லூக்கா 20:47 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு47 அவர்கள் விதவைகளின் வீடுகளை கொள்ளையடிப்பதுடன், மற்றவர்கள் காண வேண்டும் என்பதற்காக நீண்ட மன்றாடுதலைச் செய்கின்றார்கள். இப்படிப்பட்டவர்கள் மிகக் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள்” என்றார். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்47 விதவைகளின் வீடுகளைப் பட்சித்து, பார்வைக்கு நீண்ட ஜெபம்செய்கிற வேதபண்டிதர்களைக்குறித்து எச்சரிக்கையாக இருங்கள், அவர்கள் அதிக தண்டனையை அடைவார்கள்” என்றார். See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202247 அவர்கள் விதவைகளின் வீடுகளை அபகரித்துக் கொண்டும் மற்றும் பிறர் காணவேண்டும் என்பதற்காக நெடுநேரம் மன்றாடுகிறார்கள். இப்படிப்பட்டவர்கள் மிகக்கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள்” என்றார். See the chapterபரிசுத்த பைபிள்47 ஆனால் விதவைகள் தம் வீட்டில் வைத்திருக்கிற பொருட்களையெல்லாம் கொள்ளையிடுகிறவர்கள் அவர்களே ஆவார்கள். நீண்ட பிரார்த்தனைகளைச் சொல்லித் தங்களை நல்லவர்களாகக் காட்டிக்கொள்ள முயல்கிறார்கள். தேவன் இவர்களை மிகுதியாகத் தண்டிப்பார்” என்றார். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)47 விதவைகளின் வீடுகளைப் பட்சித்து, பார்வைக்கு நீண்ட ஜெபம்பண்ணுகிற வேதபாரகரைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள், அவர்கள் அதிக ஆக்கினையை அடைவார்கள் என்றார். See the chapter |