அப்போஸ்தலர் 23:18 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு18 அப்படியே அவன் அந்த வாலிபனை படைத்தளபதியிடம் அழைத்துக்கொண்டு சென்றான். அந்த நூற்றுக்குத் தளபதி, படைத்தளபதியிடம், “சிறைக் கைதியாய் இருக்கின்ற பவுல் என்னை ஆளனுப்பி அழைப்பித்து, இந்த வாலிபனை உங்களிடம் அழைத்துக்கொண்டு போகும்படி கேட்டுக்கொண்டான். ஏனென்றால், உங்களிடம் சொல்ல ஏதோவொன்று இவனிடம் இருக்கின்றதாம்” என்றான். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்18 அப்படியே அவன் இவனை ரோம அதிபதியினிடத்திற்குக் கூட்டிக்கொண்டுபோய்: காவலில் வைக்கப்பட்டிருக்கிற பவுல் என்னை அழைத்து, உமக்கொரு செய்தியைச் சொல்லவேண்டுமென்றிருக்கிற இந்த வாலிபனை உம்மிடத்திற்குக் கொண்டுபோகும்படி என்னைக் கேட்டுக்கொண்டான் என்றான். See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202218 அப்படியே அவன் வாலிபனை படைத்தளபதியிடம் கூட்டிக்கொண்டு போனான். அந்த நூற்றுக்குத் தலைவன் படைத்தளபதியிடம், “சிறைக்கைதியாய் இருக்கிற பவுல் என்னை ஆளனுப்பி கூப்பிட்டு, இந்த வாலிபனை உம்மிடம் கூட்டிக்கொண்டு போகும்படி என்னைக் கேட்டுக்கொண்டான். ஏனெனில், இவன் ஏதோ ஒரு காரியத்தை உம்மிடம் சொல்லவேண்டும்” என்றான். See the chapterபரிசுத்த பைபிள்18 எனவே படை அதிகாரி பவுலின் சகோதரியின் குமாரனை அதிகாரியிடம் அழைத்து வந்தான். அதிகாரி “பவுல் என்ற கைதி இவ்விளைஞனை உங்களிடம் அழைத்து செல்லுமாறு கூறினான். அவன் உங்களிடம் ஏதோ கூற வேண்டுமாம்” என்றான். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)18 அந்தப்படியே அவன் இவனைச் சேனாதிபதியினிடத்திற்குக் கூட்டிக்கொண்டுபோய்: காவலில் வைக்கப்பட்டிருக்கிற பவுல் என்னை அழைத்து, உமக்கொரு காரியத்தைச் சொல்லவேண்டுமென்றிருக்கிற இந்த வாலிபனை உம்மிடத்திற்குக் கொண்டுபோகும்படி என்னைக் கேட்டுக்கொண்டான் என்றான். See the chapter |