அப்போஸ்தலர் 17:29 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு29 “எனவே நாம் இறைவனின் பிள்ளைகளாய் இருப்பதனால், அவர் மனிதனின் சிந்தனையினாலும் திறமையினாலும் வடிவமைக்கப்பட்டதான தங்கம், வெள்ளி மற்றும் கல்லால் செய்யப்பட்ட உருவத்துக்கு ஒப்பானவர் என நாம் எண்ணக் கூடாது. See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்29 நாம் தேவனுடைய வம்சமாக இருப்பதினால், மனிதனுடைய யோசனையினாலும் சித்திரவேலையினாலும் உருவாக்கின தங்கம், வெள்ளி, கல் ஆகியவற்றிக்கு தெய்வம் ஒப்பாவார் என்று நாம் நினைக்கக்கூடாது. See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202229 “எனவே நாம் இறைவனின் பிள்ளைகளாய் இருப்பதனால், இறைவன் தங்கத்தைப் போலவோ, வெள்ளியைப் போலவோ, கல்லைப்போலவோ ஆனவர் என்று நாம் எண்ணக்கூடாது. அவர் மனிதனின் வடிவமைப்பினாலும், திறமையினாலும் செய்யப்பட்ட உருவச்சிலையை போன்றவர் அல்ல. See the chapterபரிசுத்த பைபிள்29 “நாம் தேவனின் பிள்ளைகள். மக்கள் கற்பனை செய்கிற அல்லது உண்டாக்குகிற பொருளைப் போன்றவர் தேவன் என்று நாம் நினைக்கக்கூடாது. அவர் பொன், வெள்ளி அல்லது கல்லால் செய்யப்பட்ட பொருளைப் போன்றவர் அல்ல. See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)29 நாம் தேவனுடைய சந்ததியாராயிருக்க, மனுஷருடைய சித்திரவேலையினாலும் யுக்தியினாலும் உருவாக்கின பொன், வெள்ளி, கல் இவைகளுக்கு தெய்வம் ஒப்பாயிருக்குமென்று நாம் நினைக்கலாகாது. See the chapter |