காற்பங்கு தேசாதிபதியாகிய ஏரோது தன் சகோதரனான பிலிப்புவின் மனைவி ஏரோதியாளினிமித்தமாகவும், தான் செய்த மற்ற பொல்லாங்குகளினிமித்தமாகவும், யோவானாலே கடிந்துகொள்ளப்பட்டபோது, See the chapter |