Online Bible

- Advertisements -




அப்போஸ்தலர் 20:9 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

9 ஐத்திகு எனப்பட்ட ஒரு வாலிபன் ஜன்னலில் உட்கார்ந்து பவுல் தொடர்ந்து பேசுவதைக் கேட்டு ஆழ்ந்த நித்திரை மயக்கத்தில் இருந்தான். அவன் முழுவதுமாய் ஆழ்ந்த நித்திரைக்குள்ளானபோது மூன்றாம் மாடியிலிருந்து கீழே விழுந்தான். விழுந்தவனைத் தூக்கியபோது, அவன் இறந்திருந்தான்.

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

9 அப்பொழுது ஐத்திகு என்னும் பெயருடைய ஒரு வாலிபன் ஜன்னலில் உட்கார்ந்திருந்தான். பவுல் தொடர்ந்து பிரசங்கம்பண்ணிக்கொண்டியிருந்ததால், அவன்‌ தூக்க மயக்கத்தினால் சாய்ந்து மூன்றாம் மாடியிலிருந்து கீழே விழுந்து, தூக்கியெடுத்தபோது மரித்திருந்தான்‌.

See the chapter Copy

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

9 ஐத்திகு எனப்பட்ட ஒரு வாலிபன் ஜன்னலில் உட்கார்ந்து, பவுல் தொடர்ந்து பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தான். அவன் ஆழ்ந்த நித்திரை மயக்கத்திலிருந்ததால், மூன்றாவது மாடியிலிருந்து கீழே விழுந்தான். அவனைத் தூக்கியபோது, அவன் இறந்திருந்தான்.

See the chapter Copy

பரிசுத்த பைபிள்

9 ஐத்தீகு என்னப்பட்ட இளைஞன் ஜன்னலில் அமர்ந்திருந்தான். பவுல் தொடர்ந்து பேசிக் கொண்டேயிருந்தான். ஐத்தீகு மிக, மிக தூக்க கலக்கமுற்றான். கடைசியில் அவன் தூங்கி, ஜன்னலிலிருந்து விழுந்தான். மூன்றாம் மாடியிலிருந்து அவன் கீழே விழுந்தான். மக்கள் சென்று அவனைத் தூக்கியபோது அவன் இறந்து விட்டிருந்தான்.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

9 அப்பொழுது ஐத்திகு என்னும் பேர்கொண்ட ஒரு வாலிபன் ஜன்னலில் உட்கார்ந்திருந்து, பவுல் நெடுநேரம் பிரசங்கம்பண்ணிக்கொண்டிருக்கையில், மிகுந்த தூக்கமடைந்து, நித்திரை மயக்கத்தினால் சாய்ந்து, மூன்றாம் மெத்தையிலிருந்து கீழே விழுந்து, மரித்தவனாய் எடுக்கப்பட்டான்.

See the chapter Copy




அப்போஸ்தலர் 20:9

Follow us:

Advertisements


Advertisements