Online Bible

- Advertisements -




அப்போஸ்தலர் 15:2 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

2 இதனால் அவர்களுக்கும், பவுல், பர்னபா ஆகியோருக்கும் இடையே கடுமையான கருத்து வேறுபாடும் வாக்குவாதமும் ஏற்பட்டன. எனவே இந்தக் கேள்வியைக் குறித்து அப்போஸ்தலர்களையும் மூப்பரையும் கலந்து பேசும்படி எருசலேமுக்குப் போவதற்கென பவுலும் பர்னபாவும் நியமிக்கப்பட்டார்கள். இவர்களுடனே சில விசுவாசிகளும் நியமிக்கப்பட்டார்கள்.

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

2 அதனால் அவர்களுக்கும் பவுல் பர்னபா என்பவர்களுக்கும் வாக்குவாதம் உண்டானபோது, அந்த விஷயத்தினிமித்தம் பவுலும் பர்னபாவும் அவர்களோடு இருந்த வேறு சிலரும் எருசலேமிலிருக்கிற அப்போஸ்தலர்களிடத்திற்கும் மூப்பர்களிடத்திற்கும் போகவேண்டுமென்று தீர்மானித்தார்கள்.

See the chapter Copy

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

2 இதனால் பவுல், பர்னபா ஆகியோருக்கும் அவர்களுக்குமிடையில் கடுமையான தகராறும், வாக்குவாதமும் ஏற்பட்டன. எனவே இந்தக் கேள்வியைக்குறித்து, அப்போஸ்தலரையும் சபைத்தலைவர்களையும் கலந்து பேசும்படி, எருசலேமுக்குப் போவதற்கென பவுலும் பர்னபாவும் நியமிக்கப்பட்டார்கள். இவர்களுடனேகூட, சில விசுவாசிகளும் நியமிக்கப்பட்டார்கள்.

See the chapter Copy

பரிசுத்த பைபிள்

2 பவுலும் பர்னபாவும் இந்தப் போதனையை எதிர்த்தனர். அதைக் குறித்து இந்த மனிதரிடம் அவர்கள் விவாதித்தனர். எனவே அந்தச் சபையார் பவுலையும் பர்னபாவையும், வேறு சில மனிதர்களையும் எருசலேமுக்கு அனுப்பத் தீர்மானித்தனர். அங்கிருந்த அப்போஸ்தலரிடமும் மூப்பர்களிடமும் இதைக் குறித்து அதிகமாகப் பேசப் போகிறவர்களாக இந்த மனிதர்கள் இருந்தார்கள்.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

2 அதினாலே அவர்களுக்கும் பவுல் பர்னபா என்பவர்களுக்கும் மிகுந்த வாக்குவாதமும் தர்க்கமும் உண்டானபோது, அந்த விஷயத்தினிமித்தம் பவுலும் பர்னபாவும் அவர்களைச் சேர்ந்தவேறு சிலரும் எருசலேமிலிருக்கிற அப்போஸ்தலரிடத்திற்கும் மூப்பரிடத்திற்கும் போகவேண்டுமென்று தீர்மானித்தார்கள்.

See the chapter Copy




அப்போஸ்தலர் 15:2

Follow us:

Advertisements


Advertisements