யாக்கோபு 5:9 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு9 பிரியமானவர்களே, நியாயாதிபதி வாசற்படியிலே நிற்கின்றபடியால், நீங்கள் நியாயத்தீர்ப்புக்கு உட்படாதபடி ஒருவருக்கு விரோதமாக இன்னொருவர் முறையிடாதிருங்கள். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்9 சகோதரர்களே, நீங்கள் நியாயந்தீர்க்கப்படாதபடிக்கு ஒருவருக்கொருவர் விரோதமாக குறைசொல்லாதிருங்கள்; இதோ, நியாயாதிபதி வாசற்படியில் நிற்கிறார். See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20229 பிரியமானவர்களே, ஒருவருக்கொருவர் விரோதமாக முறுமுறுக்காதீர்கள். அப்படிச் செய்தால், நீங்கள் நியாயத்தீர்ப்புக்கு உட்படுவீர்கள். நியாயாதிபதி வாசற்படியிலே நிற்கிறாரே! See the chapterபரிசுத்த பைபிள்9 சகோதர சகோதரிகளே, உங்களை நீங்களே குற்றவாளியாக நியாயம் தீர்த்துக்கொள்ளாதபடிக்கு ஒருவரை ஒருவர் எதிர்த்து புகார்கள் செய்வதை நிறுத்துங்கள். பாருங்கள், கதவுக்கு வெளியே நீதிபதி நின்றுகொண்டிருக்கிறார். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)9 சகோதரரே, நீங்கள் நியாயந்தீர்க்கப்படாதபடிக்கு ஒருவருக்கொருவர் விரோதமாய் முறையிடாதிருங்கள்; இதோ, நியாயாதிபதி வாசற்படியில் நிற்கிறார். See the chapter |