1 தெச 2:16 - இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு16 ஏனெனில் யூதரல்லாதவர்கள் இரட்சிக்கப்படும்படி நாங்கள் நற்செய்தி அறிவிப்பதை அவர்கள் தடுக்கிறார்கள். இவ்விதமாக அவர்கள் எப்போதும் பாவத்துக்கு மேல் பாவம் செய்து தங்கள் பாவத்தை பெருக்கிக்கொள்கின்றார்கள். இறுதியாக, இறைவனுடைய தண்டனைக் கோபம் அவர்கள்மீது வந்திருக்கிறது. See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்16 யூதரல்லாதவர்கள் இரட்சிக்கப்படுவதற்கு நாங்கள் அவர்களோடு பேசாதபடிக்குத் தடை செய்கிறார்கள்; இவ்விதமாக எக்காலத்திலும் தங்களுடைய பாவங்களை முழுமையாக்குகிறார்கள்; அவர்கள்மேல் கோபம் பூரணமாக வந்திருக்கிறது. See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202216 ஏனெனில், யூதரல்லாதவர்கள் இரட்சிக்கப்படும்படி, நாங்கள் அவர்களுக்கு நற்செய்தி அறிவிப்பதைத் தடைபண்ணுகிறார்கள். இவ்விதமாக, அவர்கள் எப்பொழுதும் தங்கள் பாவத்தின் அளவை நிரப்பிக் கொண்டிருக்கிறார்கள். இறுதியாக, இறைவனுடைய கோபம் அவர்கள்மேல் வரப்போகிறது. See the chapterபரிசுத்த பைபிள்16 யூதர்கள் அல்லாதவர்களுக்கு நாங்கள் போதனை செய்வதை அவர்கள் தடுக்க முயற்சிக்கிறார்கள். யூதர் அல்லாதவர்கள் இரட்சிக்கப்படும்பொருட்டு நாங்கள் அவர்களுக்குப் போதிக்கிறோம். ஆனால் அந்த யூதர்களோ தாம் ஏற்கெனவே செய்த பாவங்களோடு மேலும், மேலும் பாவம் செய்துகொண்டிருக்கிறார்கள். இப்போது தேவனுடைய கோபம் முழுமையாக அவர்கள் மீது வந்துள்ளது. See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)16 புறஜாதியார் இரட்சிக்கப்படுவதற்கு நாங்கள் அவர்களோடே பேசாதபடிக்குத் தடைபண்ணுகிறார்கள்; இவ்விதமாய் எக்காலத்திலும் தங்கள் பாவங்களை நிறைவாக்குகிறார்கள்; அவர்கள்மேல் கோபாக்கினை பூரணமாய் வந்திருக்கிறது. See the chapter |