அப்போஸ்தலர் 12:4 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு4 ஏரோது பேதுருவைக் கைது செய்து சிறையில் அடைத்து நான்கு காவற்குழுக்களால் காவல் செய்யப்படும்படி அவனை ஒப்படைத்தான். ஒவ்வொரு காவற்குழுவிலும் நான்கு இராணுவ வீரர்கள் இருந்தார்கள். பேதுருவைப் பஸ்கா பண்டிகையின் பின் வெளியே கொண்டுவந்து, பகிரங்கமாய் விசாரணை செய்வதற்கு ஏரோது எண்ணியிருந்தான். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்4 அவனைப் பிடித்து சிறைச்சாலையிலே வைத்து, பஸ்காபண்டிகைக்குப்பின்பு மக்களுக்கு முன்பாக அவனை வெளியே கொண்டுவரலாம் என்று நினைத்து, அவனைக் காவல்காக்கும்படி நான்கு போர்வீரர்கள் அடங்கிய நான்கு படைக் குழுவினரிடம் ஒப்படைத்தான். See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20224 அவன் பேதுருவைக் கைதுசெய்து, சிறையில் போட்டான். நான்கு காவற்குழுக்களால் காவல் செய்யப்படும்படி அவன் பேதுருவை ஒப்படைத்தான். ஒவ்வொரு காவற்குழுவிலும் நான்கு படைவீரர்கள் இருந்தார்கள். ஏரோது பேதுருவைப் பஸ்கா என்ற பண்டிகை முடிந்தபின்பு வெளியே கொண்டுவந்து, பகிரங்கமாய் விசாரணை செய்வதற்கு எண்ணியிருந்தான். See the chapterபரிசுத்த பைபிள்4 ஏரோது பேதுருவைக் கைது செய்து சிறையில் வைத்தான். 16 வீரர்களின் கூட்டம் பேதுருவைக் காவல் காத்தது. பஸ்கா பண்டிகை கழியுமட்டும் காத்திருப்பதற்கு ஏரோது விரும்பினான். பின்னர் மக்களின் முன்னால் பேதுருவைக் கொண்டு வர அவன் திட்டமிட்டான். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)4 அவனைப் பிடித்துச் சிறைச்சாலையிலே வைத்து, பஸ்காபண்டிகைக்குப் பின்பு ஜனங்களுக்கு முன்பாக அவனை வெளியே கொண்டுவரலாமென்று எண்ணி, அவனைக் காக்கும்படி வகுப்புக்கு நான்கு போர்ச்சேவகராக ஏற்படுத்திய நான்கு வகுப்புகளின் வசமாக ஒப்புவித்தான். See the chapter |