2 பேது 3:4 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு4 “திரும்பி வருவதாக அவர் வாக்குறுதி செய்தாரே, அது எங்கே? நம்முடைய முற்பிதாக்கள் மரணித்த காலத்திலிருந்து, படைப்பின் ஆரம்பத்தில் இருந்தது போலவேதான் எல்லாம் நடைபெறுகிறது” என்று சொல்வார்கள். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்4 அவர் திரும்பவருவார் என்று சொல்லுகிற வாக்குத்தத்தம் எங்கே? முற்பிதாக்கள் மரித்தபின்பு எல்லாக் காரியங்களும் படைப்பின் ஆரம்பத்தில் இருந்தவிதமாகவே இருக்கிறதே என்று சொல்லுவார்கள். See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20224 “அவர் திரும்பிவருவதாக வாக்குத்தத்தம் செய்தாரே, அது எங்கே? நம்முடைய முற்பிதாக்கள் இறந்துபோன காலத்திலிருந்து, படைப்பின் ஆரம்பத்தில் இருந்ததுபோலவேதான் எல்லாம் நடைபெறுகிறது” என்று சொல்வார்கள். See the chapterபரிசுத்த பைபிள்4 அம்மக்கள், “அவர், மீண்டும் வருவதாக வாக்களித்துள்ளார். அவர் எங்கே? நம் தந்தையர் மரித்திருக்கிறார்கள். ஆனால் படைப்பின் ஆரம்பத்திலிருந்து உலகம் இந்த வகையிலேயே தொடர்கிறது” என்பார்கள். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)4 அவர் வருவார் என்று சொல்லுகிற வாக்குத்தத்தம் எங்கே? பிதாக்கள் நித்திரையடைந்தபின்பு சகலமும் சிருஷ்டிப்பின்தோற்றமுதல் இருந்தவிதமாயிருக்கிறதே என்று சொல்லுவார்கள். See the chapter |