லூக்கா 18:8 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு8 நான் உங்களுக்குச் சொல்கின்றேன், அவர்களுக்கு அவர் விரைவாகவே நீதி வழங்குவார். ஆயினும் மனுமகன் வரும்போது, பூமியிலே விசுவாசத்தைக் காண்பாரோ?” என்றார். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்8 சீக்கிரத்திலே அவர்களுக்கு நியாயஞ்செய்வார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆனாலும் மனிதகுமாரன் வரும்போது பூமியிலே விசுவாசத்தைக் காண்பாரோ என்றார். See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20228 நான் உங்களுக்குச் சொல்கிறேன், அவர்களுக்கு இறைவன் சீக்கிரமாகவே நீதி வழங்குவார். ஆனால் மானிடமகனாகிய நான் வரும்போது, பூமியிலே விசுவாசத்தைக் காண்பேனோ?” என்றார். See the chapterபரிசுத்த பைபிள்8 நான் உங்களுக்குச் சொல்கிறேன். தேவன் அவரது மக்களுக்கு வேகமாக உதவி செய்வார். ஆனால் மனிதகுமாரன் மீண்டும் வரும்போது பூமியில் அவரை நம்புகின்ற மக்களைக் காண்பாரா?” என்று கர்த்தர் கேட்டார். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)8 சீக்கிரத்திலே அவர்களுக்கு நியாயஞ்செய்வார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆகிலும் மனுஷகுமாரன் வரும்போது பூமியிலே விசுவாசத்தைக் காண்பாரோ என்றார். See the chapter |