அப்போஸ்தலர் 27:28 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு28 அவர்கள் கடலின் ஆழத்தை அளந்தபோது அது நூற்றிருபது அடி ஆழமாய் இருந்தது. சிறிது நேரத்தின் பின் அவர்கள் மீண்டும் அளந்து பார்த்தபோது அது தொண்ணூறு அடி ஆழமாய் இருந்தது. See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்28 உடனே அவர்கள் நங்கூரம்விட்டுப் பார்த்தபோது இருபது அடி ஆழம் என்று கண்டார்கள்; சிறிதுதூரம் போனபொழுது, மறுபடியும் நங்கூரம்விட்டுப் பார்த்தபோது பதினைந்து அடி ஆழம் என்று கண்டார்கள். See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202228 அவர்கள் கடலின் ஆழத்தைப் பார்த்தபோது, அது நூற்றிருபது அடி ஆழமாய் இருந்தது. சிறிது நேரத்திற்குப்பின், அவர்கள் மீண்டும் அளந்து பார்த்தபோது, அது தொண்ணூறடி ஆழமாய் இருந்தது. See the chapterபரிசுத்த பைபிள்28 அவர்கள் ஒரு கனமான பொருளை நுனியில் கட்டி கயிற்றை நீருக்குள் வீசினர். நீர் 120 அடி ஆழமானது என்று அவர்கள் கண்டனர். இன்னும் சற்று தூரம் சென்று கயிற்றை மீண்டும் வீசினர். அங்கு நீர் 90 அடி ஆழமாயிருந்தது. See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)28 உடனே அவர்கள் விழுதுவிட்டு இருபது பாகமென்று கண்டார்கள்; சற்றப்புறம் போனபொழுது, மறுபடியும் விழுதுவிட்டுப் பதினைந்து பாகமென்று கண்டார்கள். See the chapter |