அப்போஸ்தலர் 27:1 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு1 நாங்கள் கப்பல் மூலமாக இத்தாலியாவுக்குப் போக வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டபோது பவுலும் வேறு சில கைதிகளும் யூலியஸ் என்னும் நூற்றுக்குத் தளபதியினிடம் ஒப்படைக்கப்பட்டார்கள். அவன் ரோமப் பேரரசின் படைப்பிரிவைச் சேர்ந்தவன். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்1 நாங்கள் இத்தாலியா தேசத்திற்குக் கப்பல் ஏறிப்போகும்படி தீர்மானிக்கப்பட்டபோது, பவுலையும் காவலில் வைக்கப்பட்டிருந்த வேறுசிலரையும் அகுஸ்து படையைச் சேர்ந்த யூலியு என்னும் பெயர்கொண்ட நூறுபேருக்கு தலைவனிடத்தில் ஒப்புவித்தார்கள். See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20221 நாங்கள் கப்பல் ஏறி இத்தாலியாவுக்குப் போகவேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டபோது, பவுலும் வேறுசில கைதிகளும், யூலியு என்னும் நூற்றுக்குத் தலைவனிடம் ஒப்படைக்கப்பட்டார்கள். அவன் ரோமப் பேரரசின் படைப்பிரிவைச் சேர்ந்தவன். See the chapterபரிசுத்த பைபிள்1 நாங்கள் இத்தாலிக்குக் கடற்பயணம் செய்யவேண்டுமென முடிவெடுக்கப்பட்டது. ஜூலியஸ் என்னும் பெயருள்ள படை அதிகாரி பவுலையும் வேறு சில கைதிகளையும் பொறுப்பேற்றுக் கொண்டான். இராயரின் படையில் ஜூலியஸ் சேவை புரிந்துகொண்டிருந்தான். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)1 நாங்கள் இத்தாலியா தேசத்துக்குக் கப்பல் ஏறிப்போகும்படி தீர்மானிக்கப்பட்டபோது, பவுலையும் காவலில் வைக்கப்பட்டிருந்த வேறுசிலரையும் அகுஸ்து பட்டாளத்தைச் சேர்ந்த யூலியு என்னும் பேர்கொண்ட நூற்றுக்கு அதிபதியினிடத்தில் ஒப்புவித்தார்கள். See the chapter |