Online Bible

- Advertisements -




கொலோசேயர் 1:27 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

27 இந்த மறைபொருளின் மகிமை நிறைந்த செல்வம் எப்படிப்பட்டது என்பதை யூதரல்லாதவர்களுக்கும் இறைவன் வெளிப்படுத்துகிறார். இதைத் தம்முடைய பரிசுத்தவான்களுக்குத் தெரியப்படுத்த அவர் தீர்மானித்தார். பரலோக மகிமையில் பங்குகொள்வோம் என்ற உங்கள் எதிர்பார்ப்பை, உங்களுக்குள் வாழும் கிறிஸ்துவே உறுதி செய்கின்றார்.

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

27 யூதரல்லாதவர்களுக்குள்ளே விளங்கிய இந்த இரகசியத்திலுள்ள மகிமையின் ஐசுவரியம் இன்னதென்று, தேவன் தம்முடைய பரிசுத்தவான்களுக்குத் தெரியப்படுத்தப் பிரியமானார்; கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருப்பதே அந்த இரகசியம்.

See the chapter Copy

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

27 இந்த இரகசியத்தை, யூதரல்லாதவர்களின் நடுவிலும் வெளிப்படுத்துகிறார் என்பதை தம்முடைய பரிசுத்தவான்களுக்குத் தெரியப்படுத்தவே இறைவன் தீர்மானித்தார். கிறிஸ்து உங்களுக்குள் குடியிருப்பதென்பதே அந்த இரகசியம். இதுவே கிறிஸ்துவின் மகிமையில் நாமும் பங்குகொள்வோம் என்ற எதிர்பார்ப்பைக் கொடுக்கும் மகிமையான செல்வம்.

See the chapter Copy

பரிசுத்த பைபிள்

27 தேவன், தனது மக்கள், இந்தச் செல்வமும், உன்னதமுமிக்க இரகசிய உண்மையைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று முடிவு செய்தார். அந்த உயர்ந்த உண்மை உலகிலுள்ள மக்கள் அனைவருக்கும் உரியது. கிறிஸ்துதான் அந்த உண்மை. அவர் உங்களில் இருக்கிறார். அவரே நம் மகிமைக்கான ஒரே நம்பிக்கையாக இருக்கிறார்.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

27 புறஜாதிகளுக்குள்ளே விளங்கிய இந்த இரகசியத்திலுள்ள மகிமையின் ஐசுவரியம் இன்னதென்று, தேவன் தம்முடைய பரிசுத்தவான்களுக்குத் தெரியப்படுத்தச் சித்தமானார்; கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருப்பதே அந்த இரகசியம்.

See the chapter Copy




கொலோசேயர் 1:27

Follow us:

Advertisements


Advertisements