யாக்கோபு 2:18 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு18 ஒருவன், “உங்களிடம் விசுவாசம் இருக்கின்றது, என்னிடமோ, நற்செயல்கள் இருக்கின்றன” என்று சொல்வானாகில், அதற்கு நான், “நற்செயல் இல்லாத உன் விசுவாசத்தை எனக்கு காண்பி” என்றும், “நான் என்னுடைய விசுவாசத்தை என்னுடைய நற்செயல்களின் மூலமாய் உனக்குக் காண்பிப்பேன்” என்றும் சொல்வேன். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்18 ஒருவன்: உனக்கு விசுவாசமுண்டு, எனக்கு செயல்களும் உண்டு; செயல்களில்லாமல் உன் விசுவாசத்தை எனக்குக் காண்பி, நான் என் விசுவாசத்தை என் செயல்களினாலே உனக்குக் காண்பிப்பேன் என்பானே. See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202218 ஒருவன், “உங்களிடம் விசுவாசம் இருக்கிறது; என்னிடமோ, செயல்கள் இருக்கின்றது” என்று சொல்வானாகில், அதற்கு நான், “செயலில்லாமல் உன் விசுவாசத்தை எனக்குக் காட்டு என்றும், நான் என்னுடைய விசுவாசத்தை என்னுடைய செயல்களின் மூலமாய் உனக்குக் காட்டுவேன்” என்றும் சொல்வேன். See the chapterபரிசுத்த பைபிள்18 ஒருவன், “உன்னிடம் விசுவாசம் உள்ளது. ஆனால் நான் செயல் புரிகிறேன். செயல்களற்ற உன் விசுவாசத்தை நீ காட்டு. நான் செய்கிற செயல்கள் மூலம் நான் என் விசுவாசத்தைக் காட்டுவேன்” என்று கூறலாம். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)18 ஒருவன்: உனக்கு விசுவாசமுண்டு, எனக்குக் கிரியைகளுண்டு; கிரியைகளில்லாமல் உன் விசுவாசத்தை எனக்குக் காண்பி, நான் என் விசுவாசத்தை என்கிரியைகளினாலே உனக்குக் காண்பிப்பேன் என்பானே. See the chapter |