அப்போஸ்தலர் 18:18 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு18 பவுல் கொரிந்து பட்டணத்தில் தொடர்ந்து சில காலம் தங்கியிருந்தான். பின்பு அவன் அங்குள்ள சகோதரர்களிடம் பிரியாவிடை பெற்றுக்கொண்டு கப்பல் மூலமாக சீரியாவுக்குச் சென்றான். பிரிஸ்கில்லாளும் ஆக்கில்லாவும் அவனுடனே போனார்கள். அவன் ஒரு நேர்த்திக்கடனைச் செய்திருந்தபடியால், கப்பலேறும் முன்பு கெங்கிரேயாவிலே யூத வழக்கத்தின்படி தன் தலையை மொட்டையடித்துக் கொண்டான். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்18 பவுல் அநேகநாட்கள் அங்கே தங்கியிருந்து, சகோதரர்களிடம் விடைபெற்றுக்கொண்டு, தனக்கு ஒரு பிராத்தனை இருக்கிறபடியால் கெங்கிரேயா பட்டணத்தில் தலைச்சவரம்பண்ணிக்கொண்டு, கப்பல் ஏறி சீரியா தேசத்திற்குப் போனான். பிரிஸ்கில்லாளும் ஆக்கில்லாவும் அவனோடுகூட போனார்கள். See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202218 பவுல் கொரிந்து பட்டணத்தில் தொடர்ந்து, சிலகாலம் தங்கியிருந்தான். பின்பு அவன் அங்குள்ள சகோதரர்களை விட்டு, கப்பல் மூலம் சீரியாவுக்குப் போனான். பிரிஸ்கில்லாளும், ஆக்கில்லாவும் அவனுடனேகூடச் சென்றார்கள். பவுல் ஒரு நேர்த்திக்கடனைச் செய்திருந்தபடியால், கப்பலேறும் முன்பு கெங்கிரேயாவிலே யூத வழக்கத்தின்படி தன் தலையை மொட்டையடித்துக் கொண்டான். See the chapterபரிசுத்த பைபிள்18 பவுல் சகோதரர்களுடன் பலநாட்கள் தங்கியிருந்தான். பின் அவன் அவர்களை விட்டுப் புறப்பட்டு, சிரியாவிற்குக் கடற்பயணமானான். பிரிசில்லாவும் ஆக்கில்லாவும் அவனோடிருந்தனர். கெங்கிரேயாவில் பவுல் தனது தலைமயிரைக் களைந்தான். அவன் தேவனுக்கு ஒரு வாக்குறுதி கொடுத்திருந்தான் என்பதை இது உணர்த்தியது. See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)18 பவுல் அநேகநாள் அங்கே தரித்திருந்தபின்பு, சகோதரரிடத்தில் உத்தரவு பெற்றுக்கொண்டு, தனக்கு ஒரு பிரார்த்தனை உண்டாயிருந்தபடியினால் கெங்கிரேயா பட்டணத்தில் தலைச்சவரம் பண்ணிக்கொண்டு, சீரியா தேசத்துக்குப் போகக் கப்பல் ஏறினான். பிரிஸ்கில்லாளும் ஆக்கில்லாவும் அவனுடனே கூடப்போனார்கள். See the chapter |