கொலோசேயர் 1:9 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு9 எனவே உங்களைக் குறித்து கேள்விப்பட்ட நாளிலிருந்து, நாங்கள் உங்களுக்காக தவறாமல் மன்றாடி வருகின்றோம். ஆவியானவர் கொடுக்கும் ஞானத்தையும் புரிந்துகொள்ளும் ஆற்றலையும் பெற்று, இறைவனின் திட்டத்தைப் பற்றிய அறிவால் நிரப்பப்பட வேண்டும் என்றே உங்களுக்காக இறைவனிடம் கேட்கின்றோம். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்9 இதினிமித்தம், நாங்கள் அதைக் கேட்ட நாள்முதல் உங்களுக்காக இடைவிடாமல் ஜெபம் செய்கிறோம்; நீங்கள் எல்லா ஞானத்தோடும், ஆவியானவருக்குரிய விவேகத்தோடும் அவருடைய விருப்பத்தை அறிகிற அறிவினாலே நிரப்பப்படவும், See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20229 எனவே உங்களைக்குறித்து கேள்விப்பட்ட நாளிலிருந்து, நாங்கள் உங்களுக்காக மன்றாடுவதை நிறுத்தவில்லை. நீங்கள் ஆவியானவர் கொடுக்கும் ஞானத்தையும் விளக்கத்தையும் பெற்று, இறைவனின் திட்டத்தைப் பற்றிய அறிவினாலே நிரப்பப்பட வேண்டுமென்று நாங்கள் இறைவனிடம் கேட்கிறோம். See the chapterபரிசுத்த பைபிள்9 உங்களைப் பற்றிய இந்தச் செய்திகளைக் கேட்ட நாள் முதலாக உங்களுக்காக நாங்கள் தொடர்ந்து பிரார்த்தனை செய்துகொண்டிருக்கிறோம். உங்களுக்காக நாங்கள் செய்யும் பிரார்த்தனையாவது: தேவன் விரும்பும் அனைத்தையும் நீங்கள் அறிந்துகொள்ளவும், நீங்கள் பெரும் ஞானத்தையும், ஆவிக்குரியவற்றைப் பற்றிய தெளிவையும் பெறவும், See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)9 இதினிமித்தம், நாங்கள் அதைக்கேட்ட நாள்முதல் உங்களுக்காக இடைவிடாமல் ஜெபம்பண்ணுகிறோம்; நீங்கள் எல்லா ஞானத்தோடும், ஆவிக்குரிய விவேகத்தோடும் அவருடைய சித்தத்தை அறிகிற அறிவினாலே நிரப்பப்படவும், See the chapter |